இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உருஸ்!

இந்தியாவில் ஆடி க்யூ8 சொகுசு எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

ஆடி கார் நிறுவனத்தின் க்யூ (Q) குடும்ப வரிசையில் வரிசையில் விற்பனை செய்யப்படும் சொகுசு ரக எஸ்யூவி மாடல்கள் உலக அளவில் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது. இந்த வரிசையில், மிகவும் தனித்துவமும், உயர் ரகத்தில் க்யூ-8 என்ற க்ராஸ்ஓவர் ரக சொகுசு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

வடிவமைப்பு, வசதிகள், தொழில்நுட்பம் என அனைத்து விதத்திலும் கார் பிரியர்களை இந்த கார் ஈர்த்தது. இந் நிலையில், ஆடி க்யூ8 காரின் அதிக சிறப்பம்சங்கள், செயல்திறன் மிக்க ஆர்எஸ் க்யூ8 மாடலையும் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஆடி கார் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

MOST READ: கார்களை ஹோம் டெலிவிரி தரும் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்!

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஆடி கார் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பல்பீர் சிங் தில்லான் கார் அண்ட் பைக் தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

ஆடி ஆர்எஸ் க்யூ8 கார் செயல்திறனில் மிகவும் சிறப்பான மாடலாக இந்திய பெர்ஃபார்மென்ஸ் கார் பிரியர்களை கவரும் வகையில் இருக்கும். இந்த காரில் 4.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

MOST READ: சிங்கிள்-சார்ஜில் 600கிமீ... 2021ல் வருகிறது ரெனால்ட்டி புதிய எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர்...

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண ஆடி க்யூ8 எஸ்யூவியில் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

புதிய ஆடி ஆர்எஸ் க்யூ8 கார் 0 - 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்கும். டைனமிக் பேக்கேஜை தேர்வு செய்தால், இந்த கார் மணிக்கு 305 கிமீ வேகம் வரை தொடும் வல்லமையை பெற்றுவிடும்.

MOST READ: "கடுமையான வறுமை" -கை கொடுக்கும் ஊபர்... எதிர்பார்க்காத உதவியால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

ஆடி ஆர்எஸ் க்யூ8 கார் போன்றே, ஆர்எஸ் க்யூ8 காரும் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. க்யூ8 எஸ்யூவியை விட விலை அதிகம் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும். அதிக செயல்திறனை விரும்பும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த தேர்வை வழங்கும் விதத்தில் ஆடி இந்த மாடலை களமிறக்க திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

ஆடி க்யூ8 கார் ரூ.1.33 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஆடி ஆர்எஸ் க்யூ8 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், ரூ.1.75 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: அனாதையாக கிடக்கும் 35 ஆயிரம் கோடி... உள்ளே இருப்பது என்னனு தெரியுமா? லாரி டிரைவர்கள் திக்... திக்...

இந்தியாவில் ஆர்எஸ் க்யூ8 காரை களமிறக்க ஆடி திட்டம்.. உர்ர் என முகம் மாறிய லம்போ உரஸ்!

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இறக்குமதி செய்து கொடுக்கப்படும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi India recently launched its flagship SUV, the Q8 in the market. The Audi Q8 rivals the likes of the Mercedes-Benz GLS and the BMW X7 in the country and has received an excellent response in the segment as well.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X