புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஆடி க்யூ5 சொகுசு எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

நடுத்தர வகை சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் ஆடி க்யூ5 எஸ்யூவிக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. சினிமா நட்சத்திரங்களின் விருப்பமான தேர்வாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் ஆடி க்யூ5 எஸ்யூவி மேம்படுத்தப்பட்டுள்ளது.

 புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இது இடைக்கால புதுப்பிப்புப் பணிகள் கொண்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வரும் நிலையில், முகப்பில்தான் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள் புதிய விஷயங்களாக இடம்பெற்றுள்ளன. 18 முதல் 20 அங்குல சக்கரங்கள் தேர்வுக்கு வழங்கப்படும். ஆனால், ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை.

 புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சிம் கார்டு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியை பெறுவதுடன், பிரத்யேக செயலி மூலமாக ஸ்மார்ட்ஃபோன் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி இர்குகம். அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் வசதியும் இடம்பெறுகிறது.

 புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் உள்ளன. காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை கட்டுப்படுத்த முடியும்.

 புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 261 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பிளக் இன் ஹைப்ரிட் மாடலிலும் வர இருக்கிறது. இந்த மாடலானது 363 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

 புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

அடுத்து 3.0 லிட்டர் வி6 எஞ்சின் அதிகபட்சமாக 349 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்தியாவில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 புதிய ஆடி க்யூ5 ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும். ரூ.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has unveiled new Q5 facelift SUV model and it is expected to arrive Indian shores by next year.
Story first published: Monday, June 29, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X