செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஆடி கார் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஆடி கார் நிறுவனம் RS என்ற பெயரில் அதிசெயல்திறன் மிக்க கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தனது சாதாரண சொகுசு கார் மாடல்களின் அடிப்படையில் அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீகளுடன் தனித்துவமானதாக மாற்றம் செய்யப்பட்டு இவை விற்பனையில் வைக்கப்பட்டுள்ளன.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த நிலையில், தனது அதிசெயல்திறன் மிக்க ஆர்எஸ் பிராண்டு கார்களை இந்தியாவில் தொடர்ந்து களமிறக்க ஆடி முடிவு செய்தது. அதன்படி, கடந்த மாதம் ஆர்எஸ் பிராண்டில் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது ஆடி.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த நிலையில், ஆர்எஸ் பிராண்டில் அடுத்து க்யூ-8 எஸ்யூவியின் அடிப்படையிலான ஆர்எஸ் க்யூ-8 சூப்பர் எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய சூப்பர் எஸ்யூவியை வரும் 27ந் தேதி முறைப்படி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது ஆடி கார் நிறுவனம்.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஆடி ஆர்எஸ் க்யூ8 எஸ்யூவியானது நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கில் அதிவேகத்தில் கடந்த உலகின் அதிசெயல்திறன் மிக்க தயாரிப்பு நிலை எஸ்யூவி கார் மாடலாக சாதித்துள்ளது. நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கை 7 நிமிடங்கள் 42.2 வினாடிகளில் ஒரு சுற்றை கடந்து சாதனை படைத்துள்ளது.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த அதிசெயல்திறன் மிக்க எஸ்யூவியில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி கடத்தப்படுகிறது.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளிலும், 200 கிமீ வேகத்தை 13.7 வினாடிகளிலும் எட்டிவிடும். மணிக்கு 305 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த காரில் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் உள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக பெறப்படும் ஆற்றல் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, தேவைப்படும்போது எஞ்சினுக்கு கூடுதல் சக்தியை வழங்கும். மேலும், 40 வினாடிகளுக்கு வெறும் மின் மோட்டார் தொழில்நுட்பத்தில் இயங்கும் வசதியும் உள்ளது. இந்த மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக ஒவ்வொரு 100 கிமீ தூர பயணத்திற்கும் 2.8 லிட்டர் எரிபொருள் மிச்சப்படுத்தப்படும்.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதமாக சிங்கிள் பிரேம் க்ரில் அமைப்பு, புதிய பம்பர் அமைப்பு, டிஃபியூசர் மற்றும் ஆர்எஸ் மாடல்களுக்கு உரிய ஸ்பாய்லர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 22 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. விருப்பத்தின்பேரில் 23 அங்குல அலாய் வீல்களும் தேர்வுக்கு உள்ளது.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

பக்கெட் வகை இருக்கை அமைப்பு, விசேஷ ஸ்டீயரிங் வீல், வெர்ச்சுவல் காக்பிட், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதுதவிர்த்து, ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

செம பவர்ஃபுல் ஆடி ஆர்எஸ் க்யூ8 சூப்பர் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம் வெளியானது!

லம்போர்கினி உரூஸ் உள்ளிட்ட சூப்பர் எஸ்யூவி மாடல்களுடன் புதிய ஆடி ஆர்எஸ் க்யூ8 எஸ்யூவி போட்டி போடும். ரூ.2 கோடி விலையில் புதிய ஆடி ஆர்எஸ் க்யூ8 எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.15 லட்சம் முன்பணத்துடன் ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
The German auto manufacturer, Audi will be launching the RS Q8 performance SUV on August 27, 2020, in the Indian market. The company is accepting pre-launching bookings for a token amount of Rs 15 lakh.
Story first published: Friday, August 21, 2020, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X