இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து 2 சீரிஸ் க்ரான் கூபே மாடல் இந்திய சந்தையில் இந்த வருடத்தின் இறுதியில் அறிமுகமாகவுள்ளது. இந்த வகையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ க்ரான் கூபே மாடலை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் மாடல் தற்போதைய 3 சீரிஸ் மாடலிற்கு அடுத்ததாக சந்தையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதன் அறிமுகம் குறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த க்ரான் கூபே மாடல் இந்தியாவில் குறிப்பிட்ட சில டீலர்ஷிப்களில் மட்டும் தான் விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

இந்த எண்ட்ரீ-லெவல் செடான் மாடலுக்கு முன்பதிவுகள் நடைபெற்று வருவதாக வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.33 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 சீரிஸ் க்ரான் கூபே, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் உலகளாவிய அறிமுக மாடல்களில் ஒன்றாகும்.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

ஏனெனில் இந்த செடான் கார் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இந்நிறுவனத்தின் மாடுலர் எஃப்ஏஏஆர் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற இந்த காரில் 4-வீல் ட்ரைவ் உள்ளமைவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஃப்ஏஏஆர் ப்ளாட்ஃபாரம் பிஎம்டபிள்யூ க்ரூப்பின் ஒரு பகுதியான மினி ப்ராண்ட்டில் இருந்து பெறப்பட்டதாகும்.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

இந்த ப்ளாட்ஃபாரத்தின் சிறப்பே இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் கார்களில் கேபின் அமைப்பை காற்றோட்டமாகவும், தயாரிப்பு செலவை குறைக்கவும் செய்யும். இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படாத பிஎம்டபிள்யூ கார்கள் பின்சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடனும் தயாரிப்பு செலவை அதிகம் கொண்டவையாகவும் இருந்தன.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

பிஎம்டபிள்யூவின் புதிய 2 சீரிஸ் க்ரான் கூபே மாடலின் நீளம் 4,526மிமீ, அகலம் 1,800மிமீ, உயரம் 1,420மிமீ மற்றும் வீல்ஸ்பேஸ் அளவு 2,670மிமீ ஆகும். இதற்கு சந்தையில் போட்டியாகவுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமௌசைன் மாடலின் வீல்ஸ்பேஸ் 2 சீரிஸ் மாடலை விட 59மிமீ அதிகமாகும்.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

டிசைன் அமைப்பை பிஎம்டபிள்யூ 8-சீரிஸ் க்ரான் கூபே மாடலில் இருந்து பெற்றுள்ள இந்த 2 சீரிஸ் மாடல், பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய விளக்குகளுடன் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்கள், பெரிய கிட்னி வடிவிலான க்ரில், எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் ஸ்போர்ட்டியான தாழ்வான இண்டேக் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

பின்புறத்தில் இந்த செடான் காரில் அட்டகாசமான டிசைனில் பின் கதவுடன் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், ட்யூல் எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் 8 சீரிஸ் மாடலில் இருந்து எல்இடி டெயில் லேம்ப்கள் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. காரின் உட்புறம் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்திற்காக பெரிய இரு திரைகளுடன் காட்சியளிக்கிறது.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

இவற்றின் மூலமாக காரை ஸ்மார்ட்போனுடன் இணைப்பு தொழிற்நுட்பத்தின் வாயிலாக இணைக்க முடியும் என எதிர்ப்பார்க்கலாம். இவை மட்டுமின்றி பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐட்ரைவ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களாக பின்புற ஏர்-கான் வெண்ட்ஸ், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் உள்பட சில வசதிகல் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

2 சீரிஸ் க்ரான் கூபே மாடல் இரு என்ஜின் தேர்வுகளில் இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்றான 220ஐ 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 192 பிஎச்பி பவரையும், மற்றொரு தேர்வான 220டி 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 190 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷனிற்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

இந்த வருட இறுதியில் இந்தியாவிற்கு வருகிறது பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே...

லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் எண்ட்ரீ-லெவல் பிரிவை சில புதிய தயாரிப்புகளுடன் மேம்படுத்த திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் தான் 2-சீரிஸ் க்ரான் கூபே. இந்திய சந்தையில் இதற்கு போட்டியாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஏ-க்ளாஸ் லிமௌசைன் மாடல் மட்டும் தான் தற்போதைக்கு உள்ளது.

Most Read Articles
English summary
BMW 2 Series Gran Coupe India Launch This Year: Expected To Be Price Rs 33 Lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X