எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

2020-19 பொருளாதார ஆண்டின் எம்யுவி/எம்பிவி கார்களின் விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இந்திய சந்தையில் மிகவும் சிறிய அளவு அதிகரித்துள்ள எம்யுவி/எம்பிவி கார்களின் விற்பனையை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

கடந்த நிதியாண்டில் சந்தையில் மற்ற அனைத்து கார் பிரிவுகளின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்த போதிலும் எம்பிவி கார்களின் விற்பனை இதற்கு முந்தைய 2018-19 பொருளாதார ஆண்டை காட்டிலும் 1 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2019-20 ஆண்டில் 2,83,583 எம்யுவி/எம்பிவி கார்கள் விற்பனையாகியுள்ளன.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

அதுவே இந்த இரு ரக மாடல்கள் 2018-19 ஆண்டில் 1 சதவீதம் குறைந்து 2,81,594 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த லிஸ்ட்டில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா மாடல் முதலிடத்தை பிடித்து இந்தியாவில் அதிகளவில் விற்பனையான எம்பிவி மாடல் என்ற பெயரை பெற்றுள்ளது.

MOST READ: பனி சிதைவில் சிக்கிய மஹிந்திரா பொலிரோ.. கடும் குளிரை பொருட்படுத்தாமல் உதவி கரம் நீட்டிய ராணுவம்!

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

இந்த பொருளாதார ஆண்டு முடிவில் 90,547 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ள மாருதி எர்டிகா கார், 2018-19 நிதியாண்டு முடிவில் மொத்தம் 65,263 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதன் மூலம் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும்போது 39 சதவீத வளர்ச்சியை சந்தையில் அடைந்துள்ளது.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

இரண்டாம் தலைமுறை எர்டிகா மாடல் வெளிபுற மற்றும் உட்புற அப்டேட்களுடன் புதிய எடை குறைவான ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு கடந்த 2018ல் அறிமுகமானது. 7 இருக்கை அமைப்புடன் விற்பனையை செய்யப்பட்டு வரும் இந்த கார் இந்திய சந்தையில் மற்ற அனைத்து எம்பிவி/எம்யுவி கார்களை காட்டிலும் மிக பெரிய அளவில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

MOST READ: கேப்பில் கிடா வெட்டிய கொள்ளையர்கள்... டூவீலரை திருட பலே டெக்னிக்... சென்னையில் அதிர வைக்கும் சம்பவம்

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

எந்த அளவிற்கு என்றால் எர்டிகா மாடலுக்கும், இந்த லிஸ்ட்டில் இதற்கு அடுத்த நிலையில் உள்ள காருக்கும் கிட்டத்தட்ட 31 ஆயிரம் யூனிட்கள் வித்தியாசமாகும். எர்டிகா மாடலுக்கு அடுத்த இடத்தை, அதாவது இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் 59,045 யூனிட்கள் விற்பனையுடன் பெற்றுள்ளது.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

2018-19 நிதியாண்டு முடிவில் மாருதி எர்டிகா மாடலை விற்பனையில் முந்தியிருந்த பொலிரோ மாடல் 84,144 யூனிட்கள் விற்பனையுடன் அப்போது முதலிடத்தையும் பிடித்திருந்தது. இந்த வகையில் கடந்த பொருளாதார ஆண்டில் விற்பனையில் 29.8% வீழ்ச்சியை சந்தித்துள்ள பொலிரோ மாடலுக்கு கிராமப்புறங்களில் வாடிக்கையாளர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: இதுதான் உலகின் வேகமான சுசுகி ஜிம்னி கார்... இதன் என்ஜின் ஆற்றலை நிச்சயம் நீங்கள் அறிய வேண்டும்...

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

இதனை நெருக்கமாக 53,686 யூனிட்கள் விற்பனை எண்ணிக்கையுடன் டொயோட்டாவின் பிரபலமான இன்னோவா க்ரிஸ்ட்டா பின் தொடர்ந்து வருகிறது. 2018-19 ஆண்டில் பொலிரோ மாடல் முதலிடத்தை பிடித்திருந்த போது 77,924 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தில் இருந்து இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலுக்கு முடிவுக்கு வந்துள்ள இந்த பொருளாதார ஆண்டு மோசமான ஆண்டு என்றே சொல்ல வேண்டும்.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

ஏனெனில் இந்த கார் விற்பனையில் சுமார் 31 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் எடியோஸ், லிவா மற்றும் கரோல்லா அல்டிஸ் போன்ற மாடல்களின் விற்பனையை நிறுத்தியிருந்த போதிலும் தொடர்ந்து இன்னோவா க்ரிஸ்ட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MOST READ: அமெரிக்கரின் கண்களுக்கு தெய்வமாக மாறிய இந்திய பெண்... படையப்பாவில்கூட இத்தனை கார்களை பார்க்கவில்லை!

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

இதற்கு அடுத்த இரு இடங்களில் 2019-20 பொருளாதார ஆண்டில் அறிமுகமான ரெனால்ட் ட்ரைபர் மற்றும் மாருதி எக்ஸ்எல்6 மாடல்கள் உள்ளன. முறையே 33,860 மற்றும் 22,117 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த இரு புதிய மாடல்களும் தான் இந்த இரு நிறுவனங்களுக்கும் அதீத லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளன.

Rank Model FY 2020 FY 2019 Growth (%)
1 Maruti Ertiga 90,547 65,263 38.74
2 Mahindra Bolero 59,045 84,144 -29.83
3 Toyota Innova 53,686 77,924 -31.10
4 Renault Triber 33,860 0 -
5 Maruti XL6 22,117 0 -
6 Mahindra Marazzo 12,693 24,130 -47.40
7 Kia Carnival 3,187 0 -
8 Tata Hexa 2,160 7,547 -71.38
9 Mahindra Xylo 2,072 5,251 -60.54
10 Honda BR-V 1,959 5,213 -62.42
11 Datsun Go Plus 1,737 5,068 -65.73
12 Renault Lodgy 352 880 -60.00
13 Toyota Vellfire 168 0 -
எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

குறிப்பாக ட்ரைபர், இந்தியாவில் பெரிய அளவில் எந்த லாபத்தையும் காணாத ரெனால்ட் நிறுவனத்திற்கு நம்பிக்கை தூணாக விளங்குகிறது. பிஎஸ்6 தரத்தில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் உள்ள ட்ரைபர் மாடல் அதிகப்பட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க் திறனில் இயங்கவல்லது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக உள்ளது.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

மாருதி எக்ஸ்எல்6 மாடல் நெக்ஸா அவுட்லெட்கள் மூலமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்தாம் இடத்தில் 12,693 யூனிட்கள் விற்பனையுடன் மஹிந்திராவின் மராஸ்ஸோ கார் உள்ளது. இதன் விற்பனை 2018-19 ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

இதற்கு அடுத்த இடங்களில் உள்ள கார்கள் 4 இலக்கத்திலும் மற்றும் அதற்கு குறைவான இலக்கங்களிலேயே விற்பனை எண்ணிக்கையை கொண்டுள்ளன. இதில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான கார்னிவல் எம்பிபி 7வது இடத்தில் உள்ளது.

எம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..!

3,187 யூனிட்கள் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ள இந்த எம்பிவி கார் இந்த எண்ணிக்கையை அறிமுகமான மூன்று மாதங்களிலேயே அடைந்துள்ளது. 7-இருக்கை, 8-இருக்கை மற்றும் 9-இருக்கை வெர்சன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.24.95-33.95 லட்சமாக உள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Best selling MUVs and MPVs for FY2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X