இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

இஸ்ரோ அமைப்பு மீண்டும் ஒரு முறை இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

உலகம் முழுவதும் மாற்று எரிபொருளுக்கான தேவை தற்போது அதிகரித்து விட்டது. வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகின்றன. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளது.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் மாற்று எரிபொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதில், இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக வேகமாக பிரபலமாகி வருகின்றன. எதிர்காலத்தில் இந்தியா மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகன சந்தையாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

எனவே சமீபத்தில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் துறை நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய ஆட்டோ எக்ஸ்போ, பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெற்றது. ஆனால் முந்தைய எடிசன்களை போல், ஆட்டோ எக்ஸ்போ-2020 அவ்வளவு பிரம்மாண்டமாக இல்லை.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

ஏனெனில் நடப்பாண்டு ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ளவில்லை. இருந்தாலும் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதற்கு டாடா மேஜிக் ஹைப்ரிட் (Tata Magic Hybrid) ஒரு உதாரணம். இது அராய் மற்றும் இஸ்ரோ ஆகிய அமைப்புகளின் கூட்டணியில் உருவாக்கப்பட்டது ஆகும்.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

ஹைப்ரிட் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டமை, அராய் அமைப்பு (Automotive Research Association of India - ARAI), உருவாக்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உடன் (Indian Space Research Organisation - ISRO) இணைந்து இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை டாடா ஏஸ் (Tata Ace) பிளாட்பார்மில் பயன்படுத்தி, ஆட்டோ எக்ஸ்போவில் அராய் காட்சிப்படுத்தியது.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

ஹைப்ரிட் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்தான் இந்த வாகனத்தின் ஹைலைட். வழக்கமான பேட்டரி தொகுப்பு மற்றும் சூப்பர் கெப்பாசிட்டர்களும் (Super Capacitor) ஒருங்கிணைந்ததுதான் இந்த ஹைப்ரிட் எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம். இதில், சூப்பர் கெப்பாசிட்டர்கள் இஸ்ரோ அமைப்பால் சப்ளை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

பேட்டரி-சூப்பர் கெப்பாசிட்டர் காம்போவை பயன்படுத்தியது ஏன்? என்பதற்கு இந்த திட்டத்தின் அதிகாரிகள் வலுவான காரணங்களை கூறியுள்ளனர். பேட்டரியின் அளவை குறைக்க முடியும் மற்றும் ஆற்றலை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதுதான் முதல் காரணம். பேட்டரியின் அளவு குறைகிறது என்றால், சூப்பர் கெப்பாசிட்டரின் எடையும் குறைகிறது என்றுதான் அர்த்தம்.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

எடை குறைவதன் காரணமாக, திறன் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பேட்டரியில் இயங்க கூடிய எந்தவொரு வாகனம் என்றாலும், ரேஞ்ச்தான் அதிகம் கவனிக்க கூடிய விஷயமாக இருந்து வருகிறது. அதாவது ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால், எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

வழக்கமான எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், தோராயமாக 120 முதல் 150 கிலோ மீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும். ஆனால் டாடா மேஜிக் ஹைப்ரிட் மாடலும் கிட்டத்தட்ட அதே அளவிற்கான ரேஞ்சைதான் வழங்கும். அப்படியென்றால் இதில் என்ன சிறப்பு? என நினைக்கலாம்.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

இதில், சிறிய அளவில் சூப்பர் கெப்பாசிட்டர் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்திற்கு தேவைப்படுகின்ற மொத்த ஆற்றலில், சுமார் 40 சதவீதத்தை இது உற்பத்தி செய்து விடும். ஆற்றலுக்காக சார்ந்திருக்க வேண்டிய நிலை குறைந்து விடுவதால், பேட்டரி தொகுப்பு விலை குறைவானதாகவும், நீடித்து உழைக்க கூடியதாகவும், இலகுவானதாகவும் இருக்கும்.

இறங்கி அடித்த இஸ்ரோ... இந்தியாவை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த உலக நாடுகள்... என்னனு தெரியுமா?

ஆனால் இது புரோட்டோடைப்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதி வெர்ஷனில் சில மாற்றங்கள் இருக்கலாம். டாடா மேஜிக் ஹைப்ரிட் வாகனத்தில், 72V பவர்ட்ரெயின் உள்ளது. இது சுமார் 15kW அல்லது 20 பிஎச்பி பவரை உருவாக்க கூடியது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிலோ மீட்டர்கள். தற்போது இந்த வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Source

Most Read Articles
English summary
ARAI-ISRO Developed Tata Magic Hybrid Vehicle. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X