கேள்வி குறியாகிய பாதுகாப்பு! ரூ.3.78 கோடி விலையுள்ள சொகுசு காரில் இப்படி ஒரு பிரச்னையா? நம்ப முடியல

பல கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பென்ட்லீ பென்டேகா எஸ்யூவி லக்சூரி காரில் நம்ப முடியாத பிரச்னை ஒன்று ஏற்படத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

சொகுசான பயணம், உல்லாச கப்பல்களில் இருப்பது போல் ஆடம்பர வசதி, ஸ்டார் ஹோட்டல்களை மிஞ்சுகின்ற லக்சுரி அம்சங்கள், மிக முக்கியமாக அதிக பாதுகாப்பு இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காகவே உலக செல்வந்தர்கள் பலரும் விலையுயர்ந்த லக்சூரி கார்களின் பக்கம் ஈசல்களை போன்று குவிந்து வருகின்றனர்.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

ஆனால், செல்வந்தர்களின் இந்த நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக, உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனத்தின் பிரபல மாடல் ஒன்றின் மீது கலங்கம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் லக்சூரி வாகன தயாரிப்பு நிறுவனம் பென்ட்லீ. இந்த நிறுவனத்தின் பிரபல ஆடம்பர ரக எஸ்யூவி ரக கார்களில் பென்டேகா மாடலும் ஒன்று.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

இந்த மாடலின் மீதுதான் தற்போது கலங்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்படும் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ப்யூவல் டேங்கில் இருந்து எஞ்ஜினுக்கு எரிபொருளைக் கடத்திச் செல்லும் பைப் லைனில் ஏற்பட்டிருக்கும் கோளாறே முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

அதாவது, மிகவும் தரமற்ற எரிபொருள் கடத்திகள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணத்தினாலேயே அவை எரிபொருளைக் கடத்தும்போது எஞ்ஜினின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் தீப்பிடிக்கின்றன. இதுகுறித்த தொடர் புகார் மற்றும் அறிவிப்பைத் தொடர்ந்தே கோளாறான பைப் லைன்களை மாற்ற குறிப்பிட்ட யூனிட் பென்டேகா எஸ்யூவி கார்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

இதன்படி, 6 ஆயிரம் யூனிட்டுகள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டுமே 1,892 யூனிட்டுகள் கோளாறுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றையும், ஐரோப்பாவில் விற்கப்பட்ட 783 யூனிட்டு கோளாறுடைய பென்டேகா எஸ்யூவி கார்களையும் பென்ட்லீ நிறுவனம் திரும்பி அழைத்துள்ளது.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

அதில், இந்தியாவில் விற்கப்பட்ட பென்டேகா காரும் அடங்கும். எனவே அவற்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த கார் 2016ம் ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இங்கு பென்ட்லீ பென்டேகா டபிள்யூ12 என்ற மாடலே முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது, இந்தியாவில் ரூ. 3.85 கோடி என்ற விலைக்கு விற்கப்பட்டது.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

இதைத் தொடர்ந்தே இந்த மாடலின் வி8 வேரியண்ட்டையும் பென்ட்லீ நிறுவனம் 2018ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 3.78 கோடியாகும். இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

தற்போது திரும்பி அழைக்கப்பட்டிருக்கும் அனைத்து பென்டேகா காருக்கும், கோளாறுடைய பைப் லைன் நீக்கப்பட்டு புதிய பாதிப்பில்லாத உபகரணங்கள் பொருத்தப்பட இருக்கின்றன.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

அது பாதுகாப்பானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. எனவே, எதிர்காலத்தில் பென்டேகா கார் தீ விபத்து போன்றவற்றைச் சந்திக்காது என தெரிகின்றது. எனவே, செல்வந்தர்களும் தங்களின் பென்டேகா காரில் எந்தவொரு கவலையுமின்றி ஜாலியாக வலம் வர முடியும்.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

அதேசமயம், தற்போது அழைக்கப்பட்டிருக்கும் பென்டேகா கார்கள் அனைத்தும் எந்த ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை என்ற தகவல் தெளிவாக தெரியவரவில்லை. எனவே, இது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேலையில், பென்ட்லீ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அழைப்பு விடுத்து வருகின்றது.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

ஆகையால், கோளாறுள்ள எந்தவொரு காரும் சீர்படுத்தாமல் விடப்படாது என அந்நிறுவாகம் சார்பில் கூறப்படுகின்றது.

பென்ட்லீ பென்டேகா இந்தியாவில் குறிப்பிட்ட மாடல்களில் மட்டுமே கிடைத்தாலும் உலக சந்தையில் பல்வேறு வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

குறிப்பாக, நான்கு விதமான எஞ்ஜின் திறனில் அது கிடைத்து வருகின்றது. அவை, 4.0 லிட்டர் வி8டிடி வேரியண்ட், 6.0 லிட்டர் டபிள்யூ12டிடி வேரியண்ட், 4.0 லிட்டர் வி8டிடி டீசல் வேரியண்ட் மற்றும் 3.0 லிட்டர் வி6டி ஹைபிரிட் ஆகிய தேர்வுகளில் இந்த கார் கிடைக்கின்றது.

விலைதான் பல கோடி... பாதுகாப்பு ஜீரோ... உடனடியாக பென்டேகா எஸ்யூவி மாடலை திரும்பி வர அழைக்கும் பென்ட்லீ!

அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான எஞ்ஜின் திறனை வெளிப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கின்றன. இதில், 6.0 லிட்டர் டபிள்யூ12 தேர்வு உயர்திறன் கொண்ட மாடலாக உள்ளது. அதாவது, அதி வேகமாக இயங்கும் காராக இது காட்சியளிக்கின்றது. எனவே, உலகின் ஃபாஸ்டஸ்ட் எஸ்யூவி என்ற பட்டத்தைப் பென்டேகா 6.0 லிட்டர் டபிள்யூ12 சூடியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Bentley Recalls Bentayga SUV: Here Is Why?. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X