458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் இரண்டாவது முழு எலக்ட்ரிக் மாடலான ஐஎக்ஸ்3-ன் விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் காண்போம்.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

2018 பீஜிங் மோட்டார் கண்காட்சியில் முதன்முதலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த எலக்ட்ரிக் கார் இந்நிறுவனத்தின் சீன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு மற்ற நாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ள முதல் பிஎம்டபிள்யூ காராகும்.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

மூன்றாம் தலைமுறை எக்ஸ்3 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த எலக்ட்ரிக் கார் ஐ3 ஹேட்ச்பேக்கின் மேலே நிலைநிறுத்தப்படவுள்ளது. ஐந்தாம் தலைமுறை இட்ரைவ் சிஸ்டத்தினால் புதியதாக வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி தொகுப்பை புதிய ஐஎக்ஸ்3 கார் பெற்றுள்ளது.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 286 பிஎச்பி பவரையும் 458கிமீ ரேஞ்ச்சையும் பெற முடியும். பிஎம்டபிள்யூவி ஐ ப்ராண்ட்டில் அடுத்த 18 மாதங்களில் மூன்று புதிய எலக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகவுள்ளன. இதில் முதலாவது மாடல் தான் ஐஎக்ஸ்3.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இதன் கான்செப்ட் மாடலின் மூலம் பார்க்கும்போது வழக்கமான எக்ஸ்3 மாடலில் இருந்து வேறுபடுவதற்காக ஒவ்வொரு கார்னரிலும் ஒரு செங்குத்தான ஏர் குழாய் வீதத்துடன் முன்புற க்ரில், முன்புற சக்கர ஆர்ச்சுக்கு பின்புறத்தில் ஆல்டர்டு ப்ரீதர் பாகம், திருத்தியமைக்கப்பட்ட சன்னல்கள் மற்றும் சற்று மாற்றியமைக்கப்பட்ட பின்புற பம்பரை இந்த எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

க்ரில், சன்னல்கள் மற்றும் பின்புற பம்பரில் இது எலக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் விதமாக நீல நிறத்தில் பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காற்றியக்கவியலுக்கு உகந்த விதத்தில் வழங்கப்பட்டுள்ள 19 இன்ச் சக்கரங்கள் 0.29 இழுவை குணகத்திற்கு பங்களிக்கின்றன. இதன் உடற் அமைப்பு கார் 4-சக்கர ட்ரைவிங்கை வழங்கும் என்பதை வெளிப்படுத்துகிறது.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இருப்பினும் ஐஎக்ஸ்3 காரில் பின்-சக்கர ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்படலாம். பின்பக்கத்தில் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார் ஏற்கனவே கூறியதுபோல் 286 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

உலகில் அரிதாக கிடைக்கும் உலோகங்களை இந்த எலக்ட்ரிக் மோட்டார் தயாரிப்பில் பயன்படுத்துவதை தவிர்த்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த மோட்டாரை குறைவான அளவில் மாசுவை வெளிப்படுத்தும் வகையிலும், குறைவான செலவிலும் வடிவமைத்துள்ளது.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இதனால் ஐ3 மாடலின் மோட்டாரை காட்டிலும் இதன் எலக்ட்ரிக் மோட்டாரில் ஆற்றல் அடர்த்தி 30 சதவீதம் கூடுதலாக இருக்கும். அதேபோல் இந்நிறுவனத்தின் முந்தைய மோட்டார்களுடன் ஒப்பிடுகையில் ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரின் மோட்டார் அதிக புதுப்பிப்புகளுடன் டார்க் திறனை அதிக ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இந்த வகையில் ஐ3 மாடல் 14,000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் டார்க் திறனை இந்த எலக்ட்ரிக் கார் 17,000 ஆர்பிஎம்-ல் காருக்கு வழங்கும். மேலும் ஆற்றலையும் இதன் ஐந்தாம் தலைமுறை என்ஜின், 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமாகவுள்ள ஐ4 காம்பெக்ட் செடான் மற்றும் பெரிய ஐநெக்ஸ்ட் எஸ்யூவி கார்களுக்கு இணையாக கொண்டிருக்கலாம்.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் கார் 0-விலிருந்து 100 kmph என்ற வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டிவிடும். ஆனால் இந்த கால அளவு 251 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை கொண்ட எக்ஸ்3 எஸ்ட்ரைவ்30ஐ மாடலை காட்டிலும் 0.4 வினாடிகள் அதிகமாகும். ஐஎக்ஸ்3 காரின் அதிகப்பட்ச வேகம் 180kmph ஆகும்.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த எலக்ட்ரிக் காரில் 400 வோல்ட்டில் செயல்படக்கூடிய 80kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஃப்ளோர்பேன் உடன் இணைக்கப்பட்டதன் மூலம் மேம்பட்ட டைனமிக் திறனுக்காக வழக்கமான எக்ஸ்3 மாடலை விட ஈர்ப்பு மையத்தை 75 மிமீ வரையில் தாழ்வாக இந்த எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

458கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது பிஎம்டபிள்யூவின் புதிய ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்...

இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு வேறுபட்ட சார்ஜிங் வாய்ப்புகளை தயாரிப்பு நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்றாக இருக்கும் 150 கிலோவாட்ஸ் டிசி ரேபிட் சார்ஜிங் பேட்டரியின் 80 சதவீத சார்ஜை வெறும் 34 நிமிடங்களில் நிரப்பிவிடும். மற்றப்படி ஐஎக்ஸ்3 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எந்த திட்டமும் தற்போதைக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்திடம் இல்லை.

Most Read Articles
English summary
BMW iX3 EV Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X