இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட டிரக்குகளை வாங்கி விற்பனை செய்யும் பிரிவை துவங்கி இருக்கிறது பாரத் பென்ஸ் நிறுவனம்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

இந்தியாவின் டிரக் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பென்ஸ் உள்ளது. தனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மூலமாக இந்தியாவின் டிரக் சந்தையை குறுகிய காலத்தில் மாற்றிக் காட்டி அசத்தி உள்ளது. மேலும், விற்பனை, சர்வீஸ் உள்ளிட்டவற்றிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

இந்த நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட டிரக்குகளுக்கு இருக்கும் வர்த்தக வாய்ப்பை மனதில் வைத்து, புதிய விற்பனை பிரிவை துவங்கி இருக்கிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

Bharat Benz Exchange என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய வர்த்தகப் பிரிவின் மூலமாக, பயன்படுத்தப்பட்ட டிரக் உள்ளிட்ட தனது வர்த்தக வாகனங்களை எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் மற்றும் டிரக் போக்குவரத்து நிறுவனங்கள் பெற முடியும்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

பயன்படுத்தப்பட்ட டிரக்குகளை வாங்கி, அதனை பல்வேறு கட்ட பரிசோதனைகளை செய்து பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படும். மேலும், பழுதுகள் நீக்கப்படுவதுடன், டிரக்கில் உள்ள அனைத்து குறைகளும் களைந்து விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

மேலும், டிரக்கின் ஆவணங்கள் முறைப்படி சரிபார்க்கப்பட்ட பின்னரே விற்பனைக்கு செல்லும். இதனால், பயன்படுத்தப்பட்ட பாரத் பென்ஸ் டிரக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் நிம்மதியான உணர்வை பெற முடியும்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

பயன்படுத்தப்பட்ட டிரக்குகள் புனரமைக்கப்பட்டு வழங்கப்படுவதுடன், அதற்கு வாரண்டியும் வழங்கப்படுவதுடன், ஆண்டு பராமரிப்புத் திட்டங்களுடன் விற்பனை செய்யப்படும். இதன்மூலமாக, டிரக் நீடித்த உழைப்பை வழங்கும்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

தனது பயன்படுத்தப்பட்ட வாகனப் பிரிவின் மூலமாக விற்பனை செய்யப்படும் டிரக்குகளுக்கு சிறந்த நிதி நிறுவனங்கள் மூலமாக கடனுதவி திட்டங்களையும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுத் தருவதாக பாரத் பென்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையை துவங்கியது பாரத் பென்ஸ்!

நாடு முழுவதும் உள்ள பாரத் பென்ஸ் டீலர்களில் இந்த எக்ஸ்சேஞ்ச் என்ற யூஸ்டு டிரக் வாகன விற்பனைப் பிரிவு செயல்படும். பாரத் பென்ஸ் இணையதளம் மூலமாக பயன்படுத்தப்பட்ட டிரக்குகள் குறித்த விபரங்களை பெறலாம். பயன்படுத்தப்பட்ட டிரக் சந்தையில் வாடிக்கையாளர்கள் வட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், சில நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படும் பாரத் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
BharatBenz has Launched used commercial vehicle sales in India.
Story first published: Sunday, August 9, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X