100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

ஆடி இந்தியா நிறுவனம் தனது புதிய ஸ்போர்ட்பேக் ரக காரான ஆர்எஸ்7-ன் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

ஆடி நிறுவனம் புதிய ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் காரை வருகிற ஜூலை 16ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனால் இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

இதற்கிடையில் தான் தற்போது இந்த காரின் புதிய டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டீசர், ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றுள்ள ஆர்எஸ்7 கார் 0-விலிருந்து 100 kmph வேகத்தை எட்ட வெறும் 3.6 வினாடிகள் மட்டுமே தேவைப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

விற்பனையில் உள்ள ஏ7 மாடலின் அதிக செயல்திறன் கொண்ட வெர்சனாக வெளிவரும் இந்த ஸ்போர்ட்பேக் காரில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின், 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 591 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

இந்த ஹைப்ரீட் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டமும் இந்த காரில் உள்ளது. ஏ7 செடான் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதில் இருந்து தான் இந்த பெரும்பான்மையான அம்சங்களை பெற்றுள்ளது.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

இதில் கவனிக்கத்தக்க அம்சங்களாக கருப்பு நிறத்தில் தேன்கூடு வடிவிலான பெரிய க்ரில், பெரிய ஏர் டேம்கள், எல்இடி டெயில்லைட் க்ளஸ்ட்டர், 21 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை உள்ளன. பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள டிஃப்யூஸர் ஆனது இரட்டை ஓவல்-வடிவிலான எக்ஸாஸ்ட் உடன் உள்ளது.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

இத்தகையாக சிறப்பம்சங்களை பெற்ற இந்த புதிய ஆடி காரின் விலை ரூ.1.5 கோடியில் இந்தியாவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆடி ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் மாடலின் இரண்டாம் தலைமுறை காரான இதனை வாடிக்கையாளர்கள் இணையத்தளம் அல்லது டீலர்ஷிப்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம்.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

இதன் மூலமாக வருங்கால வாடிக்கையாளர்கள் சுத்திகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பையும், இந்த கார் நடைமுறைக்கு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆடி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தினையும் தொடர்பு கொள்ளலாம். இதில் ஆடியின் இணையத்தள பக்கம் காரின் 360 கோண தோற்றத்தை நம் கண்ணிற்கு விருந்தாக்குகிறது.

100 kmph வேகத்தை அடைய வெறும் 3.6 வினாடிகளே போதும்.. இந்திய சாலைகளை பதம் பார்க்க வருகிறது ஆடி ஆர்எஸ்7

மேலும் இதன் மூலமாக இந்த ஸ்போர்ட்பேக் காரின் வெளிப்புற & உட்புறத்தின் தனித்தன்மை மற்றும் என்னென்ன கஸ்டமைஸ்ட் மாற்றங்களை காரில் கொண்டுவரலாம் என்பது குறித்த விபரங்களையும் கூறுகிறது. இந்த முன்பதிவிற்கான முன்தொகையாக 10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதால் அறிமுகத்திற்கு பிறகு விரைவாக இதன் டெலிவிரிகளை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi Releases Second Teaser For RS7 Sportback Ahead Of 16 July Launch
Story first published: Tuesday, July 14, 2020, 1:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X