ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

புத்தம் புதிய ஆடி க்யூ2 எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடி காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் எஸ்யூவி கார்களுக்கான தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனை மனதில் வைத்தே ஆடி இந்தியா நிறுவனம் புதிய க்யூ2 காரை நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

காம்பெக்ட் எஸ்யூவி காரான க்யூ2 தயாரிப்பு நிறுவனத்தின் வரிசையில் ஆடி க்யூ3-க்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது க்யூ2-வின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகும். ஆடி க்யூ2 ஃபேஸ்லிஃப்ட் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

ஆடி க்யூ2 எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.34.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதன் டெக்னாலஜி வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.48.89 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

Audi Q2 Price
Standard ₹34,99,000
Premium ₹40,89,000
Premium Plus I ₹44,64,000
Premium Plus II ₹45,14,000
Technology ₹48,89,000

இந்த காரின் அறிமுக சலுகையாக, ‘மன அமைதி' என்ற பெயரில் சலுகைகளை ஆடி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

இதில் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் 5-வருட விரிவான சேசை தொகுப்பு மற்றும் சாலையோர உதவி வசதிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றின் மூலம் புதிய ஆடி க்யூ2 காரை வாடிக்கையாளர்கள் எளிமையாக சொந்தமாக்கி கொள்ளலாம். ஆடி க்யூ8, ஆடி ஏ8எல், ஆடி ஆர்எஸ்7 மற்றும் ஆடி ஆர்எஸ்க்யூ8 கார்களை தொடர்ந்து ஜெர்மனை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி அறிமுகம் செய்யும் 5வது கார் மாடல் க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி ஆகும்.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

அதிக செயல்திறன் கொண்ட கார்களை அறிமுகப்படுத்தி வந்த ஆடி இந்தியா நிறுவனம் ஒருவழியாக காம்பெக்ட் எஸ்யூவி பிரிவிற்கு வந்துள்ளது. புதிய க்யூ2 நிச்சயம் ஆடி நிறுவனத்திற்கு கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற்று கொடுக்கும் காராக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் சிபியூ முறையில் புதிய ஆடி க்யூ2 இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆடியின் ‘க்யூ' வரிசையில் இடம்பெற்றுள்ள புதிய க்யூ2 எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். காரின் உட்புற கேபினில் ஆச்சிரியப்படுத்தும் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

இவற்றில் விர்டியுவல் காக்பிட், எம்எம்ஐ இண்டர்ஃபேஸ், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என்ற வடிவத்தில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, வயர் இல்லா மொபைல்போன் சார்ஜர், சன்ரூஃப் மற்றும் 180 வாட் 10-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஆடியின் மலிவான கார்... 2020 க்யூ2 காம்பெக்ட் எஸ்யூவி... வெறும் ரூ.35 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்

அதேநேரம் மற்ற ஆடி கார்களுடன் ஒப்பிடும்போது தொடுத்திரை சிஸ்டம், பின் பயணிகளுக்கும் ஏசி மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகளை புதிய க்யூ2 இழந்துள்ளது. இதனால்தான் இதன் எக்ஸ்ஷோரூம் விலை நாம் எதிர்பார்த்ததை போலவே மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi Q2 Launched In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X