Just In
- 2 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காரையே வீடாக மாற்றிய கொரோனா போராளி.. நிச்சயம் வரவேற்கதக்க முன்னுதாரணம்! முதலமைச்சரை கவர்ந்த சம்பவம்!
கொரோனாவிற்கு எதிராக போர் செய்து வரும் அரசு மருத்துவர், அவரது காரையே படுக்கையறையாக மாற்றியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

காற்றைவிட மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கின்றது. இதன் பரவும் வேகம் காட்டு தீயையே மிஞ்சும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த உலகிற்கே பேராபத்தை விளைவிக்கும் வகையில் மிக வேகமாக இந்த வைரஸ் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால், ஒட்டு மொத்த மனித இனிமே அச்சத்தில் உறைந்து நிற்கின்றது.

தற்போதுவரை இந்த வைரசிடம் இருந்த பாதுகாப்பதற்கான மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால் மனிதர்கள் அனைவரும் அந்த வைரசைக் கண்டு தலை தெறித்து ஓட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகையால்,பலர் சொந்த வீட்டில் இருந்தும் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்க இதுவே சிறந்த வழியாகவும் உள்ளது.
MOST READ: இந்தியாவுக்காக ஒரு நல்ல முடிவை எடுத்த டொயோட்டா!

இந்தியாவில் இதுவரை இந்த வைரசின் தொற்று ஆயிரக் கணக்கில் மட்டுமே உள்ளது. ஆனால், தற்போது மக்களிடத்தில் இருக்கும் அச்சமற்ற நிலையைக் கண்டால், இது எப்போது வேண்டுமானாலும் உச்சபட்ச அதிகரிக்கப்பை எட்டலாம் என அஞ்சப்படுகின்றது. ஏனென்றால், ஆரம்பத்தில் நூற்றுக் கணக்கில் மட்டுமே இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் காணப்பட்டது. தற்போது, அது ஆயிரம் என்ற எண்ணிக்கையை வெகு விரைவில் எட்டியிருக்கின்றது.

எனவே, கண்களுக்கே புலப்படாத இந்த வைரசுக்கு எதிராக இந்தியாவில் அறிவிக்கப்படாத போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. உலகளவிலே இதே நிலைதான் நீடிக்கின்றது. இந்த போரில் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கே மிக அதிகமாக உள்ளது. அதிலும், மருத்துவர்களின் பங்கு சற்றே கூடுதலாகவே காணப்படுகின்றது.
MOST READ: கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா டாக்சி!

அவர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக, வீட்டிற்குகூட செல்லாமல் சில டாக்டர்கள், மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த வகையிலான ஓர் மருத்துவரைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இவர் வீட்டுக்கு செல்ல முடியாத காரணத்தால் தனது மாருதி சுசுகி இக்னிஸ் காரையே மினி வீடாக மாற்றியிருக்கின்றார். தன்னிடம் இருந்து கொரோனா வைரஸ், தன்னுடைய குடும்பத்தினருக்கு பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவர் இத்தகைய கசப்பான தனிமைப் படுத்துதலைத் தனக்கு தானே வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்கள் பலவிதமான பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அதன் அதி-தீவிர பரவும் தன்மை, அவர்களையும் நோய் வாய்க்கு உட்படுத்தி விடுகின்றது. சமீபத்தில்கூட, கொரோனா தொற்றுடையவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர், வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

இதன்காரணமாகவே, கொரோனா தொற்றுடையவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வீடு திரும்பாமல் மருத்துவமனையிலேயே தங்கி பணி புரிந்து வருகின்றனர்.
அந்தவகையில்தான், மருத்துவர் சச்சின் நாயக் தன் வீட்டைத் துறந்து, காரிலேயே தங்கி வருகின்றார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார்.

தினமும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்கு பதிலாக அவரது மாருதி சுசுகி இக்னீஸ் காருக்கு திரும்புகின்றார். அங்கு அவர் படுத்து உறங்குவதற்கு ஏதுவாக காரின் பின் இருக்கைகளை இரண்டையும் நீக்கிவிட்டு படுக்கை வசதி ஏற்படுத்தியுள்ளார். இதில், தனது ஓய்வு நேரத்தை அவர் செலவிட்டு வருகின்றார்.

சக மருத்துவர்களைப் போலவே, சச்சினும் அதிக பாதுகாப்பை வழங்கும் கவசங்களைப் பயன்படுத்தி வருகின்றார். என்னதான் பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்தினாலும், குடும்ப பாதுகாப்பிற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லாத சூழலே நிலவுகின்றது. இந்த காரணத்தினாலயே இத்தகைய சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளார்.

மேலும், குடும்பத்தினரிடம் பேச தோன்றினால் வீடியோ கால் அல்லது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உரையாற்றி மகிழ்ந்து வருகின்றார்.
மருத்துவரின் இந்த நிலையைக் கண்டு பலர் சோகத்தில் உரைந்திருக்கின்றனர். மேலும், கொரோனாவிற்கு எதிரான போரில், அவரின் மகத்துவமான பணியைக் கண்டு பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகான், அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வாயிலாக, மருத்துவர் சச்சினுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஒருவர் தாக்கினாலும் உடனே அதன் அறிகுறிகளைக் காண்பிப்பதில்லை. சில நாட்கள் சென்ற பின்னரே அதன் தீவிர கொடிய தன்மையைக் காண்பிக்கின்றது.

அதற்குள்ளாக, கொரோனோ தொற்றை அறியாத அந்நபர் அவரைச் சார்ந்த பல நூறு பேருக்கு அந்த வைரசைப் பரப்பி விடுகின்றார். அவரால் பாதிக்கப்பட்ட சக நண்பர்களும், அவர்களை அறியாமலே மேலும் சில நூறு பேருக்கு பரப்பிவிடுகின்றனர். இது தொடர் சங்கிலியாக முடிவற்றநிலையில் பரவிக் கொண்டே இருக்கும்.

இத்தகைய அதி-தீவிர பரவும் தன்மையை இந்த வைரஸ் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே, அதனை ஆரம்பத்திலேயே தடுக்கும் சுய தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இது, பலருக்கு கசப்பானதாக இருக்கலாம். ஆனால், கண்ணுக்கே தெரியாத எதிரியை (கொரோனா வைரஸ்) வீழ்த்த இது மிக அவசியமானதாக உள்ளது. இதை உணர்த்தும் வகையில் மருத்துவர் சச்சின் செயல்பட்டு வருகின்றார்.