ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

1960களில் இருந்து ஹாலிவுட் படங்களில் பிரபல கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்டிற்கு பிடித்த காராக உள்ள வாண்டேஜ் மற்றும் டிபிஎஸ் சூப்பர்லெக்ரா கார்களின் 007 எடிசன் மிகவும் குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பிரசித்தி பெற்ற காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

கொரோனா வைரஸினால் தற்சமயம் உலகம் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் ஆட்டோமொபைல் துறை உள்பட சினிமா துறையும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. அடுத்தடுத்து வெளியாக வேண்டிய புது படங்கள் அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

இந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகம் முழுவதிலும் அறிமுகமாக இருந்த ஜேம்ஸ் பாண்டின் புதிய படமும் தற்காலிகமாக வெளியிடப்படவில்லை. இந்த படத்தை தற்போது திரையரங்குகளுக்கு கொண்டுவருவதற்கான வேலை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட், 007 ஸ்பெஷல் எடிசன் காரை பயன்படுத்தியுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

வாண்டேஜ் மற்றும் டிபிஎஸ் சூப்பர்லெக்ரா மாடல்களின் ஸ்பெஷல் எடிசனான 007 வேரியண்ட்களை பற்றிய விபரங்களை பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான அஸ்டன் மார்டின் வெளியிட்டுள்ளது. விரைவில் வெளிவரவுள்ள ஜேம்ஸ் பாண்டின் புதிய ‘நோ டைம் டூ டை' படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் க்யூ பைஸ்போக் பிரிவின் ஆய்வாளர்களால் இந்த லிமிடேட் எடிசன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜேம்ஸ் பாண்டிற்கான அஸ்டன் மார்டின் கார்கள், ‘க்யூ கிளை' என்ற பெயரால் பிரபலமான எம்ஐ6'ன் பாகங்கள் பிரிவின் மூலமாக வழங்கப்படுகிறது.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

தோற்றத்தை பொறுத்தவரையில் வாண்டேஜ், 1987ல் தி லிவிங் டேலைட்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் கொண்டிருந்த தோற்றத்தை தான் பெரிதும் ஒத்து காணப்படுகிறது. வெளியாகியுள்ள இதன் தற்போதைய படங்கள் வாண்டேஜ் ஸ்பெஷல் எடிசன் இலண்டனில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

வழக்கமான வாண்டேஜ் வி8 காரை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த எடிசன் காரில் முரட்டுத்தனமான தோற்றம் அப்படியே தொடர்ந்துள்ளது. வெளிப்புறத்தில் மாற்றமாக நிலையான க்ரில் ஆனது சுற்றிலும் க்ரோம் உடன் பழமையான தோற்றத்திலான க்ரில்-ஆல் மாற்றப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

பின்புறத்தில் டிஃப்யூஸர் மஞ்சள் நிறத்திலும், படத்தில் கவர்ச்சிகரமாக தெரிவதற்காக மேற்கூரையில் ஸ்கை மற்றும் ஸ்கை-ராக்ஸ்-ஐயும் இந்த புதிய கார் பெற்றுள்ளது. கம்பர்லேண்ட் க்ரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனில் 007 முத்திரையானது காரின் பின்புறம், உட்புறத்தில் இருக்கைகள் மற்றும் மைய கன்சோலில் வழங்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

Y-ஸ்போக்டு சக்கரங்கள் 21 இன்ச்சில் பொருத்தப்பட்டுள்ளன. அப்படியே டிபிஎஸ் சூப்பர்லெக்ராவின் ஸ்பெஷல் எடிசனுக்கு வந்தால், வாண்டேஜ்ஜை காட்டிலும் இந்த கார் மிகவும் அச்சுறுத்தும் விதத்திலான தோற்றத்தை கொண்டுள்ளது. வெளிப்புறம் மொத்தமும் பீங்கான் க்ரே பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

இருப்பினும் சில பாகங்கள் கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காரிலும் 21 இன்ச்சில் தான் சக்கரங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், டைமண்ட்-கட் டிசைனில் உள்ளதால் வாண்டேஜில் இருந்து சக்கரங்களின் டிசைன் வேறுபடுகிறது. அதேபோல் இதிலும் 007 முத்திரை வெளிப்புறம், உட்புறம் என காரின் மொத்த பக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

மற்றப்படி என்ஜின் அமைப்புகளில் ஸ்டாக் மாடலில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிசன்களில் மாற்றம் இல்லை. வாண்டேஜில் 503 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜினும், டிபிஎஸ்-ல் 715 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடிய 5.2 லிட்டர் இரட்டை-டர்போ வி12 என்ஜினும் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அஸ்டன் மார்டின் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலைதான் எங்கயோ இருக்கு

இவை இரண்டிலும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு மேனுவல் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள விண்டேஜின் 007 எடிசன் 161,000 யூரோவை (ரூ.1.61 கோடி) விலையாக பெற்றுள்ளது. அதுவே வெறும் 25 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படவுள்ள டிபிஎஸ் சூப்பர்லெக்ராவின் 007 எடிசன் ரூ.2.8 கோடி என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Aston Martin 007 special editions unveiled.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X