ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

ஆசைப்பட்டு வாங்கிய முதல் எலெக்ட்ரிக் கார் பில் கேட்சுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில், காற்று மாசுபாடு மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. இதுதவிர பெட்ரோல், டீசலில் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

எனவே இவ்விரு பிரச்னைகளையும் சமாளிக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாது, உலகின் அனைத்து நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் ஏராளமான நன்மைகள் உள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் மின்சார வாகனங்கள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாது.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

மேலும் பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களில் குறைகளும் இல்லாமல் இல்லை. மின்சார வாகனங்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக இருப்பது ஒரு பெரிய பிரச்னை. இதுதவிர சார்ஜ் நிரப்ப அதிக நேரம் எடுத்து கொள்வதும் முக்கியமான பிரச்னையாக உள்ளது.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

இந்த 2 முக்கிய பிரச்னைகளால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை பலர் தவிர்த்து வருகின்றனர். இந்த பிரச்னைகளை, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தற்போது சுட்டி காட்டியுள்ளார். Marques 'MKBHD' Brownlee என்ற யூ-டியூபருக்கு, பில் கேட்ஸ் தற்போது இன்டர்வியூ கொடுத்துள்ளார். அப்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து பில் கேட்ஸ் பேசியுள்ளார்.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

போர்ஷே டைகன் (Porsche Taycan) எலெக்ட்ரிக் காரை பில் கேட்ஸ் வாங்கியுள்ளார். அவர் வாங்கிய முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். இந்த தகவலை பேட்டியின் போது பில் கேட்ஸ் வெளியிட்டார். அத்துடன் கார்பன் உமிழ்வை குறைக்கும் வல்லமை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இருப்பதாகவும் பேட்டியில் பில் கேட்ஸ் தெரிவித்தார்.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் ஒரு சில தடைகள் இருப்பதாகவும் பில் கேட்ஸ் கூறினார். தனது மின்சார கார் பிரிமீயம் வாகனமாக இருப்பதாகவும், எனவே அதனை ஓட்டுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்தார். ஆனால் புதிய போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் காரில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? என யூ-டியூபர் கேள்வி எழுப்பினார்.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

இதற்கு பில் கேட்ஸ் கூறிய பதில் தெரிந்தால், போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் காரை வாங்கும் முடிவை மக்கள் மறுபரிசீலனை செய்யக்கூடும். ஆம், ஒரு முறை முழுமையாக நிரப்பும் சார்ஜை வைத்து இந்த கார் கடக்கும் தொலைவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என பில் கேட்ஸ் அதிரடியாக தெரிவித்துள்ளர்.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

அதேபோல் யாரேனும் நீண்ட தொலைவு பயணிக்க விரும்பினால், பேட்டரியை ரீசார்ஜ் செய்வதில் இருக்கும் குறைகள் காரணமாக, அவர்கள் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் எனவும் பில் கேட்ஸ் கூறியுள்ளார். மேலும் எரிபொருள் நிரப்புவதுடன் ஒப்பிடுகையில், பேட்டரியை ரீசார்ஜ் செய்வது அதிக நேரம் எடுத்து கொள்வதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

ஆம், உண்மைதான். பெட்ரோல், டீசல் என்றால், வெறும் ஐந்து நிமிடங்களில் முழு டேங்க்கையும் நிரப்பி விட்டு சென்று கொண்டே இருக்கலாம். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை முழுமையாக நிரப்ப அதிக நேரம் ஆகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடாக இந்த பிரச்னை பார்க்கப்படுகிறது.

ஆசைப்பட்டு வாங்கிய எலெக்ட்ரிக் காரால் படாதபாடுபடும் பில் கேட்ஸ்... என்ன ஆச்சுனு தெரியுமா?

போர்ஷே டைகன் காரின் டாப் மாடலான டர்போ எஸ் (Turbo S), பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டி விடக்கூடிய அளவிற்கு திறன் வாய்ந்தது. மேலும் போர்ஷே நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Billionaire Bill Gates Is Not Happy With Electric Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X