உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா? ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

உலகின் மிக வேகமாக செல்லக்கூடிய கார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை உற்பத்தி செய்து வரும் பென்ட்லீ நிறுவனம், அதன் பென்டேகா எஸ்யூவி காரை உலகின் அதி திறன் வாய்ந்த எஸ்யூவி காராக உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுவரை உலகின் அதி வேக எஸ்யூவி காராக லம்போர்கினி உருஸ் மட்டுமே உள்ளது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

இந்த காரின் சாதனையை முறியடிக்கும் விதமாகவே பென்ட்லீ நிறுவனம், அதன் பென்டேகா மாடலை சூப்பர் ஃபாஸ்ட் காராக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்படி, பென்டேகா காருக்கு மணிக்கு 306 கிமீ வேகத்தில் செல்லும் திறனை பென்ட்லீ நிறுவனம் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் உச்சபட்ச வேகம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வரும் 12ம் தேதி வெளியிட இருப்பதாக அது அறிவித்துள்ளது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

தற்போது பென்ட்லீ வெளியிட்டிருக்கும் வேகம் பற்றிய தகவலின்படி, லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் வேகத்தை முறியடிக்கும் திறனாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், பிக்-அப் விஷயத்தில் பென்டேகா பின் தங்கியே உள்ளது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

ஆம், மணிக்கு 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை எட்ட பென்ட்லீ பென்டேகா 3.9 செகண்டுகளை எடுத்துக் கொள்வதாக கூறப்படுகின்றது. ஆனால், லம்போர்கினி உருஸ் மணிக்கு 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3.6 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

எனவே இந்த திறனை மேம்படுத்தும் முயற்சியில் பென்ட்லீ நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது. இதற்காக பென்டேகா எஸ்யூவி காரை அது பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது. அவ்வாறு, அது பல பரீட்சையில் ஈடுபடும் டீசர் புகைப்படங்களே தற்போது வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தில் லேசான மறைப்புகளுடன் அக்கார் அதன் தரிசனைத்தை வழங்கியுள்ளது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

இருப்பினும், அதன் கவர்ச்சியான தோற்றம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்ட ஒரு சில அம்சங்கள் மட்டும் மிக தெளிவாக காட்சிக்குள்ளாகியுள்ளன. இதன்படி, உடல் நிறத்திற்கு ஏற்ற பக்கவாட்டு ஸ்கர்ட்டுகள், அடர் கருப்பு நிற ஹெட்லைட் மற்றும் டெயில்கேட்டில் ஸ்பாய்லர் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

இதேபோன்று, டார்க்-டின்ட் ரேடியேட்டர், பம்பர் கிரில்கள், புத்தம் புதிய டிசைனிலான 22 இன்ச் வீல், ஸ்பீடு எழுத்து பொறித்த பேட்ஜ்கள் உள்ளிட்டவை இந்த காரில் இடம்பெறவிருப்பது உறுதியாகியுள்ளது. இதுமட்டுமின்றி, காருக்குள் இடம்பெறவிருக்கும் சில அம்சங்களும் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

குறிப்பாக, இருக்கையில் பேக் ரெஸ்ட், அட்டகாசமான புதிய தோற்றத்தில் கேபின், டைமண்ட் வடிவங்கள் அடங்கிய இருக்கை உள்ளிட்டவை இடம்பெற இருப்பதும் உறுதியாகியுள்ளது. இத்துடன் மேலும் பல சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் பல, உலகின் அதி-வேக எஸ்யூவி காராக தயாராகிக் கொண்டிருக்கும் பென்ட்லீ பென்டேகா காரில் இடம்பெற இருக்கின்றது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

பென்ட்லீ பென்டேகா கார் தற்போது அனைத்து வீல்களும் இயங்கும் திறனில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதே திறனில்தான் உலகின் அதி வேக காராக உருவாகிக் கொண்டிருக்கும் பென்டேகாவும் பெற்றிருக்கின்றது. இத்துடன், எட்டு விதமான டிரைவிங் மோட்கள், கார்பன் செராமிக் பிரேக், 22 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள கூடிய முன்பக்க இருக்கை (மசாஜ் வசதியுடையது), பொழுதுபோக்கு திரைகள் மற்றும் மூட் லைட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இடம்பெறவிருக்கின்றன.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

இதுபோன்ற நாம் இதுவரை காணாத பல்வேறு அம்சங்களை இந்த கார்கள் கொண்டிருப்பதன் காரணத்தினலாயே செல்வந்தர்களின் தேடலில் இக்கார்கள் முதல் இடத்தில் இருக்கின்றன. சிறப்பம்சங்களில் மட்டுமின்றி திறனிலும் அனைவரையும் கவருகின்ற வகையில் இக்கார் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பென்ட்லீ நிறுவனம் இதனை சூப்பர் ஃபாஸ்ட் காராக உருவாக்கி வருகின்றது.

உலகின் மிக வேகமான காராக உருவாகும் பென்ட்லீ பென்டேகா?.. ஆச்சரியமளிக்கும் வேகம்! டீசர் படங்கள் வெளியீடு!

இதுமட்டுமின்றி, இதன் அதீத திறனை வாடிக்கையாளர்கள் விரும்பினால் குறைத்து வழங்கும் சிறப்பு வசதியையும் பென்ட்லீ செய்து தர இருக்கின்றது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு தேவை எனும் கூறும் பல்வேறு அம்சங்களை அந்நிறுவனம் கூடுதலாக செய்து தர இருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley Bentayga Speed Will Be Revealed On August 12. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X