கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்! இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ.. தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்

கட்டிடக்கலையில் தலை சிறந்தவர்கள் தமிழர்கள் என்பதை நிரூபிக்கின்ற வகையில் ஆட்டோவை சொகுசு கார்களுக்கு இணையான மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

கட்டிடக்கலையில் தலை சிறந்தவர்கள் இந்தியர்கள். முக்கியமாக தமிழர்களின் கட்டிடக்கலை உலகம் போற்றுவகையில் இருக்கின்றது. இதற்கு சான்று தஞ்சை பெரிய கோவில், காவிரி கல்லணை போன்றவை இருக்கின்றன. மேலும், இதனை நிரூபிக்கின்ற வகையில் பல்வேறு கோட்டைகள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. அவை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. இருப்பினும் அதன் கம்பீரம் குறையாமல் தற்போது வானுயர உறுதியுடன் நிமிர்ந்து நிற்கின்றன.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

இந்த கட்டிடக்கலை என்பது இந்தியர்களின் மரபணுவிலேயே ஊறியிருக்கின்றது. இதனை உறுதி செய்கின்ற வகையில் அவ்வப்போது சில சிறப்பு சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி வருகின்றன.

அந்தவகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக தனது சாதாரண மூன்று சக்கர ஆட்டோவை லக்சூரி காருக்கு இணையாக மாடிஃபை செய்துள்ளார்.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன மாடிஃபிகேஷன் என்பது ஓர் தடை செய்யப்பட்ட செயலாகும். இருப்பினும் ஒரு சில வாகன ஆர்வலர்கள் தங்களுக்கு பிடித்தவாறு தங்களின் வாகனங்களை மாடிஃபை செய்து வருகின்றனர். அந்தவகையில் செய்யப்படும் ஒரு சில மாடிஃபிகேஷன்களை நம்மில் பலரை கவருகின்ற வகையில் அமைகின்றது.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

அதைப்போன்றே தற்போதைய இந்த மூன்று சக்கர ஆட்டோவின் மாடிஃபிகேஷனும் சுற்றுபயணிகள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றது. இது முன்னதாக செய்யப்பட்ட வாகன மாடிஃபிகேஷன்களைக் காட்டிலும் மிகவும் பிரத்யேகமானதாக காட்சியளிக்கின்றது.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

குறிப்பாக, ஆட்டோவில் லக்சூரி வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே அனைவரையும் கவர்கின்ற வகையில் காட்சியளிக்கின்றது. இந்த தரமான சம்பவத்திற்கு உரியவராக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வைரமுத்து இருக்கின்றார்.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒன்று. இங்கு பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரம்தான் தமிழக அரசின் முத்திரைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், இங்கு எப்போதும் சுற்றுப்பயணிகள் வருகைக்கு பஞ்சம் இருக்காது. மேலும், எந்த கால கட்டத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்த வண்ணமே இருக்கும்.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

இதனை மனதில் கொண்ட வைரமுத்து வித்தியாசமான முறையில் பயணிகளைக் கவர எண்ணினார். ஆனால், அவருக்கு பொருளாதாரம் மிகப்பெரிய தடையாக இருந்தது. இருப்பினும், தனது துறையில் சாதிக்க வேண்டுமானால் ஏதாவது ஒன்றை இழந்து ஆக வேண்டும் என்ற கருத்தை நினைவுக்கூர்ந்த அவர், தனது ஆட்டோவை குறைந்த செலவில் லக்சூரி காருக்கு இணையாக மாற்றினார். இந்த முயற்சியால் அவர் தற்போது ஃபேமஸான ஆட்டோக்காரராக மாறியுள்ளார்.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

இந்த ஆட்டோவில் ஆடம்பர ரக கார்களில் இருப்பதைப் போன்று ஏசி, டிவி, பவர் விண்டோ, சொகுசான இருக்கை மற்றும் இட வசதி உள்ளிட்டவை காட்சியளிக்கின்றன. தொடர்ந்து, நவீன வசதியாக கூகுல் மேப், ரிவர்ஸ் கேமிரா, செல்போன் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. இதனால், பல பயணிகள் இவரை தேடி வந்து பயணிக்கின்றனர். ஒரு சிலர் செல்போன் மூலமாக அழைத்து ஆட்டோவை பயன்படுத்துகின்றனர்.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

என்னதான் இவரின் ஆட்டோவில் அதிக சொகுசு வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், அதிகம் பேர் தேடி வந்தாலும் மற்ற ஆட்டோக்களில் வசூலிப்பதைப் போன்றே கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகின்றது. இதுவும் அவரை பலர் தேடி வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

அதாவது காருக்கு இணையான வசதிகளுடன் ஆட்டோவின் கட்டணத்தில் பயணிக்க இந்த சொகுசு ஆட்டோ பயன்படுகின்றது.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

ஒரு சில இடங்களில் ஆட்டோக் காரர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதை நாம் கண்டிருப்போம். ஏன் நம்மில் சிலர் ஆட்டோக்காரர்களின் அத்துமீறலைக்கூட அனுபவித்திருப்போம். ஆனால், வைரமுத்து இவர்கள் அனைவருக்கும் ஓர் விதிவிலக்காக அமைந்திருக்கின்றார். குறிப்பாக தன்னை நாடி வரும் பயணிகளிடம் சிறிதளவுகூட கோபத்துடன் பேசியதில்லை, மாறாக இன் முகத்துடனேயே உபசரிப்பார் என்று ஆட்டோவில் பயணித்த ஒரு சிலர் தெரிவிக்கின்றனர்.

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள்.. இதோ அதிநவீன காராக மாறிய சொகுசு ஆட்டோ... தஞ்சை இளைஞரின் அசாத்திய திறன்..!

வைரமுத்துவைப் போன்று பல ஆட்டோக்காரர்கள் நமது தமிழகத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றனர். இருப்பினும், ஒரு சில ஆட்டோக்காரர்களால் செய்யப்படும் வன்முறையால் ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களின் நற்பெயரும் கலங்கத்திற்குள்ளாகின்றது.

வைரமுத்துவின் ஆட்டோவில் ஸ்டிக்கரிங் மற்றும் ஹாரன்கள் ஆஃப்டர் மார்க்கெட் இணையானதாக இருக்கின்றது. அவை, பயன்படுத்த தடைச் செய்யப்பட்டவை ஆகும்.

இருப்பினும், ஆட்டோவின் அலங்காரத்தில் அதிக கவர்ச்சியை வழங்கக்கூடியவையாக அவையே காட்சியளிக்கின்றன. முன்னதாக, இதேபோன்று பல்வேறு மாடிஃபிகேஷன்கள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: Top 10 Tamilnadu/YouTube

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Auto Rickshaw Converted Into Luxury Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X