2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

கடந்த டிசம்பர் மாதத்தில் சிறந்த முறையில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் முதல் 6 இடங்களை மாருதி சுசுகி நிறுவனத்தின் மாடல்கள் ஆக்கிரமித்துள்ளன. இன்னும் சொல்ல போனால், இந்த 10 இடங்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் இரு மாடல்களை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் மாருதி நிறுவனத்தின் கார்களாக தான் உள்ளன. லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள 10 கார்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

மாருதி சுசுகி பலேனோ, இந்த டாப்-10 லிஸ்ட்டில் முதல் இடத்தை பிடித்துள்ள மாடல் கார். மாருதியின் ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக விளங்குகின்ற பலேனோ கார் கடந்த மாதத்தில் 18,465 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 11,135 பலேனோ கார்கள் விற்பனையான 2018 டிசம்பர் மாதத்தை விட சுமார் 65.83 சதவீதம் கூடுதலாகும்.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் மாருதி சுசுகி ஆல்டோ மாடல் உள்ளது. எண்ட்ரீ லெவல் ஹேட்ச்பேக் மாடலாக மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காரானது கடந்த மாதத்தில் 15,489 யூனிட்கள் விற்பனையை இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை 25,121 ஆல்டோ மாடல் கார்கள் விற்பனையான 2018 டிசம்பர் மாதத்தை விட 38.34 சதவீதம் குறைவாகும்.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

இந்த வரிசையில் மாருதி சுசுகி டிசைர் 15,286 கார்கள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. காம்பெக்ட் செடான் வகை காரான டிசைர், 2018 டிசம்பரில் 16,787 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது கடந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 9 சதவீதம் குறைவாகும்.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

மாருதி ஸ்விஃப்ட் இந்த டாப்-10 லிஸ்ட்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஹேட்ச்பேக் மாடல் கார் இந்திய சந்தையில் கடந்த மாதத்தில் பதிவு செய்த விற்பனை எண்ணிக்கை 14,749 ஆகும். இதுவே இந்த ஸ்விஃப்ட் மாடலின் 2018 டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 11,970 தான். இதன் மூலம் இந்த கார் 2018 டிசம்பருடன் ஒப்பிடும்போது 23.22% வளர்ச்சியை அடைந்துள்ளது.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

ஐந்தாம் இடத்தில் மாருதியின் பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸா கார் உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 13,658 யூனிட்கள் விற்பனையான இந்த மாடல், 2018 டிசம்பரை விட 41 சதவீதம் கூடுதலாக விற்பனையானது மட்டுமில்லாமல், 2019 நவம்பரில் எஸ்யூவி கார்களின் விற்பனையில் முதலிடம் பிடித்திருந்த கியா செல்டோஸ் மாடலிடம் இருந்து அதிகளவில் விற்பனையான எஸ்யூவி கார் என்ற பட்டத்தையும் மீண்டும் பெற்றுள்ளது.

Rank Models Dec'19 Dec'18 Growth (%)
1 Maruti Baleno 18,465 11,135 65.83
2 Maruti Alto 15,489 25,121 -38.34
3 Maruti Dzire 15,286 16,797 -9.00
4 Maruti Swift 14,749 11,970 23.22
5 Maruti Brezza 13,658 9,667 41.28
6 Maruti Wagonr 10,781 2,540 324.45
7 Hyundai Venue 9,521 0 -
8 Maruti S-Presso 8,394 0 -
9 Hyundai i20 7,720 11,940 -35.34
10 Maruti Eeco 7,634 8,532 -10.53
2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

முதல் ஐந்து இடத்திற்கு அடுத்ததாக ஆறாவது இடத்தில் மாருதி வேகன்-ஆர் மாடல் உள்ளது. உயரமான ஹேட்ச்பேக் கார்களின் பிரிவில் மாருதி நிறுவனத்தால் நிலைநிறுத்தப்பட்ட இந்த மாடல், தயாரிப்பு நிறுவனமே ஆச்சரியப்படும் விதமாக 10,781 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை 2018 டிசம்பர் மாதத்தை விட சுமார் 324.45 சதவீதம் கூடுதலாகும். வேகன்-ஆர் மாடலின் இந்த அதிரடியான முன்னேற்றத்திற்கு கடந்த வருட துவக்கத்தில் இதன் புதிய தலைமுறை கார் அறிமுகமானது மிக முக்கிய காரணமாக விளங்குகிறது.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

இந்த லிஸ்ட்டில் மாருதி நிறுவனத்தின் கார் அல்லாமல் அதிகம் விற்பனையாகியுள்ள மாடல் என்றால் அது ஹூண்டாய் வென்யூ தான். சில மாதங்களுக்கு முன்பு தான் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் கடந்த மாதத்தில் 9,521 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

ஹூண்டாய் வென்யூவிற்கு அடுத்ததாக மீண்டும் மாருதி நிறுவனத்தின் மாடலாக 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ கார் உள்ளது. ஆல்டோ மாடலுக்கு மேலே எண்ட்ரீ-லெவல் ஹேட்ச்பேக் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் 2019 டிசம்பர் மாதத்தில் 8,394 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

இந்த லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் ஒரு ஹூண்டாய் மாடலும் ஒரு மாருதி சுசுகி மாடலும் உள்ளன. அதன்படி, 9வது இடத்தில் உள்ள ஹூண்டாய் ஐ20 மாடல் 7,720 யூனிட் விற்பனையையும் 10வது இடத்தில் உள்ள மாருதி ஈக்கோ 7,634 யூனிட் விற்பனையையும் பெற்றுள்ளன. இந்த இரு மாடல்களும் 2018 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹூண்டாய் வென்யூ 35.34 சதவீத வீழ்ச்சியை கடந்த டிசம்பர் மாதத்தில் அடைந்துள்ளது.

2019 டிசம்பரில் அதிகளவில் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா? முழுவிபரம் இதோ...

மாருதி நிறுவனம் இவ்வாறு இந்திய சந்தையில் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துவது இது முதல்முறை அல்ல. இந்த 2019 டிசம்பரில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான கார்கள் அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தை விட விற்பனையில் முன்னேற்றத்தை தான் பெற்றுள்ளன. கடந்த மாதத்தில் கார்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிக பெரிய மாற்றம் என்னவென்றால், 2019 நவம்பரில் எஸ்யூவி கார்களின் விற்பனையில் முதலிடம் பிடித்த கியா செல்டோஸ் மாடல் இந்த முறை முதல் 10 இடங்களுக்குள்ளாக கூட வரவில்லை என்பது தான்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top-Selling Cars In India For December 2019: Maruti Vitara Brezza Regains The Best-Selling SUV Title
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X