இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

பெங்களூரில் இன்று முதல் மின்சார பேருந்து சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், மத்திய அரசு மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஃபேம் இந்தியா (Faster Adoption and Manufacturing of Hybrid & Electric Vehicles in India) திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

மத்திய அரசு தவிர கேரளா, டெல்லி, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில், கர்நாடக மாநில அரசும் ஒன்று. குறிப்பாக பெங்களூர் மாநகரில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கர்நாடக மாநில அரசு தற்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

இந்த சூழலில் பெங்களூர் நகரில் இன்று (அக்டோபர் 22) முதல், மின்சார பேருந்து சோதனை ஓட்டத்தை நடத்துவதற்கு, பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் (Bangalore Metropolitan Transport Corporation - BMTC)முடிவு செய்துள்ளது. இது 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இரண்டாவது சோதனை ஓட்டமாகும்.

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

இதற்கு முன்பாக முதல் சோதனை ஓட்டம் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றிருந்தது. அப்போது காடுகோடி மற்றும் மெஜஸ்டிக் இடையே இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது நடைபெறவுள்ள இரண்டாவது சோதனை ஓட்டம் சுமார் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மெஜஸ்டிக்கில் சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட இருப்பது, 12 மீட்டர் நீளம் கொண்ட மின்சார பேருந்து ஆகும். இதில், ஏசி வசதியும் இடம்பெற்றிருக்கும். 37 பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்த மின்சார பேருந்தை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

இந்த மின்சார பேருந்தை இயக்குவதற்கு 10 வழித்தடங்களை பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகம் அடையாளம் கண்டுள்ளது. இதில், விமான நிலையம், ஐடிபிஎல், கெங்கேரி, எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி மற்றும் நீலமங்களா ஆகிய வழித்தடங்கள் அடங்குகின்றன. பெங்களூர் நகரில் மின்சார வாகனங்களை பிரபலமாக்குவதற்காக இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க முன்வருபவர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து கர்நாடக மாநில அரசு தற்போது ஆலோசனை செய்து வருகிறது.

இன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...

இதன் மூலம் சார்ஜிங் ஸ்டேஷன்களில் முதலீடு செய்ய பலர் முன் வருவார்கள் என்பதுடன், அவற்றுக்கு நிலவி வரும் பற்றாக்குறையும் களையப்படும். இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக காற்று மாசுபாடு பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Bangalore: Electric-bus Trial Run From Today. Read in Tamil
Story first published: Thursday, October 22, 2020, 1:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X