புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

விரைவில் அறிமுகமாகவுள்ள 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதை தொடர்ந்து இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புதிய டீசர் படத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

இந்த டீசர் படம் புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய முழு விபரங்களை வெளியிடாவிட்டாலும், இந்த 2021 மாடல் L-வடிவிலான எல்இடி டிஆர்எல்களுடன் புதிய, மெல்லியதான ஹெட்லேம்ப்களையும், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கிட்னி வடிவிலான க்ரில்லையும் பெற்றுள்ளதை வெளிக்காட்டுகிறது.

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

இதில் கவனிக்கத்தக்க மாற்றமாக தனித்தனியாக கொடுக்கப்படும் கிட்னி வடிவிலான க்ரில் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் இணைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் காரின் வெளிப்புறத்தில் திருத்தியமைக்கப்பட்ட எல்இடி டெயில்-லைட்கள், புதிய பம்பர்கள் மற்றும் புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

MOST READ: கெத்து காட்டும் டாடா, மஹிந்திராவின் இந்திய கார்கள்... மோடிஜி-யின் வெளிநாட்டு வாகனங்களுக்கு செம டஃப்

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

இத்தகைய வெளிப்புற மாற்றத்துடன் காரின் உட்புறத்திலும் சில அப்டேட்களை பிஎம்டபிள்யூ நிறுவனம் கொண்டு வந்திருக்கலாம். இதில் முக்கிய அம்சமாக வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

ஏனெனில் தற்போதைய 5 சீரிஸ் மாடலில் உள்ள இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளேவை மட்டுமே இணைக்க முடியும். இதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 530இ வேரியண்ட் உடன் புதியதாக எலக்ட்ரிக்ஃபைடு வேரியண்ட்டையும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் பெறும் எனவும் தெரிகிறது.

MOST READ: ஹூராகென் எவொ காருக்கு மேலும் பெருமை சேர்த்த லம்போர்கினி...

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

இந்த புதிய எலக்ட்ரிக்ஃபைடு வேரியண்ட்டில் 545இ ப்ளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் அமைப்பும் வழங்கப்படவுள்ளது. இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பு குறித்து வெளியாகியுள்ள தகவலில் இன்லைன்-6 என்ஜினானது எலக்ட்ரிக் மோட்டாருடன் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 400 பிஎச்பி பவரை பெற முடியும். இருப்பினும் இதன் இந்திய வெர்சனில் எத்தகைய என்ஜின் அமைப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இந்தியாவில் 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் தற்போதைய மாடலின் என்ஜின் தேர்வுகளை தான் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: ரூ. 10 கோடி மதிப்புள்ள புதிய கார் வாங்கும் திட்டத்தை ஒத்தி வைத்த குடியரசு தலைவர்... ஏன் தெரியுமா?

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் 5 சீரிஸ் வரிசை 530ஐ மாடலில் 252 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், 520டி மாடலில் 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் என்ஜினும், 530டி மாடலில் 265 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டு வருகிறது.

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வரிசை மாடல்கள் இந்தியாவில் ரூ.55.40 லட்சத்தில் இருந்து ரூ.68.40 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகளவில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் வரும் வாரங்களில் அறிமுகமாகவுள்ளது.

MOST READ: இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

புதிய 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் படத்தை வெளியிட்டது பிஎம்டபிள்யூ நிறுவனம்...

சர்வதேச சந்தையில் அறிமுகமான பின்பு 5 சீரிஸின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் எப்போது இந்தியாவிற்கு வரவுள்ளது என்பது தற்போதுவரை தெரியப்படாத ஒன்றாகவே உள்ளது. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலுக்கு போட்டியாக மெர்சிடிஸ்-பென்ஸ் இ-க்ளாஸ், ஜாகுவார் எக்ஸ்எஃப் மற்றும் ஆடி ஏ6 போன்ற மாடல்கள் உள்ளன.

Most Read Articles

English summary
2021 BMW 5 Series facelift teased
Story first published: Sunday, May 17, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X