ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

2021 ஆடி ஆர்8 சிறுத்தை பதிப்பு (பாந்தர் எடிசன்) அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

2021 ஆடி ஆர்8 வி10 பின்சக்கர ட்ரைவ் மாடல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அதன் சிறுத்தை எடிசன் வெளியிடப்பட்டுள்ளது.

ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

இந்த ஸ்பெஷல் எடிசன் வெறும் 30 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த 30 மாதிரிகளும் பாந்தர் ப்ளாக் க்ரிஸ்டல் என ஆடி அழைக்கும் பிரத்யேகமான கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

புதிய பெயிண்ட் மட்டுமின்றி ஆர்8 பாந்தர் எடிசனின் வெளிப்புற மற்றும் உட்புறத்திலும் ஆடி நிறுவனம் கவனிக்கத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக் சொல்ல வேண்டுமென்றால், 20-இன்ச் அலாய் சக்கரங்கள் வழக்கமான கருப்பு நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் உள்ளீடுகளை கொண்டுள்ளன.

ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

உட்புறத்தில் அதே சிவப்பு நிறத்தில் நப்பா லெதரில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சிவப்பு ஹைலைட்களை அடர் கருப்பு நிற கேபின் முழுக்க அங்கங்கு பார்க்க முடிகிறது. மற்றப்படி தொழிற்நுட்ப அம்சங்களில் ஸ்டாண்டர்ட் ஆர்8 வி10 பின்சக்கர ட்ரைவ் மாடலுக்கும் இந்த ஸ்பெஷல் எடிசனுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

கர்ஜனை சத்தத்திற்கு ஸ்போர்ட் எக்ஸாஸ்ட் காரில் வழங்கப்படுகிறது. கதவு சில்கள் ஒளிரும் வகையில் கார்பன் ஃபைபர் தொகுப்புகளுடன் ஆடி நிறுவனம் வழங்குகிறது. 13-ஸ்பீக்கர் பங் & ஒலுஃப்சன் சவுண்ட் சிஸ்டம் முழு எல்இடி விளக்குகளுடன் வழங்கப்படுகின்றன.

ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

ஆடி ஆர் 8 எப்போதுமே விரும்பத்தக்க செயல்திறன் கொண்ட காராக இருந்து வருகிறது. ஆனால் சுருக்கமாக, பாந்தர் பதிப்பு சரியான காட்சி காராகவே விளங்குகிறது. என்ஜின் அமைப்பில் மாற்றம் இல்லை. அதே 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 பெட்ரோல் என்ஜின் தான் தொடர்ந்துள்ளது.

ஆடியின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிசன்!! சிறுத்தைனு பெயர் வெச்சிருக்காங்க, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிபடுத்தும் 525 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க் திறன் காரின் பின்சக்கரத்திற்கு வழங்கப்படும். 0-வில் இருங்து 100kmph வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ஆடி காரின் அதிகப்பட்ச வேகம் 323 kmph ஆகும். இந்திய ஷோரூம்களுக்கு இந்த சிறுத்தை எடிசன் கார் விற்பனைக்கு வர வாய்ப்பு தற்போதைக்கு இல்லை.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
2021 Audi R8 RWD Panther Edition
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X