எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பரவச மூட்டும் வகையில் புதிய எம்3 டூரிங் வேகன் மாடலின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தெரியவந்துள்ள காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

பிஎம்டபிள்யூ எம்3 மாடலின் வேகன் வெர்சன் நிச்சயம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செயல்முறை மற்றும் செயல்திறன் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பாட்டுடன் இருக்கும். ஆனால் எப்படியிருந்தாலும் இந்த டூரிங் மாடலின் அறிமுகத்தை 2023ஆம் ஆண்டிற்கு முன்னதாக எந்தவொரு நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது.

எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

இப்படியிருக்க இந்திய வருகை பற்றி நான் கூறவே வேண்டாம். இருப்பினும் தனது எம் வரிசை தயாரிப்புகளை விரிவுப்படுத்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தீவிரமாக முயற்சிகளை இப்போதில் இருந்தே மேற்கொண்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள டீசர் படத்தில் எம்3 காரின் வேகன் பாடி ஸ்டைலை எளிதாக அடையாளம் காண முடிகிறது.

எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

ஆனால் இந்த படத்தில் காரின் பின்பகுதி மட்டுமே காட்சியளிக்கிறது. இதை தவிர்த்து காரின் மற்ற எந்த பகுதியும் காட்டப்படவில்லை என்றாலும், பின்பக்க நம்பர் ப்ளேட்டில் உள்ள எம் என்ற எழுத்து காரின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

பின்புறத்தில் உள்ள கருப்பு பம்பர் க்ளாடிங், குவாட் எக்ஸாஸ்ட் மூடியுடன் டிஃப்யூஸர் உள்ளிட்டவை நேரடியாக பிஎம்டபிள்யூ எம்3 மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பம்பரின் கூர்மையான டிசைனும் தவிர்க்கப்படவில்லை.

எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

L-வடிவிலான எல்இடி டெயில்லைட்கள் வழக்கமான 3-சீரிஸில் இருந்து பகிரப்பட்டுள்ளன. புதிய எம்3 டூரிங் காரை பற்றிய மற்ற தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், இந்த காரில் வழங்கப்படவுள்ள இயந்திர பாகங்கள் பற்றிய விபரங்கள் நம்பத்தகுந்த

வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளன.

எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

இதன்படி பார்க்கும்போது, புதிய எம்3 வேகன் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் என்ஜினை பெறலாம். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 480 பிஎச்பி மற்றும் 510 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

எம்3 டூரிங் வேகன் காரை பற்றிய ஆவலை டீசர்மூலம் தூண்டிவிட்ட பிஎம்டபிள்யூ... அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்க எக்ஸ்ட்ரைவ் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டம் இதன் காம்பெடிஷன் வெர்சனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் வழங்கப்படலாம்.

Most Read Articles

English summary
BMW M3 Touring Wagon Teased
Story first published: Saturday, August 15, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X