பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

அறிமுகத்திற்கு முன்னதாக பஜாஜ் குட் பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் பொது சாலை சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து குட் என்ற பெயரில் குவாட்ரிசைக்கிள் மாடலை விற்பனை செய்து வருகிறது. சந்தையில் ரூ.2.48 லட்சத்தில் இருந்து ரூ.2.78 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த நான்கு சக்கர வாகனம் விரைவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

இந்த நிலையில் தான் தற்போது மறைப்பு எதுவுமின்றி சோதனை ஓட்டத்தில் இந்த மாடல் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களின் மூலம் இந்த சோதனை ஓட்டம் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ள புனேக்கு அருகில் நடந்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

அதேபோல் எந்த மறைப்பாலும் மறைக்கப்படாததால் பிஎஸ்4 வெர்சனில் இருந்து வாகனத்தின் தோற்றத்தில் எந்த மாற்றமும் பிஎஸ்6 அப்டேட்டிற்காக கொண்டுவரப்படவில்லை என்பது தெளிவாகிறது. தோற்றம் மட்டுமின்றி என்ஜின் அமைப்பிலும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

இதனால் இந்த பிஎஸ்6 வாகனத்திலும் அதே லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் 216.6சிசி என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிகப்பட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 13 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்-ல் 18.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு கான்ஸ்டெண்ட் மெஷ் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

இவற்றுடன் பஜாஜ் நிறுவனம் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி தொகுப்பையும் குட் மாடலில் வழங்கியுள்ளது. இந்த சிஎன்ஜி மோடில் என்ஜின் 5500 ஆர்பிஎம்-ல் 10.8 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்-ல் 16.1 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். குட் வாகனத்தின் அதிகப்பட்ச வேகம் 70kmph என்ற அளவில் உள்ளது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

புதியதாக சிஎன்ஜி மோடை தவிர்த்து மற்ற பாகங்கள் எதிலும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இதனால் நேர்த்தியான வடிவில் ஹெட்லேம்ப்கள் & டெயில்லேம்ப்கள், 12 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், கருப்பு நிறத்தில் பெரியதாக முன் மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் பொருட்களை வைப்பதற்கான ரேக் உடன் கருப்பு மேற்கூரை உள்ளிட்டவை அப்படியே தொடரவுள்ளன.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

இதேபோல் ஒட்டுனரையும் சேர்த்து மூன்று பயணிகள் அமரும்படியான இருக்கை அமைப்பு, மையத்தில் பொருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் & கியர் லிவர் மற்றும் அடிப்படை ஆடியோ சிஸ்டம் முதலிய உட்புற வசதிகளிலும் மாற்றம் இருக்காது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

பஜாஜ் குட் வாகனத்தின் நீளம் 2752மிமீ, அகலம் 1312மிமீ, உயரம் 1652மிமீ மற்றும் வீல்பேஸ் 1925மிமீ ஆகும். இவை எல்லாத்தையும் விட வெறும் 3.5 மீட்டர் ஆரத்தில் வாகனத்தை திருப்பும் வசதி தான் பஜாஜ் குட்-ஐ பரபரப்பு நிறைந்த நகரங்களுக்கு ஏற்ற வாகனமாக விளங்க வைக்கிறது.

குட்-ன் முன்பக்க பொனெட்டிற்கு அடியிலும் பொருட்களை வைப்பதற்கு காலியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி துருக்கியிலும் பஜாஜ் குட்-விற்கு நல்ல மார்கெட் நிலவுகிறது. இதனால் இந்த வாகனத்தை ஸ்ரீலங்கா போன்ற மற்ற நாட்டு சந்தைகளுக்கும் கொண்டு செல்ல பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகவுள்ள பஜாஜின் குட் குவாட்ரிசைக்கிள்... புனேக்கு அருகே சோதனை...

இந்த நிலையில் பிஎஸ்6 அப்டேட்டை பெறவுள்ள இந்த வாகனத்தை விலை சற்று அதிகரிக்கப்படும் என தெரிகிறது. தனியார் பயன்பாடு மட்டுமின்றி கமர்ஷியல் பயன்பாடுகளுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பஜாஜ் இந்த தயாரிப்பு வாகனம் அதன் எரிபொருள் திறன் மற்றும் குறைந்த எரிபொருள் செலவுகளினால் வாடிக்கையாளர்களால் அறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
2020 Bajaj Qute CNG BS6 Quadricycle Spied Testing Near Plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X