ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

ஆடி ஆர்எஸ் க்யூ8 காரின் இந்திய அறிமுக குறித்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

ஆடி இந்தியா நிறுவனம் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறுவனத்தின் அடையாளமான ஆர்எஸ் க்யூ8-ன் டீசர் வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இந்த ஆடி கார் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

ஏற்கனவே டீலர்ஷிப்களை சென்றடைந்து வருகின்ற புதிய ஆர்எஸ் க்யூ8 கார்களுக்கான முன்பதிவுகள் இந்தியா முழுவதுமுள்ள ஆடி ஷோரூம்களில் ரூ.15 லட்சம் என்ற டோக்கன் தொகையுடன் நடைபெற்று வருகிறது. ஷோரூம்களுக்கு வந்தடைந்து கொண்டிருப்பதை உறுதி செய்யும் விதமாக ஜொலிக்கும் நீல நிறத்தில் டீலர்ஷிப் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஆர்எஸ் க்யூ8 காரின் போட்டோ என்று வெளியாகியுள்ளது.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

இத்தகைய புதிய பெயிண்ட் அமைப்பினால் மிக விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த ஆடி காரில் ஏகப்பட்ட நிறத்தேர்வுகளை எதிர்பார்க்கலாம். ஆடி இந்தியா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் ஆர்எஸ் க்யூ8 கார் மாடலின் பெயரை ஏற்கனவே கொண்டுவந்துவிட்டதால் தற்போது வெளிவந்துள்ள இதன் இந்திய அறிமுகம் குறித்த தகவல் நம்பும்படியாகவே உள்ளது.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

செயல்திறன்மிக்க கார்களை கொண்ட ஆர்எஸ் வரிசையில் இடம்பெறவுள்ள இந்த எஸ்யூவி கூபே காரில் 4.0 லிட்டர், இரட்டை-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 600 பிஎச்பி பவரையும், சுமார் 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் உதவியுடன் என்ஜின் இந்த ஆற்றல்கள், ஆடியின் குவாட்ரோ அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் வாயிலாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்படும். வழக்கமான ஆடி க்யூ8 காருடன் ஒப்பிடும் புதிய ஆர்எஸ் க்யூ8 காரில் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் உள்பட பெரும்பான்மையான பாகங்கள் அப்கிரேட்டை ஏற்றுள்ளன.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

இதனால் க்யூ8-ஐ காட்டிலும் அதிகளவில் ஸ்போர்ட்டியான பண்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் புதிய ஆர்எஸ் க்யூ8 கார் ஆனது 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டிவிடும். காரின் அதிகப்பட்சமாக வேகம் 250kmph என இருக்கையில், கூடுதல் தேர்வான டைனாமிக் தொகுப்புடன் இதன் வேகத்தை 304kmph வரையில் கூட கொண்டு செல்ல முடியும்.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

தொழிற்நுட்ப அப்கிரேட்கள் மட்டுமின்றி தோற்றத்திலும் வழக்கமான ஆடி க்யூ8 உடன் ஒப்பிடுகையில் சில மாற்றங்களை இந்த புதிய மாடல் கொண்டிருக்கிறது. புதிய சிங்கிள் ஃப்ரேம் க்ரில், பெரிய அளவிலான முன்பக்க காற்று ஏற்பான், கஸ்டம் பக்கவாட்டு சில்கள், ஆர்எஸ் மேற்கூரை ஸ்பாய்லர் மற்றும் பின்பக்க டிஃப்யூஸர் உள்ளிட்டவை இந்த மாற்றங்களில் அடங்குகின்றன.

ஷோரூம்களில் ஆடியின் புதிய ஆர்எஸ் க்யூ8.... வருகிற ஆகஸ்ட் 27 இந்தியாவில் அறிமுகம்...

22 இன்ச்சில் அலாய் சக்கரங்களை நிலையாக பெற்றுவரும் இந்த ஆடி காருக்கு 23 இன்ச் அலாய் சக்கரங்களும் தேர்வாக வழங்கப்படும். க்யூ8 காரின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.34 கோடியாக உள்ளதால் புதிய ஆர்எஸ் க்யூ8-ஐ ரூ.2 கோடி என்ற விலையில் எதிர்பார்க்கலாம். லம்போர்கினி உருஸ், போர்ஷே கேயெனே டர்போ கூபே உள்ளிட்டவை விற்பனையில் இதற்கு போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi RS Q8 Reaches Dealerships, Launch Later This Month
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X