ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் சொகுசு காரின் அறிமுக தேதி விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

சொகுசு கார் மார்க்கெட்டில் ஆடி ஏ4 சொகுசு கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. டிசைனில் கலக்கலான இந்த காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், எஞ்சின் தேர்விலும் சில மாற்றங்களுடன் ஆடி ஏ4 சொகுசு செடான் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

இந்த காருக்கு சில நாட்களுக்கு முன்பு முன்பதிவு துவங்கியது. ரூ.2 லட்சத்தை செலுத்தி ஆடி டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிலையில், வரும் ஜனவரி 5ந் தேதி இந்த புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

ஆடி ஏ4 காரின் டிசைனில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பானட் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக தெரிகிறது.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

இந்த காரின் உட்புறத்திலும் சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாடலில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பேங் அண்ட் ஓலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் ஆகியவையும் முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஆடி ஏ4 காரல் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவிர்த்து, 12V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்திலும் கிடைக்கும்.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஆடி ஏ4 கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் எட்டும் திறன் வாய்ந்தது. மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, டாப் வியூ கேமரா சிஸ்டம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக தேதி வெளியானது!

புதிய ஆடி ஏ4 செடான் கார் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் விரைவில் வரும் வால்வோ எஸ்60 சொகுசு செடான் கார்களுக்கு போட்டியாக இருக்கும். அவுரங்காபாத்தில் உள்ள ஆடி கார் ஆலையில் இந்த காரின் உற்பத்தி ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டதால், விற்பனைக்கு வந்தவுடன் டெலிவிரிப் பணிகளும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
German luxury carmaker Audi has revealed A4 facelift launch will happen in India on 5th Jan 2021.
Story first published: Saturday, December 26, 2020, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X