விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

விலையுயர்ந்த ஆடி காரை இளைஞர் ஒருவர் குதிரைகள் இழுத்துச் செல்லும் சாரட்டு வண்டியாக மாற்றியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

மாடிஃபிகேஷன் மூலம் மிகவும் சாதாரணமான கார்களைக் கூட விலையுயர்ந்த ஆடம்பர வாகனங்களாக மிகக் குறைந்த செலவில் மாற்ற முடியும். இம்மாதிரிாயன சம்பவங்களையே நாம் இதுவரைப் பார்த்து வந்தோம். ஆனால், இங்கு ஓர் இளைஞர் தனது ஆடம்பர காரை குதிரைகள் இழுத்துச் செல்லக்கூடிய சாரட்டு வண்டியாக மாற்றியமைத்துள்ளார்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

பொதுவாக, மாடிஃபிகேஷன் மூலம் மாற்றப்படும் கார்கள் விலையுயர்ந்த ஆடம்பரக் கார்களைப் பயன்படுத்துவர்களையேப் பொறாமைக்குள்ளாக்கும் வகையில் மாற்றியமைப்பதையே பெரும்பாலான இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

ஆனால், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர் தனது பழைய ஆடி காரை குதிரைகள் இழுத்து செல்வதற்கு ஏதுவமாக மாற்றியமைத்துள்ளார். ஆம், இந்த சம்பவம் இந்தியாவில் அரங்கேறிய நிகழ்வு அல்ல. அதேசமயம், இந்தியாவில் இதுபோன்ற விநோதமான மாடிஃபிகேஷன் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுகுறித்த தகவலை கடைசியாக பார்க்கலாம்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

பெலாரஸ் நாட்டில் உள்ள ஸ்லபோட்கா எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸி உஸிகோவ் (Alexey Usikov). இவர், மாடு பண்ணை ஒன்றை நடத்தி வருகின்றார். சொந்தமாக சில குதிரைகளையும் அவர் வளர்த்து வருகின்றார். இவரே பழைய ஆடி-80 காரை விநோதமான முறையில் மாடிஃபைச் செய்து பயன்படுத்தி வருகின்றார். குறிப்பாக மாடுகளைக் கண்கானிப்பதற்காகவே இத்தகைய மாற்றத்தை அவர் செய்துள்ளார்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

அதுமட்டுமின்றி, நீண்ட நாட்களாக பயனற்று கராஜில் நிறுத்தப்பட்டிருந்த காரை மேலும் வீணாகி விடக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு மறு சீரமைத்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால், இப்போது அவர் செய்திருக்கக் கூடிய மாற்றத்தை செய்யாமல், அந்த காரை அப்படியே விட்டுவிட்டிருக்கலாம் என அந்த காரை பார்க்கும் வாகன பிரியர்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

ஏனெனில் காரின் முகப்பு பகுதி முழுவதையும் அந்த மேய்ப்பன் துண்டித்து நீக்கியுள்ளார். அதாவது, பின்னிருக்கை மட்டுமே இருக்கும்படி செய்து, காரின் எஞ்ஜின் மற்றும் முன்னிருக்கை உள்ளிட்டவற்றை அவர் நீக்கியிருக்கின்றார். இதைத்தொடர்ந்தே குதிரை இழுத்துச் செல்ல ஏதுவான தோற்றத்தை அக்காருக்கு அவர் வழங்கியிருக்கின்றார்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

மேலும், இந்த புதுவிதமான சாரட்டு வண்டியை இரவிலும் பயன்படுத்தும் விதமாக மின் விளக்கும், அதற்கான பேட்டரியையும் பொருத்தியிருக்கின்றார். அத்துடன், சமைப்பதற்கு ஏதுவான சிறிய அடுப்பையும் அவர் நிலை நிறுத்தியுள்ளார். இவ்வாறு, குறிப்பிட்ட சில மாற்றங்களை மட்டுமே காரின் மாற்றத்திற்கு பின்னர் அவர் செய்துள்ளார்.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

ராய்டர்ஸ் தளத்தின் வாயிலாக வெளியாகியுள்ள இந்த மாடிஃபிகேஷன் கார் பற்றிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் நாம் கண்ட வாகன மாடிஃபிகேஷன் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மழுங்கடிக்கச் செய்கின்ற வகையில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

ஆடி-80 காரை சாரட்டு வண்டியாக மாற்றிய கையுடன், அதை குதிரை இழுத்துச் செல்வதற்கு ஏதுவாக உலோக இணைப்பு கம்பிகளையும் பிரத்யேகமாக அவரே உருவாக்கியுள்ளார். அது ஒற்றை குதிரை மட்டுமே இழுத்துச் செல்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்ட காரை இழுத்துச் செல்லும் குதிரையுடன் குட்டி குதிரை ஒன்று கூடவே வலம் வருவதையும் நம்மால் காண முடிகின்றது.

விலையுயர்ந்த ஆடி காரை குதிரை சாரட்டாக மாற்றிய இளைஞர்... காரணத்தைக் கேட்டு நொந்துபோன வாகன பிரியர்கள்!

இந்த மாடிஃபிகேஷன் சம்பவம் பழைய கார்களை தேடிப் பிடித்து புதுப்பித்து பயன்படுத்துவோரின் கண்களில் ரத்த கண்ணீரை வரவழைக்கும் அமைந்துள்ளது. மேலும், காரை மாற்றியமைப்பதற்காக அந்த இளைஞர் கூறியதாகப் பரவி வரும் தகவல் மேலும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Belarusian Shepherd Converts Audi Car Into Horse Drawn Cart. Read In Tamil.
Story first published: Friday, August 7, 2020, 20:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X