எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் எஸ்யூவி மாடலின் சோதனை பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எஸ்யூவி மாடலின் சோதனை ஓட்டங்களை இந்த வருட துவக்கதிலேயே மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டது. ஆனால் அதன்பின் கொரோனாவினால் நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் இதன் சோதனை பணிகள் அப்படியே நிறுத்தி கொள்ளப்பட்டன.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

ஆனால் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பிஎம்டபிள்யூ உள்பட பெரும்பான்மையான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது இயல்பு பணிகளுக்கு திரும்பி வருகின்றன. இந்த வகையில் தற்போது சோதனை ஓட்டத்தில் எக்ஸ்3 எம் எஸ்யூவி கார் உட்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அடையாளமான கிட்னி வடிவிலான க்ரில் மற்றும் தனித்துவமான எல்இடி டிஆர்எல் விளக்குகள் உள்ளிட்ட சில பாகங்கள் நம் கண்களுக்கு காட்சியளிக்கின்றன.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

இவை மட்டுமின்றி கவனிக்கத்தக்க வகையில் 20 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் எல்இடி டெயில்லைட்களை இந்த சோதனை எக்ஸ்3 எம் மாடல் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் எக்ஸ்3 எம் மாடல் ஸ்டாண்டர்ட் மற்றும் காம்பெடிஷன் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

இந்த இரு வேரியண்ட்களும் அவற்றின் க்ரில் அமைப்பை பொறுத்து வேறுப்படுகின்றன. அதாவது ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது சுற்றிலும் க்ரோம் ஆல் சூழப்பட்ட க்ரில்லையும், காம்பெடிஷன் வேரியண்ட் இதே க்ரில் அமைப்பை கூடுதலாக பளபளப்பான கருப்பு நிறத்திலும் பெறுகின்றன.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

அதேபோல் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 20 இன்ச்சிலும் காம்பெடிஷன் வேரியண்ட்டில் 21 இன்ச்சிலும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் காரில் மற்ற சிறப்பம்சங்களாக இண்டிகேட்டரில் ஓஆர்விஎம்கள், புதிய டிசைனில் பின்புற பம்பர், இரட்டை எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

இந்த எஸ்யூவி காரின் உட்புறத்தில் ஸ்போர்ட்டியான இருக்கைகள், மைய கன்சோலின் இருபக்கங்களிலும் பயணிகளின் முழங்கால்களுக்கான பேட்கள், திருத்தியமைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ரீஸ்டைலில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் கியர் லிவர்கள் போன்றவை பொருத்தப்படுகின்றன.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

பயணிகளின் பாதுகாப்பிற்கு காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் உள்பட ஆட்டோமேட்டிக் ஹை பீம் அசிஸ்ட், பாதை புறப்பாடு எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் தன்னிச்சையாக செயல்படக்கூடிய அவசரகால ப்ரேக் சிஸ்டம் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை இந்த எஸ்யூவி கார் சர்வதேச சந்தையில் பெறுகிறது.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

இயக்கத்திற்கு 473 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர், 6 சிலிண்டர், ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த என்ஜின் வெளியிடும் ஆற்றலை அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தின் வழியாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்க 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

எக்ஸ்3 எம் எஸ்யூவி காரை இந்தியாவிற்கு கொண்டுவருகிறது பிஎம்டபிள்யூ... எந்த விலையில் தெரியுமா...?

எக்ஸ்3 எம் மாடலின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் 0-வில் இருந்து 100 kmph என்ற வேகத்தை 4.2 வினாடிகளிலும், காம்பெடிஷன் வேரியண்ட் சற்று விரைவாக 4.1 வினாடிகளிலும் எட்டிவிடக்கூடியவை. இவற்றின் அதிகப்பட்ச வேகம் 250 kmph ஆகும். ரூ.1.2 கோடியில் இருந்து ரூ.1.5 கோடி வரையில் எக்ஸ்ஷோரூம் விலையினை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பிஎம்டபிள்யூ எஸ்யூவி காரின் அறிமுகம் இந்த வருட இறுதியில் இருக்கலாம்.

Most Read Articles
English summary
BMW X3 M SUV Resumes Testing Ahead of Launch in India
Story first published: Monday, August 10, 2020, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X