அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால், நீங்கள் எந்த கார்களை வாங்க வேண்டும்? என்பது பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

கார்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஒரு சில பயணங்களின்போது, காரில் நம் குடும்பத்தினரையும் அழைத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. ஆனால் உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால், கார் பயணங்களின்போது அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம். ஆம், அனைத்து கார்களும் முதியவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

ஒரு சில கார்களில் பயணிக்கும்போது அவர்களுக்கு அசௌகரியங்கள் நேரிடலாம். குறிப்பாக கரடு முரடான நிலப்புரப்புகளிலும், குண்டும், குழியுமான சாலைகளிலும் பயணிக்கும்போது அவர்களால், சௌகரியமாக வர முடியாது. ஆனால் வயதில் பெரியவர்களை அழைத்து செல்கிறீர்கள் என்றால், காரை கவனமாக தேர்வு செய்வது அவசியம்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில கார்கள் வயதில் பெரியவர்களுக்கும் சேர்த்து உகந்த மாடல்களாக இருக்கின்றன. உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றாலோ அல்லது அவர்களை அடிக்கடி வெளியே அழைத்து செல்ல வேண்டிய தேவை இருந்தாலோ, இந்த கார் மாடல்களை வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga)

மாருதி சுஸுகி எர்டிகா கார், விசாலமான மற்றும் சௌகரியமான கேபினுக்கு பெயர் பெற்றது. கமர்ஷியல் மார்க்கெட்டில் அந்த கார் அதிகமாக பயன்படுத்தப்படுவதற்கு இது மிக முக்கியமான காரணம். அறிமுகம் செய்யப்பட்டது முதலே, இந்திய மார்க்கெட்டில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் விற்பனை மிக சிறப்பாக இருந்து வருகிறது.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

5+2 இருக்கை அமைப்புடன் மாருதி சுஸுகி எர்டிகா வருகிறது. இதனால் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சௌகரியமாக பயணம் செய்யலாம். மாருதி சுஸுகி எர்டிகா காரின் ரைடு குவாலிட்டி மிகவும் சிறப்பாக இருக்கிறது. குண்டும், குழியுமான சாலைகளை மாருதி சுஸுகி எர்டிகா மிக எளிதாக கடக்கும். மேலும் நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் சென்றாலும், சௌகரியமான பயணத்தை வழங்கும்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

அத்துடன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எர்டிகா காரை தினசரி ஓட்டுவதும் எளிதானதுதான். மாருதி சுஸுகி எர்டிகா காரில், முதியவர்களால் எளிதாக ஏறி, இறங்க முடியும். எனவே அவர்களுக்கு ஏற்ற கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எர்டிகா திகழ்கிறது. உங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால், மாருதி சுஸுகி எர்டிகாவை வாங்குவதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்கலாம்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

மஹிந்திரா மராஸ்ஸோ (Mahindra Marazzo)

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இல்லை. ஆனால் விற்பனை நிலவரத்தை வைத்து கொண்டு, இந்த காரை நல்ல சாய்ஸ் இல்லை என்று சொல்லி விட முடியாது. மாருதி சுஸுகி எர்டிகா காரை காட்டிலும் மஹிந்திரா மராஸ்ஸோ பெரியது. அதாவது கேபினுக்குள் அதிக இடவசதியும், சௌகரியமும் கிடைக்கும்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் சக்தி வாய்ந்த இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முழுவதும் லோடு ஏற்றினாலும் கூட, இந்த இன்ஜின் சிறப்பாக செயல்படும். குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும்போது, கேபினின் உள்ளே இருப்பவர்களுக்கு பெரிய அளவிலான உறுத்தல் ஏற்படாது. அதாவது சௌகரியமான பயணம் கிடைக்கும்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta)

தொலை தூர பயணங்கள் என்றாலும், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில், ஏழு பேர் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். எனவே இதனை மிகச்சிறந்த ஃபேம்லி கார் என கூறலாம். டொயோட்டா நிறுவனம் மீதான நம்பகத்தன்மை மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின்கள் ஆகியவை இன்னோவா கிரிஸ்டா மாடலின் கூடுதல் சிறப்புகள்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

வயதில் பெரியவர்கள் மட்டுமின்றி, எந்த வயதுடையவர்கள் என்றாலும், எந்த அளவுடையவர்கள் என்றாலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும். எந்தவொரு நபர் என்றாலும், போதுமான அளவிற்கு ஹெட்ரூம் மற்றும் சோல்டர்ரூம் இருக்கிறது. குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும்போது அதன் தாக்கமும் பெரிய அளவில் உணரப்படாது.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

நெடுஞ்சாலைகளில் மூன்று இலக்க வேகத்தில் சென்றாலும் கூட, எந்த பிரச்னையும் இன்றி சௌகரியமாக பயணிக்கலாம். மேற்கண்ட கார்கள் தவிர்த்து, உங்கள் வீட்டில் முதியவர்கள் இருக்கும் பட்சத்தில், மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் போன்ற கார்களையும் நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

அவர்களை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கார்கள்தான் பெஸ்ட்...

பொதுவாக நீங்கள் கார் வாங்குவதாக இருந்தால், வயதில் மூத்தவர்களின் தேவைகளுக்கு மதிப்பு வழங்குவது அவசியம். எனவே காரை வாங்குவதற்கு முன்பாக, வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களுடன் டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள். இதன் மூலம் அவர்கள் தங்கள் கருத்தை சொல்ல வாய்ப்பு கிடைக்கும்.

Most Read Articles

English summary
Best Cars For Senior Citizens - Maruti Suzuki Ertiga, Mahindra Marazzo, Toyota Innova Crysta. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X