ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

பண்டிகை காலத்தை கொண்டாடும் வகையில், ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வேரியண்ட்டிற்கு இன்று முதல் முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஆடி கார் நிறுவனத்தின் க்யூ வரிசை சொகுசு எஸ்யூவி கார்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனால், க்யூ வரிசையில் வெவ்வேறு பட்ஜெட்டுகள் மற்றும் அம்சங்கள் கொண்ட பல மாடல்களை ஆடி வரிசை கட்டி வைத்துள்ளது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த நிலையில், க்யூ வரிசையில் மிகவும் உயரிய வகை மாடலாக க்யூ8 எஸ்யூவி விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த மாடலுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மேலும், அண்மையில் க்யூ8 எஸ்யூவியின் செயல்திறன் மிக்க ஆர்எஸ் க்யூ8 எஸ்யூவியும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வை அளிக்கும் விதத்தில், விலை குறைவான புதிய ஆடி க்யூ8 எஸ்யூவி இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஆடி க்யூ8 செலிபரேஷன் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் வந்துள்ளது. ஆடி க்யூ8 எஸ்யூவியின் ஸ்டான்டர்டு மாடல் ரூ.1.33 கோடி விலையிலும், ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவி ரூ.2.07 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், ஆடி க்யூ8 செலிபரேஷன் மாடலுக்கு ரூ.98.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

அதாவது, ஸ்டான்டர்டு மாடலைவிட ரூ.34 லட்சம் குறைவான விலையில் இந்த புதிய மாடலை அதிரடியாக களமிறக்கி உள்ளது ஆடி கார் நிறுவனம். இந்த புதிய மாடலில் எச்டி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், டைனமிக் லைட்டுகள், தொடு உணர் கட்டுப்பாட்டு வசதியுடன் நேவிகேஷன் வசதி, ஆடி வெர்ச்சுவல் காக்பிட், பனோரமிக் சன்ரூஃப், ஆடி ப்ரீ சென்ஸ் தொழில்நுட்பம், வயர்லெஸ் போன் சார்ஜர் ஆகியவை உள்ளன.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த காரில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ட்ரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கான அம்சங்களும் உள்ளன. ஆடி க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய ஆடி க்யூ8 செலிபரேஷன் எடிசன் மாடலில் 8 ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன. மொத்தத்தில் மிகச் சிறந்த மதிப்பை வழங்கும் வகையில் இந்தியர்களின் பண்டிகை கொண்டாட்டத்தை சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.34 லட்சம் குறைவான விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய ஆடி க்யூ8 செலிபரேஷன் எடிசன் அறிமுகம் குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகையில்,"வழக்கமாக பண்டிகை காலத்தில் வாகன விற்பனை மிகச் சிறப்பாக இருக்கும். இந்த சமயத்தில் ஆடி க்யூ8 குடும்பத்தில் இந்த புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த புதிய மாடல் க்யூ8 வாடிக்கையாளர் வட்டம் மேலும் அதிகரிக்கும். அனைத்து விதத்திலும் இந்த புதிய க்யூ8 செலிபரேஷன் மாடல் நிறைவையும், மதிப்பையும் தரும்," என்று தெரிவித்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi Q8 Celebration Variant launched In India and priced at Rs 98.98 lakh (Ex-shworoom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X