க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

க்யூட்டான ஆடி க்யூ2 கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள தேதி விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.

க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

இந்தியாவில் ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு கூடி வருகிறது. இந்த மார்க்கெட்டில் ஆடி கார் நிறுவனத்தின் க்யூ வரிசை எஸ்யூவி கார்கள் இந்திய பணக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, இந்த ரகத்தில் சொகுசு கார் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

தற்போது ஆடி கார் நிறுவனம் க்யூ3 என்ற ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவியை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை கவரவும், கூடுதலாக க்யூ-2 என்ற புதிய சொகுசு எஸ்யூவி மாடலை க்யூ3 எஸ்யூவிக்கு வலுசேர்க்கும் விதத்தில் கொண்டு வருகிறது.

க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

தற்போது விற்பனையில் உள்ள க்யூ-3 எஸ்யூவியை விட குறைவான ரகத்தில் நிலை நிறுத்தப்பட்டாலும், விலை கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த புதிய க்யூ-2 எஸ்யூவி இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளதே விலையில் அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

இந்த சூழலில், வரும் 16ந் தேதி புதிய ஆடி க்யூ2 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. இது இந்த காரை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

ஆடி க்யூ2 எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள்,டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

ஆடி க்யூ2 எஸ்யூவியில் 190 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் இடம்பெறுகிறது. இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது.

க்யூட்டான ஆடி க்யூ-2... சினிமா நட்சத்திரங்களின் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது!

இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதால் ரூ.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஆடி க்யூ3 எஸ்யூவிக்கு இணையான விலையிலேயே எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has revealed that the company will launch all new Q2 SUV in India on 16th October, 2020.
Story first published: Thursday, October 8, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X