Just In
- 6 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 7 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 8 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
- 9 hrs ago
மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Movies
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மும்பையை கலக்கப்போகும் புதிய எலெக்ட்ரிக் பஸ்கள்... மத்திய அரசிடம் இருந்து பெஸ்ட் நிறுவனம் பெற்றது...
மத்திய அரசின் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், பெஸ்ட் நிறுவனம் புதிய மின்சார பேருந்துகளை பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மும்பையில் பேருந்துகளை இயக்கி வரும் பெஸ்ட் (BEST - Brihanmumbai Electric Supply and Transport) நிறுவனம், மத்திய அரசின் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ், 26 புதிய மின்சார பேருந்துகளை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர். ஃபேம் இந்தியா திட்டத்தின் 2வது கட்டத்தின் கீழ் (Phase II) மொத்தம் 300 புதிய மின்சார பேருந்துகளை பெஸ்ட் பெறவுள்ளது.

இதில், முதல் கட்டமாக தற்போது 26 மின்சார பேருந்துகளை பெற்றுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக ஃபேம் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''26 புதிய மின்சார பேருந்துகளை பெஸ்ட் நிறுவனம் பெற்றுள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் அவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. இதை தொடர்ந்து இந்த புதிய மின்சார பேருந்துகள் அனைத்தும் கூடிய விரைவில் பொதுமக்களின் சேவைக்கு கொண்டு வரப்படும்'' என்றனர்.

பெஸ்ட் நிறுவனத்திடம் மொத்தம் 3,875 பேருந்துகள் உள்ளன. இதில், மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை 38. இது கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்த பேருந்துகளின் எண்ணிக்கையாகும். பெஸ்ட் நிறுவனத்திடம் உள்ள 38 மின்சார பேருந்துகளில், முதல் 6 பேருந்துகள் கடந்த 2017ம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டன. எஞ்சிய 32 பேருந்துகள் ஃபேம் இந்தியா திட்டத்தின் முதல் கட்டத்தின் (Phase 1) கீழ், குத்தகைக்கு எடுக்கப்பட்டன.

இந்த சூழலில் தற்போது வந்துள்ள புதிய மின்சார பேருந்துகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''புதிய மின்சார பேருந்துகளில் அனைத்து அதிநவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும். அத்துடன் வழக்கமான பேருந்துகளை போல இவை அதிக சப்தம் எழுப்பாது. மேலும் எக்ஸாஸ்ட் அமைப்பில் இருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்களையும் உமிழாது'' என்றனர்.

இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் காற்று மாசுபாட்டை குறைப்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதும் மத்திய அரசின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.

காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய இரண்டு பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும், மின்சார வாகனங்கள் மூலம் முடிவு கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இதன் விளைவாக இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஆதரவு காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்களும், பல்வேறு மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.