முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

ஜெர்மனியில் உள்ள லைப்ஜிக் தொழிற்சாலையில் ஐ8 ஹைப்ரீட் ஸ்போர்ட்ஸ் காரின் தயாரிப்பு பணிகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

பிஎம்டபிள்யூ ஐ8, அதன் எதிர்கால தோற்றம் மற்றும் முன்னோடியான தொழில்நுட்பங்களினால் உலக அளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் காராக விளங்குகிறது. கடந்த 2013ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹைப்ரீட் காரின் விற்பனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 20,000 யூனிட்களை கடந்துவிட்டதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்திருந்தது.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

லேசர் ஹெட்லைட்களுடன் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட முதல் காராக விளங்கும் ஐ8 ஹைப்ரீட் மாடலின் முழுவதும் தயாரிப்பை நிறைவு செய்த கடைசி யூனிட் கார் வருகிற ஜூன் 18ஆம் தேதி தொழிற்சாலையை விட்டு வெளியே செல்லவுள்ளது.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

ஸ்பெஷல் போர்டிமோ ப்ளூ பெயிண்ட் அமைப்புடன் இந்த கடைசி ஐ8 மாடல் ஜெர்மனியின் லொவர் சக்ஸோனி பகுதியில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்படவுள்ளது. ஏன் இதுதான் கடைசி யூனிட் என்றால் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐ8 ஹைப்ரீட் மாடலின் தயாரிப்பை ஏற்கனவே முழுவதுமாக நிறுத்திவிட்டது.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

இதனால் தனது தொழிற்சாலையை விட்டு செல்லும் கடைசி ஐ8 மாடலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிறிய நிறைவு விழாவிற்கு இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. லைப்ஜிக் தொழிற்சாலை ஆனது குறிப்பிட்ட வாகன கட்டமைப்பு மற்றும் புரட்சிக்கர ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட மாடர்ன் கார்களை தயாரிக்க ஆயத்தமாகி வருகிறது.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

இதனால் தான் ஐ8 மாடலின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்த ஹைப்ரீட் மாடலின் 20,448 மாதிரிகளில் தினமும் 6 யூனிட்கள் தயாரிப்பு பணியில் இருக்குமாம். எலக்ட்ரிக் ட்ரைவ் சிஸ்டத்துடன் இந்த காரில் ஹைப்ரீட் அமைப்பானது 7.1 கிலோவாட்.நேரம் பேட்டரி மற்றும் 1.5 லிட்டர் டர்போ என்ஜின் உடன் வழங்கப்பட்டது.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

இதில் என்ஜின் 231 பிஎச்பி பவரையும், எலக்ட்ரிக் மோட்டார் 131 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தி வந்தது. ஆனால் 2018ல் இந்த ஸ்போர்ட்ஸ் காரில் கொண்டுவரப்பட்ட அப்கிரேட் காரின் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலை 143 பிஎச்பி வரையில் அதிகரித்தது. அதேபோல் பேட்டரியின் திறனும் 11.8 கிலோவாட்.நேரம் ஆக உயர்த்தப்பட்டது.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

0-விலிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் அடைந்துவிடக்கூடிய இந்த ஸ்போர்ட்ஸ் காரின் அதிகப்பட்ச வேகம் 250 kmph ஆகும். பிஎம்டபிள்யூ நிறுவனம் ஐ8 மாடலின் தயாரிப்பை நிறுத்தவுள்ள தகவல் கடந்த ஆண்டிலேயே வெளியாகி இருந்தது.

முற்றிலுமாக விடைபெறுகிறது பிஎம்டபிள்யூ ஐ8 ஹைப்ரீட் கார்... இதுதான் கடைசி தயாரிப்பு மாடல்...

இதனால் அப்போதே இங்கிலாந்து உள்பட சில நாடுகளில் இந்த ஸ்போர்ட்ஸ் காருக்கான முன்பதிவுகளை ஏற்பதை பிஎம்டபிள்யூ நிறுவனம் நிறுத்திவிட்டது. இந்தியாவில் ஐ8 ஹைப்ரீட் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை தயாரிப்பு நிறுத்தத்திற்கு முன்னதாக ரூ.2.62 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Last of BMW i8 hybrid sports cars rolls out of Leipzig plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X