மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

இந்தியாவில் கடந்த மே மாத மத்தியில் வரை அமலில் இருந்த ஊரடங்கினால் அனைத்து டீலர்ஷிப் ஷோரூம்களும் மூடப்பட்டு இருந்த நிலையில் 2020 மே மாதத்திற்கான கார்களின் விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஏற்கனவே கூறியதுபோல் கடந்த மே மாதத்தில் முதல் பாதி நாட்கள் ஊரடங்கினால் டீலர்ஷிப்கள் மூடப்பட்டு இருந்ததால் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மே மாதத்தில் கார்களின் விற்பனை மிக பெரிய வித்தியாசத்துடன் குறைவாக உள்ளது.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

இருப்பினும் கடந்த மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சற்று ஆறுதல் அளிக்கும் புதிய அறிமுகமான க்ரெட்டா மாடல் 3,212 யூனிட்கள் விற்பனையுடன் கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான கார்களின் லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

இதன் மூலமாக மாருதி சுசுகியின் தயாரிப்புகள் பிடித்து வந்த முதலிடத்தை ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று மிக நீண்ட மாதங்களுக்கு பிறகு பிடித்துள்ளது என்றாலும், க்ரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2019 மே மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 65 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அப்போது 9,000 க்ரெட்டா கார்கள் விற்பனையாகி இருந்தன.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

இதற்கு அடுத்து மாருதியின் எம்பிவி மாடலான எர்டிகா 2,353 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. இந்த எண்ணிக்கை 2019 மே மாதத்தை காட்டிலும் 73% குறைவு. மூன்றாவது இடத்திலும் இதே மாருதி நிறுவனத்தின் செடான் மாடலான டிசைர் 2,215 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்து உள்ளது.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

இந்த டாப்-10 லிஸ்ட்டில் மிக நீண்ட மாதங்களுக்கு பிறகு பொலிரோ எஸ்யூவி மாடலின் மூலமாக மஹிந்திரா நிறுவனம் நுழைந்துள்ளது. 1,715 யூனிட்கள் விற்பனையாகி இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தில் உள்ள பொலிரோ மாடலின் இந்த விற்பனை எண்ணிக்கை 2019 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 71 சதவீதம் குறைவாகும்.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

மீண்டும் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பாக ஈக்கோ வேன் மாடல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. வழக்கமாக இந்த லிஸ்ட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிடக்கூடிய ஈக்கோ மாடல் கடந்த மே மாதத்தில் 1,617 யூனிட்கள் சந்தையில் விற்பனையாகியுள்ளது. அதேநேரம் 2019 மே மாதத்தில் இந்த மாடல் சுமார் 11,000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

மாருதி ஈக்கோவை மிகவும் நெருக்கமாக பின் தொடர்ந்தவாறு கியா மோட்டார்ஸின் செல்டோஸ் எஸ்யூவி மாடல் உள்ளது. ஏனெனில் இந்த எஸ்யூவி மாடலின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கை ஈக்கோவை விட வெறும் 6 யூனிட்கள் மட்டுமே குறைவாக 1,611 யூனிட்களாக உள்ளது.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?
Company Domestic Sales Change (%) Exports
May'20 May'19
Maruti Suzuki 13,865 1,21,018 -88.54 4,651
Hyundai 6,883 42,502 -83.8 5,700
Mahindra 3,867 20,608 -81 NA
Tata Motors 3,153 12,437 -74.6 NA
Renault 1,753 5,949 -70.5 NA
Kia 1,661 NA NA NA
Toyota 1,639 12,138 -86.49 928
Volkswagen 1,404 2,685 -47.7 NA
MG Motor 710 NA NA NA
Ford 571 6,361 -91 NA
Skoda 508 1,148 -55.7 NA
Nissan 378 1,858 -79.7 NA
Honda 375 11,422 -96.7 NA
FCA 93 991 -90.6 NA

இதற்கு அடுத்து ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் மாருதியின் தயாரிப்பு மாடல்களான பலோனோ மற்றும் ஆல்டோ கார்கள் உள்ளன. சந்தையில் பிரபலமான மாருதி தயாரிப்புகளாக உள்ள இவற்றில் பலோனோ மாடல் கிட்டத்தட்ட 1,600 யூனிட்கள் விற்பனையையும், ஆல்டோ 1,500 யூனிட்கள் விற்பனையையும் சந்தையில் பதிவு செய்துள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2019 மே மாதத்தை காட்டிலும் சுமார் 90 சதவீதம் குறைவாகும்.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

இந்த லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் 1,379 யூனிட்கள் விற்பனையுடன் டாடா அல்ட்ராஸும், 1,257 யூனிட்கள் விற்பனையுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடலும் உள்ளன. இதில் இந்திய சந்தையில் நீண்ட காலமாக விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல் இந்த லிஸ்ட்டில் முதன்முறையாக நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது?

கொரோனா வைரஸினால் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கடந்த மே மாத மத்தியில் வரையில் அமலில் இருந்த ஊரடங்கினால் மே மாதத்திலாவது இவ்வாறு கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தை பூஜ்ஜிய வாகன விற்பனையுடன் தான் இருந்தது. இருப்பினும் ஊரடங்கு தளர்வினால் பழைய நிலைமை வெகு தூரம் இல்லை என்பதை காட்டும் விதமாகவே இந்த மே மாத விற்பனை நிலவரம் உள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Car sales in May 2020 down nearly 85 percent year-on-year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X