வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

ஜெர்மனை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி, அதன் இரண்டாம் தலைமுறை ஏ7 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக அனைத்து விதங்களிலும் தயாராகி வரும் நிலையில் இந்நிறுவனத்தில் இருந்து ஆர்எஸ்7 மாடல் வரும் ஜூலை மாதத்தில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆடி நிறுவனம் அதன் சர்வதேச இணைத்தள பக்கத்தில் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் ஸ்போர்ட்ஸ் ரக காரான ஆர்எஸ்7 மாடலின் இரண்டாம் தலைமுறை காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் என்ஜினை பொருத்தியுள்ளது.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

48 வோல்ட் மில்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 600 பிஎச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

அதுவே முதல் தலைமுறை ஆர்எஸ்7 மாடலில் வழங்கப்பட்டு வருகின்ற என்ஜின் 560 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் ஆனது 8-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

இவற்றுடன் உள்ள ஆடியின் குவாட்ரோ ஆல் வீல் ட்ரைவ் சிஸ்டம் என்ஜினின் ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும். இந்நிறுவனம் ஆர்எஸ்7 மாடலை 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை 3.6 வினாடிகளில் அடையும் வகையில் வடிவமைத்துள்ளது.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

ஆர்எஸ்7 வேரியண்ட் காரானது முன்புற தாழ்வான அமைப்பு, பொனெட், முன் கதவுகள் மற்றும் அதன் பூட் லிட் உள்ளிட்டவற்றை வழக்கமான ஏ7 மாடல்களில் இருந்து பகிர்ந்து கொண்டுள்ளது. மொத்த தோற்றத்தில் அகலமானதாக காட்சியளிக்கின்ற இந்த ஸ்போர்ட்ஸ் காரில் பெரிய ஏர் டேம்கள் மற்றும் பளபளப்பான கருப்பு நிற தேன்க்கூடு வடிவிலான க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

பின்புறத்தில் ஆர்எஸ் மாடலுக்கே உண்டான ஓவல் எக்ஸாஸ்ட்ஸை கொண்ட பெரிய டிஃப்யூஸர் உடன் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் 21-இன்ச் ரிம்கள் நிலையாகவும், 22-இன்ச் ரிம்கள் கூடுதல் தேர்வாக சர்வதேச சந்தையில் இந்த காருக்கு வழங்கப்படுகின்றன.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

உட்புறத்தில் ஆடி ஆர்எஸ்7 மாடல், ட்யூல் தொடுத்திரை லேஅவுட் உடன் டேஸ்போர்டு, அல்காண்ட்ரா உள்ளமைப்பு மற்றும் பெரிய பெடல் ஷிஃப்டர்களுடன் ஆர்எஸ் ஸ்பெஷிஃபிக் ஸ்டேரிங் சக்கரம் போன்றவற்றை கொண்டுள்ளது.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

ஆர்எஸ்7 மாடலில் 4 இருக்கையே போதுமானது. ஆனால் 5-இருக்கை அமைப்பில் தான் இந்தியாவில் இந்த காரை ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. அதேபோல் முழு கஸ்டமைஸ்சேஷனிற்கான அட்டவணையும் வாடிக்கையாளருக்கு இந்நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் களம் காணுகிறது ஆடியின் புதிய ஸ்போர்ட்ஸ்பேக் கார்...

எக்ஸ்ஷோரூமில் இதன் ஆரம்ப விலை ரூ.1.75 கோடியில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ்பேக் காருக்கு இந்திய சந்தையில் போட்டி அளிக்கும் வகையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி இ63 மற்றும் பிஎம்டபிள்யூ எம்5 உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi RS7 India Launch Scheduled For July: Details, Specs, And Expected Price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X