இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக உலக சந்தையில் விற்பனையாகி கொண்டிருக்கும் 8 சீரிஸ் மாடல் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஎம்டபிள்யூவின் இந்த புதிய மாடலின் இந்திய அறிமுகம் குறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் இந்திய சந்தைக்கு வந்திருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் கொரோனா வைரஸ் உலகையே தலைக்கீழாக திருப்பி போட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா. காரை அறிமுகம் செய்ய முடியாமல் போனாலும், காரின் பெயரை தனது அதிகாரப்பூர்வ இணைத்தள பக்கத்தில் சேர்த்துள்ளது, ஜெர்மனை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான பிஎம்டபிள்யூ.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

இந்த நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு தான் தனது தயாரிப்புகளுக்கு மறுபெயரிட்டது. அதன்படி 6 சீரிஸ், 8 சீரிஸாக மாற்றப்பட்டது. இந்தியாவில் தற்சமயம் 6 சீரிஸின் இரு-கதவு கூபே மற்றும் க்ரான் கூபே மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

க்ளார் ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கார் சர்வதேச சந்தையில் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. விற்பனை, 2019ஆம் வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பமானது. லக்சரி கூபே மாடலான 8 சீரிஸ், அதிகளவில் கஸ்டமைஸேஷன் தேர்வுகளை கொண்டுள்ளது.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

பிஎம்டபிள்யூவின் இணையத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதின்படி இந்த புதிய கூபே கார் 12 ஷேட் தேர்வுகளில் வெளிப்புற பெயிண்ட் அமைப்பு, 15 கலவைகளில் ட்யூல்-டோன் தேர்வுகள் மற்றும் 5 ட்ரிம் தேர்வுகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இந்த காரில் 19 இன்ச் அலாய் சக்கரம் நிலையாகவும் 20 இன்ச் அலாய் சக்கரம் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

பயணிகள் மிகவும் சவுகரியமாக உணர பனோராமிக் சன்ரூஃப், மூன்று நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு ஒன்று, இன்போடெயின்மெண்ட்டின் தொடுத்திரைக்கு ஒன்று என இரு திரைகளை கொண்ட டேஸ்போர்டு உள்ளிட்டவை மின்சாரம் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள் மற்றும் விங் மிரர்களுடன் உள்ளன.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

பிஎம்டபிள்யூ நிறுவனம் 8 சீரிஸ் மாடலை செயல்திறன்மிக்க கூபே மாடலாக அறிமுகப்படுத்தவுள்ளது. இருப்பினும் தற்சமயம் இந்த காரில் எம்8 வழங்கப்படவில்லை. இந்த புதிய காரின் இந்திய வெர்சனில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படும் 3.0 லிட்டர் நேரடி-பெட்ரோல் மற்றும் டீசல் டர்போசார்ஜ்டு என்ஜின்கள் அதிகப்பட்சமாக 300 பிஎச்பி வரையில் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

ட்ரான்ஸ்மிஷனிற்கு பிஎம்டபிள்யூவின் இந்த கூபே மாடலில் 8-ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. எக்ஸ்ட்ரைவ் ஆல்-வீல் ட்ரைவ் தற்போதைக்கு வழங்கபடவில்லை என்றாலும், இதன் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு மட்டுமாவது கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

ஸ்டைலிங் பாகங்களை பொறுத்துவரையில் 8 சீரிஸ் கூபே காரின் முன்புறத்தில் உள்ள பெரிய அளவிலான க்ரில் ஆனது கோபமான கண்கள் வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல் அமைப்புடன் உள்ளது. இவற்றுடன் உள்ள பெரியதான சக்கரங்கள், நீண்ட அடிப்பலகை மற்றும் சாய்வான ரூஃப்லைன் உள்ளிட்டவை இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை மிகவும் அழகாக காட்டுகின்றன.

இந்திய சந்தைக்கு 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலை கொண்டுவரும் பிஎம்டபிள்யூ..

பின்புறத்தில் கிடைமட்டமான டிசைனில் டெயில் லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. 8 சீரிஸ் க்ரான் கூபே மாடலுக்கு உலகளாவிய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சிஎல்எஸ் மற்றும் முந்தைய ஆடி 7 கார்கள் விற்பனையில் போட்டியினை கொடுத்து வருகின்றன.

இந்த கார் இந்தியாவில் அறிமுகமான பிறகு ஆடி ஆர்எஸ்7 மாடலுக்கு சரியான போட்டி மாடலாக அமையும். சிபியூ முறையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 8 சீரிஸ் காரை இந்திய சந்தைக்கு கொண்டுவரவுள்ளதால் இந்த புதிய கூபே மாடலின் ஆரம்ப விலை கிட்டத்தட்ட ரூ.1 கோடி அளவில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
BMW 8 Series Gran Coupe India Website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X