ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

கொரோனா நோயாளிகளைக் கையாள்வதற்காக அதுல் ஆட்டோ நிறுவனம் மூன்று சக்கர ஆம்புலன்ஸை தயார் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

ஒற்றை வைரஸ் இது நம்மை என்ன செய்துவிட போகின்றது என நெஞ்சை நிமிர்த்துக் கொண்டிருந்த நாடுகள்கூட தற்போது சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியிருக்கின்றன. இதே நிலைதான் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவிலும் நீடித்துக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் மற்றும் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் எண்ணற்றவை.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

வைரசின் தொற்று விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இந்த வைரஸ் நூற்றுக் கணக்கில் பரவியபோதே நாட்டின் பல மாநிலங்களில் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. தற்போதே ஆயிரக் கணக்கில் வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால் கூடுதல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

இந்நிலையில், அதி முக்கியமான மருத்துவ உபகரணங்களில் ஒன்றான ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனைப் போக்கும் விதமாக அதுல் ஆட்டோ, ஆட்டோ ரிக்ஷா மாடலிலான ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவல் தொடங்கிய நாள் முதல், பயன்பாட்டில் இருக்கும் அனைத்து ஆம்புலன்ஸ்களும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுடையவர்களைக் கையாளவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

இதனால் பிற நோய்வாய் பட்டவர்களைக் கையாள்வதற்கு ஆம்புலன்ஸ்கள் இல்லாத நிலையேக் காணப்படுகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் விலைக் குறைந்த மற்றும் சிறிய ரக ஆம்புலன்ஸ்களைக் களமிறக்குவது நல்ல பயனளிக்கும் என்ற எண்ணத்தில் அதுல் ஆட்டோ ஜெம் எனும் மூன்று சக்கர ஆம்புலன்ஸ்களைக் களமிறக்கியிருக்கின்றது.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

இந்த ஆம்புலன்ஸ் தற்போது விற்பனையில் இருக்கும் பிற ஆம்புலன்ஸ்களைக் காட்டிலும் மிக மிக குறைந்த விலையைக் கொண்டதாகும். இதற்கு ஆம்புலன்ஸ் எளிமையான தோற்றம் மற்றும் குறைந்த உபகரணங்களைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதாவது, உலோகம் கூரைக்கு பதிலாக மேல் மற்றும் பக்கவாட்டு பகுதிகளுக்கு பிளாஸ்டிக் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

இவை பிளாஸ்டிக் ஸ்கிரீன்களாக இருந்தாலும், மிகவும் உறுதியானவை என கூறப்படுகின்றது. இதுமட்டுமின்றி பெரியளவில் மருத்துவ உபகரணங்களும் அதில் நிலை நிறுத்தப்படவில்லை. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்லும் வகையில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

மேலும், ஆக்ஸிஜன் போன்ற குறிப்பிட்ட சில மருத்து உபகரணங்கள் மட்டுமே அதில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. விலைக்குறைப்பு விஷயத்திற்காக பல்வேறு சிறப்பம்சம் குறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், அதன் தோற்றம் ஆம்புலன்ஸிற்கு இணையானதாக உள்ளது. முக்கியமாக, சைரன் மற்றும் ஃபிளாஷர் மின் விளக்குகள் முன்பக்கத்தில் இடம்பெற செய்யப்பட்டுள்ளன. அதுல் ஆட்டோ நிறுவனம், இந்த ஆம்புலன்ஸைதான் ராஜ்கோட் சிவில் மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கியது.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

இது சாலையில் பயணிக்க பெரியளவில் இடம் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, சிறிய சாலையில்கூட எளிதாக சென்றுவிடும். நம்ம ஊர் ஆட்டோக்களைப் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றோம். ஆகவே, அவற்றிற்கேற்பவே இந்த ஆம்புலன்ஸ் குறுகிய சாலையிலும் புகுந்து சென்றுவிடும்.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

இந்த வசதியின் காரணமாகவே அதுல் நிறுவனம் ஆட்டோ மாடலிலான ஆம்புலன்ஸ்களைத் தயாரித்திருக்கின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இம்மாதிரியான ஆம்புலன்ஸை 250 யூனிட் வரை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ராஜ்கோட் மாவட்ட நிர்வாகம் விடுத்த கோரிக்கை அடிப்படையிலேயே இந்த மலிவான ஆம்புலன்ஸ்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோ ஆம்புலன்ஸ்... கொரோனா நோயாளிகளுக்கு உதவ மலிவு விலையில் தயாராகும் ஆட்டோக்கள்...

தற்போது, ​​ராஜ்கோட் சிவில் மருத்துவமனையில் வழக்கமான ஆம்புலன்ஸ்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளன. அவற்றுடன் புதிய ஆட்டோ ரிக்ஷா ஆம்புலன்ஸ்களும் உயிர்காக்கும் பணியில் இணைய இருக்கின்றன. இவை நகரத்தில் வரும் கோவிட்-19 வழக்குகளை கையாள மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இதுபோன்ற மேலும் சில ஆம்புலன்ஸ்களை வாங்க ராஜ்கோட் மாவட்ட நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Atul Auto Specially Designed Three-Wheeler Ambulance For Covid-19. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X