பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், க்ளோஸ்டர் லக்ஸரி எஸ்யூவி காரை அறிமுகம் செய்து எம்ஜி நிறுவனம் கெத்து காட்டியுள்ளது.

பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

எம்ஜி க்ளோஸ்டர் லக்ஸரி எஸ்யூவி (MG Gloster luxury SUV) கார், ஆட்டோ எக்ஸ்போவில் இன்று (பிப்ரவரி 7) வெளியிடப்பட்டது. லக்ஸரி எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகிய கார்களுக்கு எம்ஜி க்ளோஸ்டர் போட்டியாக இருக்கும். இது குளோபல் எஸ்யூவி கார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

எல்டிவி (LDV) மற்றும் மேக்ஸஸ் (Maxus) போன்ற பேட்ஜ்களில் சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எம்ஜி க்ளோஸ்டர் லக்ஸரி எஸ்யூவி ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவால் நிறைந்த நிலப்பரப்புகளிலும் எளிதாக பயணிக்கும் வகையில் எம்ஜி க்ளோஸ்டர் லக்ஸரி எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் எம்ஜி க்ளோஸ்டர் லக்ஸரி எஸ்யூவி ஏற்கனவே இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டைமன்சன்களை பொறுத்தவரை இந்த காரின் நீளம் 5,005 மிமீ ஆக உள்ளது. அதே சமயம் இந்த காரின் உயரம் 1,875 மிமீ ஆகவும், அகலம் 1,932 மிமீ ஆகவும் இருக்கிறது.

பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

2,950 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளதால், இதன் உட்புறத்தில் விசாலமான இட வசதி கிடைக்கும். இந்த காரின் சீன வெர்ஷனில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 225 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் இந்திய வெர்ஷனில் பெட்ரோல் இன்ஜினுடன் சேர்த்து, 2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் வழங்கப்படலாம்.

பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

அதேபோல் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படும். மேலும் இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் டிசைனில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம். இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், கனெக்டட் கார் வசதிகளுடன் இன்டர்நெட் கனெக்டிவிட்டி, ஆம்பியண்ட் லைட்டிங், ட்ரிபிள் ஜோன் ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளும் வழங்கப்படலாம். க்ளோஸ்டர் லக்ஸரி எஸ்யூவி காரை எம்ஜி நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டம்... டொயோட்டா பார்ச்சூனர் காரை பயமுறுத்தும் க்ளோஸ்டர்... இந்தியாவில் கெத்தாக அறிமுகம்!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நேரம் நெருங்கும் சமயத்தில், என்னென்ன வசதிகள்? என்ற விபரம் விரிவாக வெளியிடப்படும். இந்த காரின் விலை 30 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் சக்கை போடு போட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Auto Expo 2020: MG Gloster Luxury SUV Unveiled. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X