எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்.. புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ அதன் எதிர்கால சொகுசு வசதிகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

உலகம் முழுவதும் பிஎம்டபிள்யூ என அழைக்கப்படும் பேயரிஸ் மோட்டோரன் வெர்க் ஏ.ஜி என்ற நிறுவனம் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. ஜெர்மனைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான இது சொகுசு வாகன விற்பனையில் கொடிகட்டி பறந்து வருகின்றது. இதன் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இந்நிலையில், இந்நிறுவனம் தன்னுடைய எதிர்கால கார்களின் கேபினுக்குள் இடம்பெறும் வசதி மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவலை வெளியிட்டு அதன் ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த புகைப்படங்கள் கார் ஆசை இல்லாதவர்களுக்கும் அதனை தூண்டிவிடும் வகையில் இருக்கின்றது.

குறிப்பாக, நட்சத்திர சொகுசு விடுதிகளுக்கு இணையாக காணப்படும் வசதிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இந்த புத்தம் புதிய அமைப்பினை ஐ3 அர்பன் சூட்-டின் அடிப்படையில் பிஎம்டபிள்யூ உருவாக்கியுள்ளது. இதனை தற்போது லாஸ் வேகாஸில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவில் காட்சிப்படுத்தியுள்ளது. இங்கு வந்த பெரும்பாலான பார்வையாளர்களை இந்த காரின் கேபின் கவர்ந்த வண்ணம் உள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

பயணிகளின் சொகுசு பிரயாண எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே இந்த அர்பன் சூட் கான்செப்டை உருவாக்கியிருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. குறிப்பாக, பயணத்தின்போது நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும் உல்லாசம் மற்றும் சொகுசான சௌகரியத்தை வழங்குவதே முக்கிய இலக்காக இருக்கின்றது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இதன்காரணமாகவே, பிஎம்டபிள்யூ ஐ3-யின் உற்பத்தி மாடலில் இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கேபின் வசதி உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இதனால், இந்த காரின் உள்பக்கம் முழுமுழுக்க லக்சூரியஸ் சூழலுக்கு மாற்றமடைந்துள்ளது. இதற்காக காரின் உள்பக்கம் மற்றும் இருக்கைகள் என அனைத்தும் முற்றிலுமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

அந்தவகையில், காரின் உட்புறம் அதன் எஜமானரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதைப் போன்று காட்சியளிக்கின்றது. இத்துடன், ஒரு பெரிய மற்றும் வசதியான இருக்கை அதில் வழங்கப்பட்டுள்ளது. இதன்கூடவே முன்பக்கத்தில் அந்த எஜமானரின் கால்களுக்கு ஓய்வளிக்கும் வகையிலான ஃபுட்ரெஸ்ட் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பைக் கொண்டு பார்க்கையில், காரில் ஒரே ஒருவர் மட்டுமே சொகுசாக பயணிக்க முடியும் என தெரிகின்றது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இத்துடன், டிரைவருக்கான இருக்கையும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கும் சற்றே லேசான சொகுசு வசதிகள் கொண்ட இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சொகுசு இருக்கையில் அமர்ந்து செல்பவரின் பொழுதுபோக்கிற்காக ஒரு திரை வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைப்பட்டால் விரித்தும், மடக்கியும் வைத்துக் கொள்ள முடியும். இத்துடன், தனிப்பட்ட சவுண்ட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இது வெளியில் உள்ள மற்ற நபர்களை தொந்தரவு செய்யாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

தற்போது, இந்த பிஎம்டபிள்யூ ஐ3 அர்பன் சூட் கொண்ட 20 மாதிரி கார்கள் லாஸ் வேகஸின் சாலைகளில் சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றது. இவை வரும்காலங்களில் உலகமெங்கும் பயணிக்க வைப்பதற்கான முயற்சியில் பிஎம்டபிள்யூ இறங்கியுள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளும் சுற்றுப்புறச்சூழலுக்கு எந்தவகையிலும் தீங்கினை விளைவித்து விடக்கூடாத என்பதில் பிஎம்டபிள்யூ நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளது. அதற்கேற்ப, இந்த காரின் பெரும்பாலான பாகங்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலேயே காட்சியளிக்கின்றது. குறிப்பாக, காரின் ப்ளூர், லெதர் இருக்கை உள்ளிட்டவை பல்வேறு பொருட்கள் மறுசுழற்சி தரத்திலேயே காணப்படுகின்றது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

அதேசமயம், அதீத சொகுசு வசதியின் காரணமாக இந்த காரில் ஏறி, இறங்குவதற்கு அசௌகரியம் ஏற்படுவதற்கான துளி வாய்ப்புகூட இல்லை. அதற்கேற்ப சிறப்பான வடிவமைப்பை பி.எம்.டபிள்யூ ஐ 3 அர்பன் சூட் பெற்றிருக்கின்றது.

ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த இருக்கையின் அருகில் பயணி ஜாலியாக தனது டிரிங்கை வைப்பதற்காக ஸ்டாண்ட் போன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இத்துடன், குளிர்பானங்களை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்கின்ற திறன் கொண்ட பேட்கள் அந்த டேபிளில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், துணி மாட்டும் ஆங்க்கர் மற்றும் தனிப்பட்ட ஸ்டோரேஜ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

இதுபோன்ற அம்சங்களை வைத்துபார்க்கையில், தனிப்பட்ட பயணத்தை விரும்பும் வாடிக்கையாளர்களையே மையமாகக் கொண்டே இந்த கார் வடிவமைக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், காரை இயக்க ஓட்டுநர் தேவை என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக இந்த கார் லக்சூரியஸ் பயணத்தை விரும்புவர்களை கவர்ந்திழுக்கும் வகையிலான பல்வேறு வசதியினைப் பெற்றிருக்கின்றது.

எங்கள் எதிர்கால காரின் கேபின் இப்படிதான் இருக்கும்... புகைப்படம் வெளியிட்டு கிரங்கடித்த பிஎம்டபிள்யூ...!

உள்ளே, தோல் பெரும்பாலும் துணிகள் மற்றும் மரங்களுக்கு ஆதரவாக விநியோகிக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ ஐ 3 அர்பன் சூட்டில் பின்புற பெஞ்ச் இருக்கை இல்லை, அதன் இடம் போதுமான அளவிலான, பெட்ரோல் நிற லவுஞ்ச் நாற்காலியால் எடுக்கப்பட்ட இடமாகும். கூடுதலாக, ஒலி மண்டல அம்சம் பயணிகள் தொந்தரவு செய்யாமல் ஃபிளிப்-டவுன் திரையில் தங்கள் பொழுதுபோக்குகளை அனுபவிக்க அனுமதிக்கும் அல்லது ஓட்டுனரால் கேட்க முடியாத தொலைபேசி உரையாடல்களை நடத்த அனுமதிக்கும். மேலும்.

Most Read Articles
English summary
BMW i3 Urban Suite. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X