வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்! இந்த மின்சார வாகனம் எதற்கு பயன்படும் தெரிஞ்சா மிரண்டுருவீங்க!

வாகன உலகம் இதுவரை கண்டிராத புதுமையான தோற்றம் கொண்ட சைட் கார் பைக்கினை பிஎம்டபிள்யூ நிறுவனம் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் எதற்காக பயன்படும் என தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு சொகுசு கார்களை உற்பத்திச் செய்து வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம், பிஎம்டபிள்யூ மோட்டாராட் என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களையும் தயாரித்து வருகின்றது.

இதன் கார்களைப் போலவே இந்த பைக்குகளும் முற்றிலும் மாறுபட்ட மற்றும் அதிக ஆடம்பர ரகத்திலானவையாக காட்சியளிக்கின்றன. எனவே, விலையும் அதன் கார்களைப் போன்று மிக உயர்ந்தவையாக இருக்கின்றன.

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

இந்நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ஓர் எலெக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதனை உலக நாடுகளில் சைட் கார் என்று குறிப்பிடுவர். இந்த ரக மின்சார பைக்கைதான் அந்நிறுவனம் தற்போது கான்செப்ட் மாடலாக உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

MOST READ: நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா?... இதெல்லாம் செய்யணும்ங்க!

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

பொதுவாக, இம்மாதிரியான வாகனத்தை இந்தியாவைத் தவிர உலக நாடுகள் சிலவற்றில் எளிதில் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவை, கூடுதல் பேட்டரி மற்றும் லக்கேஜ்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனமோ செல்லப்பிராணிகளை வெளியில் அழைத்துச் செல்வதற்காக இந்த பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துள்ளது.

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

செல்லப் பிராணிகளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இதனை விரைவில் விற்பனைக்கான உற்பத்திக்கு உயர்த்தவும் அது திட்டமிட்டுள்ளது.

ஆனால், அதுகுறித்த தகவல் கிடைக்கவில்லை. குறிப்பாக, மனிதர்கள் அதிகம் விரும்பும் நாய் போன்ற செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்வதற்காகவே இந்த வாகனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.

MOST READ: பிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

அதேசமயம், இதுமாதிரியான வாகனத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் மட்டுமே அறிமுகம் செய்யவில்லை. முன்னதாக, ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்த லகோ வலினோ (Iago Valiño) என்கிற வாகனங்களுக்கான டிசைனிங்கை செய்து வரும் நிறுவனம் வடிவமைத்திருந்தது. இதன் ஐடியாவிற்குதான் பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது உயிர் கொடுத்துள்ளது. ஆனால், இந்த தோற்றம் மற்றும் வடிவமைப்பு இதுவரை வாகன உலகம் கண்டிராத வகையில் காட்சியளிக்கின்றது.

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

முக்கியமாக லகோ வலினோ, கூடுதல் ரேஞ்ஜை ஏற்படுத்திக் கொள்வதற்காக எக்ஸ்ட்ரா பேட்டரிகளை கொண்டுச் செல்ல மற்றும் அதிக பார்சலை எடுத்துச் செல்லும் நோக்கிலேயே இந்த பைக்கை வடிவமைத்திருந்தது. ஆனால், இதைதான் பிஎம்டபிள்யூ நிறுவனம் பிரத்யேகமாக செல்லப்பிராணிகளுக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளது.

MOST READ: உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை!

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

கான்செப்ட் மின்சார பைக்காக உருவாகியிருக்கும் இந்த மூன்று சக்கர வாகனத்திற்கு எக்ஸ் இஎல் சோலிடரியோ அட்வென்சர் சைட்கார் மோட்டார்சைக்கிள் என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் டூரிங் ரக மின்சார வாகனம் ஆகும். எனவேதான் இத்தகைய பெயர் அந்த பைக்கிற்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தோற்றம் எதிர்கால மின்சார பைக்குகளையே தோற்கடிக்கும் வகையில் காட்சியளிக்கின்றது.

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

குறிப்பாக அதன் இருக்கை, ஹேண்டில் பார், ப்யூவல் டேங்க் போன்ற அமைப்பு உள்ளிட்ட அனைத்தும் இதுவரை இருசக்கர வாகன உலகம் சந்தித்திராத வகையில் புதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

இந்த மாறுபட்ட தோற்றத்திற்காக மூன்று இரு வித பயன்பாட்டை வழங்கும் ஸ்போக்ஸ் வீல் கொண்ட சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பைக்கின் முன், பின் மற்றும் பக்கவாட்டு ஆகிய பகுதிகளில் எல்இடி மின் விளக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

MOST READ: கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது! எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

இதில், மிக முக்கியமானதாக மூன்று பனி விளக்குகள் காட்சியளிக்கின்றன. அது, செல்லப்பிராணிகளை சுமக்கும் மேடைப் போன்ற அமைப்பின் முன் பக்கத்தில் நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்த மேடை அமைப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் மெட்டல் ஸ்கிட் பிளேட்டுகளால் கட்டமைத்துள்ளது. ஆகையால், இது எம்மாதிரியான சூழ்நிலையிலும் சேதத்தைச் சந்திக்காது. இத்துடன், பிராணிகளை வாகனத்துடன் இருக்கிப் பற்றிக் கொள்ளும் விதமாக மூன்று பெல்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

இது எந்த மாதிரியான மிக கடினமான சாலையாக இருந்தாலும் பிராணிகளை ஒரு போதும் நழுவ விடாது. இதில், பிராணிகளை மட்டுமின்றி எக்ஸ்ட்ரா பேட்டரிகளை எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம் பார்சல், டூல்ஸ்கள், லக்கேஜ்கள் உள்ளிட்டவற்றையும் இந்த சைட்காரில் சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். மேலும், இதன் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக பிஎம்டபிள்யூ டிசி விஷன் கான்செப்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் ஸ்மூத்தான ரைடிங்கிற்கு உதவும்.

வாகன உலகம் கண்டிராத புதுமையான தோற்றம்... எதிர்காலத்தில் இதுமாதிரியான மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரலாம்!

பிஎம்டபிள்யூ-வின் இந்த சைட் கார் எலெக்ட்ரிக் பைக்கில் எம்மாதிரியான ரேஞ்ஜை வழங்கும் பேட்டரிகள் வழங்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், விரைவில் இதுமாதிரியான கான்செப்ட் கொண்ட மின்சார பைக்குகள் பல விற்பனைக்கு வரலாம் என நம்பப்படுகின்றது. இந்தியாவில், வர்த்தக ரீதியில் இம்மாதிரியான வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
BMW Revealed X EL Electric Sidecar Concept. Read In Tamil.
Story first published: Tuesday, June 2, 2020, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X