கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

எலெக்ட்ரிக் கார் வாங்குவதை பற்றி யோசித்து கொண்டுள்ளீர்களா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த செய்தி.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் மெல்ல மெல்ல பிரபலமடைய தொடங்கியுள்ளன. எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது குறித்து பலரும் யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் அவர்கள் விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர். ஆனால் மின்சார கார்களை வாங்கும் முன்பாக ஒரு சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

அதனை தெரிந்து கொள்ளும் முன்பாக நீங்கள் ஏன் எலெக்ட்ரிக் கார்களை வாங்க வேண்டும்? என்பதற்கான காரணங்களை முதலில் பார்த்து விடலாம். வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களில் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றை இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

குறைவான ரன்னிங் காஸ்ட்: இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் தற்போது மின்சார கார்களின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். ஏனெனில் பெட்ரோல், டீசல் கார்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மற்றொரு சாதகமான விஷயம் அவற்றை பராமரிக்க ஆகும் செலவு குறைவு என்பதுதான். ஆம், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களை பராமரிக்க ஆகும் செலவு மிகவும் குறைவாகதான் இருக்கும். இதன் காரணமாகவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

சுற்றுச்சூழலுக்கு உகந்தது: தற்போதைய சூழலில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் கக்கும் புகை இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. எனவே பலர் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறினால், ஆரோக்கிய ரீதியிலான நன்மைகளும் கிடைக்கும்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

இவைதான் எலெக்ட்ரிக் கார்களில் கிடைக்கும் மிக முக்கியமான நன்மைகள். இதேபோல் இன்னும் பல்வேறு பலன்கள் உங்களுக்கு கிடைத்தாலும், கண்ணை மூடிக்கொண்டு எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது நன்றாக இருக்காது. எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் முன்பாக ஒரு சில முக்கியமான விஷயங்களை நீங்கள் பார்க்க வேண்டும். அவற்றை இனி வரிசையாக தெரிந்து கொள்ளலாம்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

ரேஞ்ச்:

எலெக்ட்ரிக் காரை வாங்கும் முன்பு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயம் ரேஞ்ச்தான். அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் கார் எவ்வளவு தூரம் செல்லும்? என்பதை பார்க்க வேண்டும். ரேஞ்ச் அதிகமாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் தாராளமாக எலெக்ட்ரிக் காரை தேர்வு செய்யலாம்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

ஏனெனில் பெட்ரோல், டீசல் நிரப்புவது என்பது எளிதான வேலைதான். ஆனால் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்ய நேரம் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் கூட இதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். அத்துடன் இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகளுக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும் பெரிய அளவில் இல்லை.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

தற்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சார்ஜிங் ஸ்டேஷன்கள் முளைக்க தொடங்கியுள்ளன. எனவே பெட்ரோல் பங்க்குகளுக்கு நிகரான எண்ணிக்கையை சார்ஜிங் ஸ்டேஷன்கள் தொட இன்னும் பல ஆண்டுகள் ஆகும். எனவே ரேஞ்ச் என்ற விஷயத்திற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தால், பல்வேறு பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

சலுகைகள்:

பொதுவாக பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது மின்சார கார்களின் விலை கொஞ்சம் அதிகம்தான். இருந்தபோதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்குகிறது. எனவே எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் முன்பு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து கொள்ளுங்கள். அவை உங்களுக்கு ஓகேவா? என்பதையும் பார்த்து கொள்ளுங்கள்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

சார்ஜிங் ஸ்டேஷன்கள்:

மின்சார கார்களை நீங்கள் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆனால் உங்கள் வீட்டிற்கு வெளியே சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் கூட ஏற்படலாம். எனவே எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் முன்பு வீட்டிற்கு அருகில் மற்றும் வெளியில் வேறு எங்கெல்லாம் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கிறது? என்பதையும் பார்த்து கொள்வதும் நல்லது.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கும்பட்சத்தில் பிரச்னை இல்லை. அதேபோல் உங்கள் அலுவலகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் இருந்தாலும் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். நீங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கும் மட்டும் வந்து செல்பவர் என்றால், வீட்டை மட்டும் நம்பி இருக்கலாம். ஆனால் தொலைவாக செல்வதென்றால், சார்ஜிங் ஸ்டேஷன்களை தெரிந்து கொள்வது அவசியம்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

எலெக்ட்ரிக் கார்களை தேர்வு செய்யும் முன்பு மேற்கண்ட விஷயங்களையும் கவனத்தில் கொண்டு விட்டால், பிரச்னைகளை தவிர்த்து விட முடியும். சார்ஜிங் ஸ்டேஷன்களை பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் வேண்டுமானால் ஒரு சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகரிக்கும் முயற்சியில், மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும், இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. எனவே கூடிய விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் பிரச்னை ஓரளவிற்கு குறையும்.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

தேர்வுகள்:

பெட்ரோல், டீசல் கார்களை வாங்குவது என்றால், உங்களுக்கு ஏகப்பட்ட தேர்வுகள் உள்ளன. ஆனால் மின்சார கார்களில் தற்போதைய நிலையில் இந்திய மார்க்கெட்டில் அந்த அளவிற்கு தேர்வுகள் இல்லை. தற்போது ஒரு சில மாடல்கள் மட்டுமே சந்தையில் கிடைக்கின்றன. இதில், ஹூண்டாய் கோனா போன்ற கார்கள் மட்டுமே நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவையாக உள்ளன.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்கும் முன்பு, அது நடைமுறை பயன்பாட்டிற்கு எந்த அளவிற்கு ஏற்றதாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளிட்ட கார்கள் இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

ரேஞ்ச், வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதங்களிலும் இவை நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுதவிர மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கண்ண மூடிட்டு மின்சார கார் வாங்கலாமா? எதுக்கும் இந்த செய்திய படிச்சிருங்க... இல்லனா வருத்தப்படுவீங்க

எனவே நடப்பு 2020ம் ஆண்டில் பல்வேறு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்திய மார்க்கெட்டில் நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். எனவே வரும் காலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை போலவே எலெக்ட்ரிக் கார்களிலும் உங்களுக்கு பல்வேறு தேர்வுகள் கிடைக்க தொடங்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

Most Read Articles
English summary
Benefits Of Electric Cars - Tips For First-Time Buyers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X