உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

கடந்த ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையான கார்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது. அதனை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

ஆட்டோபுண்டிஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்த லிஸ்ட்டின்படி பார்க்கும்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கடந்த மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஹேட்ச்பேக் ரக காரான இது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 13,654 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் இதன் விற்பனை எண்ணிக்கையான 11,600-ஐ காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். தொடர்ச்சியாக விற்பனையில் முதலிடத்தை பிடித்து வந்த இந்த மாருதி கார் ஊரடங்கினால் விற்பனையில் சற்று சரிவை கண்டது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

இதன் காரணமாக கடந்த மே மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் லிஸ்ட்டில் ஹூண்டாய் க்ரெட்டா முதலிடத்திற்கு வந்தது. இருப்பினும் அடுத்த ஜூன் மாதத்தில் இழந்த தனது இடத்தை இந்த ஹேட்ச்பேக் கார் மீண்டும் பிடித்துவிட்டது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இதே மாருதி நிறுவனத்தின் மற்றொரு ஹேட்ச்பேக் மாடலான வேகன்ஆர் உள்ளது. 13,515 மாதிரிகள் விற்பனையாகி இந்த கார் இரண்டாவது இடத்தை பிடித்தாலும், இந்த எண்ணிக்கை 2020 ஜூலையை காட்டிலும் 10 சதவீதம் குறைவாகும்.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

ஏனெனில் அப்போது இந்த கார் 15,062 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. மாருதி நிறுவனத்திற்கு தொடர் வெற்றி என்பதுபோல் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தையும் இந்நிறுவனத்தின் பலேனோ ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடல் பெற்றுள்ளது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த மாடல் 2019 ஜூலை மாதத்தை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாக 11,575 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளது. இதற்கு அடுத்து ஒரு வழியாக தொடர்ச்சியாக வரும் மாருதி தயாரிப்புகளின் பெயர்களை உடைத்து கொண்டு ஹூண்டாயின் க்ரெட்டா நான்காம் இடத்தில் உள்ளது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

ஹூண்டாய் மோட்டார்ஸில் இருந்து சமீபத்தில் புதிய தலைமுறையை பெற்றிருந்த இந்த மாடல் தற்சமயம் இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யூவி ரக காராக விளங்குகிறது. இந்த நிலை கடந்த ஜூலை மாதத்திலும் தொடர்ந்துள்ளது. மொத்தம் 11,459 க்ரெட்டா மாதிரிகள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

அதுவே 2019 ஜூலையில் வெறும் 6,585 யூனிட்களே விற்பனையாகி இருந்தது. இதன் மூலம் இந்த எஸ்யூவி மாடல் அடைந்துள்ள சுமார் 75 சதவீத வளர்ச்சி முழுக்க முழுக்க இதன் புதிய தலைமுறையை சாரும். இதற்கு அடுத்து மீண்டும் மாருதியின் தயாரிப்பாக ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

இதன் 10,173 மாதிரி கார்கள் கடந்த மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் குறைவு. இதனை தொடர்ந்தும் டிசைர், எர்டிகா, ஈக்கோ என ஒரே மாருதி தயாரிப்புகளே வரிசை கட்டி நிற்கின்றன. இதில் அதிகப்பட்சமாக ஆறாவது இடத்தில் உள்ள டிசைர் 9,046 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

இவற்றிற்கு அடுத்து ஒன்பதாவது இடத்தில் ஹூண்டாயின் க்ராண்ட் ஐ10 மாடலின் பெயர் நம் கண்ணில் படுகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த கார் 2019 ஜூலையை காட்டிலும் கடந்த மாதத்தில் நல்லப்படியாகவே விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்துள்ளது. அதாவது இதன் விற்பனை வளர்ச்சி சுமார் 65 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

உலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...

பத்தாவது இடத்தில் கியா மோட்டார்ஸின் செல்டோஸ் எஸ்யூவி 8,270 மாதிரிகள் விற்பனையுடன் உள்ளது. இந்த 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுஸுகி கார்களே ஆக்கிரமித்துள்ளன. இது நிச்சயம் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிக்கட்டி வரும் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதிக்கு பெரிய அளவில் ஆறுதலை அளித்திருக்கும்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Selling MPV India July 2020 Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X