எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு வாகனத்துடன் டக்கார் ராலியில் களமிறங்கும் ஆடி கார் நிறுவனம்!

எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தனது வல்லமையை உலகுக்கு பரைசாற்றும் வகையில், டக்கார் ராலியில் புதிய ஆஃப்ரோடு வாகனத்துடன் களமிறங்க இருக்கிறது ஆடி கார் நிறுவனம்.

எலெக்ட்ரிக் வாகனத்துடன் டக்கார் ராலியில் களமிறங்கும் ஆடி!

உலகின் மிகவும் கடினமான ராலி வகை பந்தயமாக டக்கார் ராலி குறிப்பிடப்படுகிறது. இந்த ராலியில் பங்கேற்கும் வீரர்கள் மட்டுமின்றி, வாகனங்களும் தொழில்நுட்பத்திலும், கட்டமைப்பிலும் மிகச் சிறப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், தங்களது தொழில்நுட்ப வல்லமையை பரைசாற்றும் விதத்தில் டக்கார் ராலியில் பல முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன.

அந்த வகையில், சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான ஆடி கார் நிறுவனம் டக்கார் ராலியில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. அதுவும் ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட மின்சார வாகனத்துடன் பங்குபெற உள்ளது.

வரும் 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் டக்கார் ராலியில் மின்சார வாகனத்துடன் பங்கு கொள்ள இருப்பதாக ஆடி கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புரோட்டோடைப் வாகனமானது ஆஃப்ரோடு தகவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும்.

மிக கடினமான நிலப்பரப்புகளை கடந்து நெடிய பயணத்தை பல நாட்கள் தொடர வேண்டிய டக்கார் ராலியில் தனது அதீத தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மின்சார ஆஃப்ரோடு வாகனத்தை களமிறக்க உள்ளது ஆடி கார் நிறுவனம்.

அதேநேரத்தில், இந்த வாகனத்தின் முழுமையான தொழில்நுட்ப அம்சங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இது மின்சார வாகனமாக இருந்தாலும், தொழில்நுட்ப அளவில் இது ஹைப்ரிட் தொழில்நுட்ப வகையில் சற்று புதுமையான தொழில்நுட்ப அம்சங்களுடன் இருக்கும்.

அதாவது, இந்த மின்சார வாகனத்தில் பேட்டரியை சார்ஜ் செய்யும் வகையில் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போனால், பெட்ரோல் எஞ்சின் துணையுடன் சார்ஜ் ஏற்றப்பட்ட தொடர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கும்.

மிக கடினமான நிலப்பரப்புகள் மற்றும் சீதோஷ்ண நிலையில் மிகச் சிறப்பாக கையாளக்கூடிய வகையில் இந்த புதிய மின்சார ஆஃப்ரோடு வாகனத்தை ஆடி உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இதன் புரோட்டோடைப் மாடலின் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Most Read Articles
 

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has announced that the company will enter into the 2022 Dakar Rally.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X