கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

கொரோனா பீதி நாடு முழுவதும் நிலவிக் கொண்டிருக்கின்ற வேலையில் எஸ்பிஐ மற்றும் கோடக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகள் மெரு கேப்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நிலுவையில் இருக்கின்றது. இந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய இருந்தநிலையில் தற்போது அதனை அரசு நீட்டித்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் இதுகுறித்த அறிவிப்புகளையே வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

கொரோனாவிற்கு எதிரான போரில் இம்மாதிரியான நடவடிக்கைகளே உரிய பாதுகாப்பு வழங்கும் கவசமாக உள்ளது. வைரஸ் தொற்றை குணமாக்குவதற்கும், வைரஸ் பரவலை தடுப்பதற்குமான மருந்து இதுவரை கண்டுபிடிக்காத காரணத்தினாலயே இத்தகைய கசப்பான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

இதனால் பொருளாதாரம் அதளபாதாள வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது மேலும் வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பான நடவடிக்கையை சில வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்புழக்கத்தில் முக்கிய பங்கினை வங்கிகளே வகிக்கின்றன.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. தடை உத்தரவு காரணமாக பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களும் வீட்டுக்குள்ளேய முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு போக்குவரத்து தடையே முக்கிய காரணம்.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

இதில், வங்கி ஊழியர்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் பணிக்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் நாட்டின் பல இடங்களில் பண புழக்கம் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் பணம் எடுப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, இந்த தடையை நீக்குவதற்கான முயற்சியில் எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா, ஆர்பிஎல், பர்கிளேஸ் மற்றும் யூனியன் உள்ளிட்ட வங்கிகள் களமிறங்கியிருக்கின்றன.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

இதற்காக, கால் டாக்சி சேவை நிறுவனமான மெரு கேப்ஸ் உடன் அவை இணைந்திருக்கின்றன. இந்த கேப் சர்வீஸ் நிறுவனம், போக்குவரத்து வசதியில்லாத வங்கி ஊழியர்களுக்கு உதவ இருக்கின்றன. குறிப்பாக பணிக்கு செல்ல மற்றும் மீண்டும் வீடு திரும்ப அது உதவ உள்ளது.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

இந்த சிறப்பு சேவையின்போது சில பாதுகாப்பு வழிமுறைகளை கேப் சர்வீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருக்கின்றது. குறிப்பாக கிருமிகள் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகள் கார்களில் செய்யப்பட இருக்கின்றன. இதற்காக ஓசோன் சுத்திகரிப்பு தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

இந்த அம்சத்திற்கு மெரு கேப்ஸ் நிறுவனம் 800-க்கும் அதிகமான ஓசோன் சுத்திகரிப்பு கருவிகளை வாங்கி குவித்துள்ளது. இந்த கருவிகள் அனைத்தும் வங்கி ஊழியர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட இருக்கும் 200 கார்களை சுத்திகரிக்க உதவும்.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

தற்போது அச்சம் நிறைந்த சூழ்நிலையில் இதுமாதிரியான பாதுகாப்பு நடிவடிக்கைகள் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக மெரு கேப்ஸ் குறிப்பிட்ட நடிவடிக்களை எடுத்து வருகின்றது.

கொரோனா வைரஸ் பீதி: கேப் நிறுவனத்தின் உதவியை நாடும் எஸ்பிஐ வங்கி.. எதற்காக தெரியுமா?

இதனடிப்படையில், அதன் பணியாளர் (டிரைவர்) மற்றும் வங்கி ஊழியர்களுக்கும் சில பாதுகாப்பு கவசங்களை வங்கி மற்றும் மெரு நிறுவனம் இணைந்து வழங்கும் என தெரிகின்றது. அவை, ஊழியர்களை மட்டுமின்றி வங்கிக்கு வந்து செல்லும் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Banks Partners With Meru Cabs To Provide Special Transport For Employees. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X