புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

இந்தியாவில் ஆடி நிறுவனம் ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரின் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமாகவுள்ள இந்த ஆடி காரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

மற்ற சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரின் தயாரிப்பு பணிகள் அவுரங்காபாத்தில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் துவங்கப்பட்டுள்ளது.

புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

அறிமுகத்திற்கு பிறகு ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ், ஜாகுவார் எக்ஸ்இ, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள வால்வோ எஸ்60 கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

இந்தியாவில் எஸ்யூவி கார்களின் மூலம் ஆடி நிறுவனம் புதிய இன்னிங்க்ஸை ஆடி வருகிறது. இருந்தப்போதிலும், ஏ4 ஃபேஸ்லிஃப்ட் செடான் காரை விற்பனைக்கு கொண்டுவர ஆடி திட்டமிட்டுள்ளது. இது நிறுவனத்திற்கு புதிய துவக்கத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

கடந்த 2020 மே மாதத்தில் உலகளவில் அப்கிரேட்-ஐ பெற்றிருந்த ஆடி ஏ4 ஃபேஸ்லிஃப்ட் கார் மொத்த தோற்றத்தில் பெரிய உருவம் கொண்ட ஆடி ஏ6 செடான் காரை ஒத்திருக்கிறது. இந்த அப்கிரேட்களின் ஒரு பகுதியாக புதிய 10.1 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆடியின் எம்எம்ஐ உபயோகிப்பாளர் இண்டர்ஃபேஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

அதேபோல் வெளிப்புறத்திலும் புதிய எண்கோண ஒற்றை-ஃப்ரேம் க்ரில், புதிய வடிவில் எல்இடி டிஆர்எல்கள் உடன் திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள், பின்பக்கத்தில் ரீடிசைனில் எல்இடி டெயில்லைட்கள் போன்றவையை ஏற்றுள்ள ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரை ஆடி நிறுவனம் பெட்ரோல் வெர்சனில் கொண்டுவரவுள்ளது.

புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

இந்த வகையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் செடான் காரில் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் ஐரோப்பிய வெர்சனை போல் சிறந்த முடுக்கம், எரிபொருள் திறன் மற்றும் ஒட்டுமொத்த சுத்திகரிப்பிற்காக 12-வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படலாம். அதேபோல் இந்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருக்கலாம்.

புதிய ஏ4 செடான் காரின் தயாரிப்பை இந்தியாவில் துவங்கியது ஆடி!! அறிமுகம் அடுத்த ஆண்டில்...

2021 துவக்கத்தில் இருந்து விற்பனையை துவங்கவுள்ள ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் இன்னும் சில நாட்களில் துவக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆடி ஏ4-இன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை மற்ற சொகுசு செடான் கார்களுக்கு இணையாக ரூ.40 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi Begins Production Of A4 Facelift In India; Launch In Early 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X