அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய ரக தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படா தோஸ்த் என்ற பெயரில் இந்த புதிய மாடல் சந்தைக்கு வந்துள்ளது.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்துடன் இணைந்து தோஸ்த் என்ற மினி லோடு வேன் மாடலை அசோக் லேலண்ட் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அசோக் லேலண்ட் - நிஸான் கூட்டணி பிரிந்தது.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், புதிய ரக தோஸ்த் லோடு வேன்களை உருவாக்கும் முயற்சியில் அசோக் லேலண்ட் தனியாக இறங்கியது. மேலும், புதிய கட்டமைப்புக் கொள்கையில் புதிய தோஸ்த் லோடு வேன் மாடல் உருவாக்கப்பட்டது. இந்த புதிய மாடலுக்கு 'படா தோஸ்த்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது அசோக் லேலண்ட்.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

அதாவது பெரிய தோஸ்த் என்ற பொருள்படும்படி பெயரிட்டு இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது அசோக் லேலண்ட். இந்த புதிய படா தோஸ்த் மாடலானது 2.49 டன் மற்றும் 3.49 டன் பாரம் சுமக்கும் வகைகளில், முறையே i3 மற்றும் i4 என்ற இரண்டு மாடல்களில் வந்துள்ளது.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

இதில், படா தோஸ்த் ஐ3 மாடல் எல்எக்ஸ் என்ற வேரியண்ட்டில் ரூ.7.75 லட்சத்தில் கிடைக்கும். ஐ4 மாடலின் எல்எஸ் வேரியண்ட்டிற்கு ரூ.7.79 லட்சமும், எல்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.7.99 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த வாகனத்தில் ஓட்டுனர் உள்பட 3 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்வதற்கு ஏதுவான அதிக இடவசதி, ஏசி சிஸ்டம், பவர் ஸ்டீயரிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய அசோக் லேலலண்ட் படா தோஸ்த் லோடு வேன் மாடலானது அல்ட்ரா புளூ, ஸ்டேபிள் க்ரே, காசாபிளான்கா ஒயிட் மற்றும் ஐரிஷ் க்ரீம் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய படா தோஸ்த் வாகனத்தில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பிஎஸ்6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 எச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 அசோக் லேலண்ட் 'படா' தோஸ்த் லோடு வேன் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய படா தோஸ்த் வாகனத்தின் ஐ3 மற்றும் ஐ4 வாகனங்களின் வீல் பேஸ் 2,590 மிமீ ஆக உள்ளது. ஆனால், ஐ4 மாடலானது 90 மிமீ கூடுதல் நீளத்தையும், 24 மிமீ கூடுதல் உயரத்தையும் பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, அதிக பாரத்தை ஏற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும். முன்புறத்தில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Ashok Leyland has launched a new Bada Dost Load Van In India.
Story first published: Monday, September 14, 2020, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X