ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

ஸ்போர்டி பாகங்கள் உடன் வடிவமைப்பு சார்ந்த ஸ்பெஷல் மாடல் ஆடியின் டிடி குடும்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பியர்களுக்கான இந்த புதிய ஆடி காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

ஆடியின் டிடி குடும்பத்தில் தற்போது இணைந்திருப்பது டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் மாடலாகும். டிடி மற்றும் டிடிஎஸ் ட்ரிம் நிலைகளில் கொண்டுவரப்பட்டுள்ள டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் மற்றும் ஆடியின் அப்கிரேட் மாடல் சீரிஸ் ஜெர்மனியில் இந்த 2020 நவம்பர் மாதத்தில் இருந்து விற்பனையை துவங்கவுள்ளன. இருப்பினும் கார்கள் அடுத்த வருட துவக்கத்தில் இருந்துதான் டெலிவிரியை ஆரம்பிக்கவுள்ளன.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

ஆடி டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கூபே காரின் விலை 61,000 யூரோவாகவும் (ரூ.53.62 லட்சம்) மற்றும் ரோட்ஸ்டரின் விலை 63,700 யூரோவாகவும் (ரூ.56 லட்சம்) நிர்ணயிக்கப்படவுள்ளது. மேலும் ஆடி நிறுவனம் இந்த டிடி மற்றும் டிடிஎஸ் மாடல்களுக்கு புதிய "அலுமினிய தேர்வு" வேரியண்ட்டையும் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

ஆனால் இந்த புதிய வேரியண்ட்டை 2021 மார்ச் மாதத்தில்தான் அங்குள்ளவர்கள் டெலிவிரி பெற முடியும். அலுமியனிய தேர்வு ஸ்பெஷல் மாடலில் இருக்கை ட்ரிம்கள், மைய கன்சோல் மற்றும் ஏசி துளைகள் உள்ளிட்டவை அலுமினியம் மற்றும் காப்பர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும்.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

இந்த ஸ்பெஷல் மாடலுக்கு க்ரோனோஸ் க்ரே, க்ளாஸியர் வெள்ளை மற்றும் மைத்தோஸ் ப்ளாக் என்ற நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறங்கள் அனைத்தும் 20-இன்ச் 5-வி-ஸ்போக் நட்சத்திர டிசைனை கொண்ட சக்கரங்களுடன் சரியாக பொருந்துகின்றன. இதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக ஆடியின் லோகோ காரின் பக்கவாட்டு பகுதியிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

காரின் பின்பக்கத்தில் வழங்கப்படும் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட இறக்கை கருப்பு நிறத்தில் வழங்கப்படவுள்ளது. டிடிஎஸ் மாடலில் இரு இரட்டை டெயில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரில் அமைப்பு டிடி மாடலில் பளபளப்பான கருப்பு நிறத்திலும், டிடிஎஸ் மாடலில் மேட் டைட்டானியம் கருப்பு நிறத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

உட்புறத்தில் ஆடி டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார் வெவ்வேறு விதமான அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய திரை மோட்கள் உடன் 12.3 இன்ச்சில் ஆடி விர்டியுவல் காக்பிட்டை கொண்டுள்ளது. நப்பா லெதரால் சிவப்பு & நீல நிற தையல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கேபின் காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகிறது.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

கியர் லிவர் க்னாப் ஆனது அல்காண்ட்ரா டிசைனில் காட்சியளிக்கிறது. ஆடி டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் காரில் 2.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 318 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் கூபே மாடல் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.

ஐரோப்பிய மக்களுக்கான ஆடியின் டிடிஎஸ் காம்பெடிஷன் ப்ளஸ் கார்!! விலையும் குறைவாக தான் இருக்கு!

அதுவே ரோட்ஸ்டருக்கு கூடுதலாக 0.3 வினாடிகளில் தேவைப்படுகிறது. இவற்றின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும். என்ஜின் உடன் 7-ஸ்பீடு எஸ் ட்ரோனிக், குவாட்ரோ நிரத்தர அனைத்து-சக்கர ட்ரைவ் மற்றும் ஆடியின் காந்தக ரைட் கண்ட்ரோல்டு ஷாக் அப்சார்பர் சிஸ்டம் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi TTS competition plus debuts with sporty design, new equipments for Europe
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X