டாக்டர்களை போற்றும் விதமாக ஆடி கார் நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

கொரோனா தடுப்புப் பணியில் முன்கள போராளிகளாக செயல்பட்டு வரும் மருத்துவர்களை போற்றும் விதத்தில், ஸ்பெஷல் சர்வீஸ் திட்டத்தை ஆடி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

கொரோனா பிரச்னை விஸ்வரூபமெடுத்து வருகிறது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தருணத்தில் கொரோனாவை தடுப்பதிலும், பாதித்தவர்களுக்கு மருத்துவம் செய்வதிலும் முன்கள போராளிகளாக டாக்டர்கள் செயலாற்றி வருகின்றனர்.

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, இந்த உன்னத பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அரசும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

MOST READ: நடுரோட்டில் தீப்பிடித்த கார்... போலீஸாரால் மயிரிழையில் காப்பாற்றப்பட்ட கல்யாண மாப்பிள்ளை

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

அந்த வகையில், கார் நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு டாக்டர்களின் பணியை போற்றும் விதத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. நாட்டின் முன்னணி சொகுசு கார் நிறுவனமாக விளங்கும் ஆடி தனது வாடிக்கையாளர்களாக உள்ள டாக்டர்களுக்கு சிறப்பு சர்வீஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

கட்டணமில்லாமல் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ள இந்த சிறப்பு சர்வீஸ் திட்டத்தின்படி, டாக்டர்களின் ஆடி கார்களை கழுவி சுத்தப்படுத்தி தருவதுடன், வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கிருமி நீக்க பணிகளும் செய்து தரப்பட உள்ளது. பொது பரிசோதனையும் செய்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

MOST READ: அப்படியே பாதியாக குறைந்த அதிசயம்! பெட்ரோல், டீசல் பத்தி இப்படி ஒரு செய்தி மீண்டும் வருவது கஷ்டம்தான்

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

இதுகுறித்து ஆடி கார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில்," இந்த எதிர்பாராத தருணத்தில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சர்வீஸ் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள ஆடி கார் டீலர்களில் இந்த சிறப்பு சர்வீஸ் திட்டங்களை முன்கள போராளிகளாக உள்ள டாக்டர்கள் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், பணியாளர்கள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.

MOST READ: 'அந்த' பட்டியலில் இணைந்த நிஸான் டெரானோ... ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

மேலும், ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் காலாவதியாகும் வாரண்டி மற்றும் சர்வீஸ்களுக்கு கூடுதல் கால அவகாசமும் வழங்கப்படும். இந்த தருணத்தில் ஒன்றிலிருந்து இதிலிருந்து வெளியே வருவோம்," என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர்களின் கார்களுக்கு ஸ்பெஷல் சர்வீஸ் திட்டம்: ஆடி அறிவிப்பு

ஆடி கார் நிறுவனத்தின் அறிவிப்பு, அதன் வாடிக்கையாளர்களாக உள்ள டாக்டர்களுக்கு நிச்சயம் நன்மை தரும் விஷயமாகவே பார்க்கலாம். இதுபோன்ற அறிவிப்புகள் டாக்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi India has announced its 'Salute to COVID-19 Warriors' initiative. Through this program, the frontline workers defending the country against the COVID-19 pandemic can avail complimentary disinfection & cleaning of interiors, exteriors, and can avail a general check-up of their Audi cars. Also, courtesy pick-up and drop services have also been included by the company.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more