பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் 2020 2 சீரிஸ் க்ரான் கூபே செடான் மாடலை வருகிற அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் இந்த செடான் கார் இந்தியாவில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

புனேக்கு அருகே சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் கூடுதலான-எட்ஜ் பம்பர், பக்கவாட்டு ஸ்கிர்ட்ஸ் மற்றும் பெரிய 5-ஸ்போக் சக்கரங்களின் மூலம் இந்த செடான் காரில் எம்-ஸ்போர்ட் ஸ்டைலிங் தொகுப்பு வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இந்த சோதனை காரில் ஒட்டப்பட்டுள்ள ‘ஏஆர்ஏஐ' ஸ்டிக்கரும், பின்புறத்தில் உள்ள சோதனை கருவிகளும் இந்த கார் ஏஅர்ஏஐ அமைப்பின் மூலமாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இந்த செடான் காரின் என்ஜின் தேர்வுகள் குறித்த தகவல்கள் இன்னமும் தெரியப்படாமலே உள்ளது. ஆனால் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் 2 சீரிஸ் செடான் மாடலை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 220ஐ பெட்ரோல் மற்றும் 220டி டீசல் என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இதில் பெட்ரோல் என்ஜின் 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 189 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும். இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடலுடன் யுகேஎல் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள இந்த புதிய செடான் மாடலில் முன்-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் பயன்படுத்திய ‘அல்டிமேட் ட்ரைவிங் மெஷின்' வடிவத்தில் இந்த கார் இல்லை.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இந்த வடிவத்தை இந்நிறுவனத்தின் இரு-கதவு 2 சீரிஸ் மாடல்களான எம்240ஐ மற்றும் எம்2 காம்பெடிஷன் கார்களுடன் 4-கதவு எம்235ஐ க்ரான் கூபே மாடலும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

இதில் எம்235ஐ க்ரான் கூபே, முன்-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட காராகும். இந்த வருட அக்டோபர் மாதத்தில் 2 சீரிஸ் க்ரான் கூபே மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவரவுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் இதன் விலையை எக்ஸ்ஷோரூமில் ரூ.30-35 லட்சத்தில் நிர்ணயிக்கவுள்ளது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் சோதனை ஓட்டம்... அறிமுகம் எப்போது..?

தற்போதைய 3 சீரிஸ் மாடலுக்கு கீழே புதிய எண்ட்ரீ-லெவல் செடான் மாடலாக நிலைநிறுத்தப்படவுள்ள புதிய 2 சீரிஸ் க்ரான் கூபே மாடல் நேரடியாக ஆடி ஏ3 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமௌசைன் மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடவுள்ளது. இந்த இரு செடான் கார்களும் தற்சமயம் இந்தியாவில் அவற்றின் லேட்டஸ்ட் தோற்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
BMW 2 Series Gran Coupe spied in Pune
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X