பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எஸ்யூவி ரக காரான எக்ஸ்3 எம் மிக விரைவாக இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளதாக ஆட்டோகார் இந்தியா செய்தி தளத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

ரூ.1.1 கோடி அளவில் எக்ஸ்ஷோரூம் விலையினை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் எக்ஸ்3 எம் மாடல் இந்த வருட துவக்கத்திலேயே அறிமுகமாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இப்போது அறிமுகமாக தயாராகுகிறது.

பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

இயக்கத்திற்கு இந்த எஸ்யூவி மாடலில் ட்வின்-டர்போ, 6-சிலிண்டர் என்ஜினை பிஎம்டபிள்யூ நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் எக்ஸ்3 எம் காரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 480 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

அதுவே காம்பெடிஷன் வேரியண்ட்டில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 510 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ஆனால் இந்தியாவில் எக்ஸ்3 எம் மாடலின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் மட்டும் தான் முதலில் அறிமுகமாகவுள்ளது. 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும்.

பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

கூடுதலாக எம் ட்ரைவரின் தொகுப்பை பொருத்துவதின் மூலம் இதன் வேகத்தை 280 kmph வரை அதிகரிக்க முடியும். இந்தியாவில் எக்ஸ்3 எம் எஸ்யூவி மாடல் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள், பனோராமிக் கண்ணாடி மேற்கூரை, பிஎம்டபிள்யூ திரை கீ உள்ளிட்டவற்றுடன் அறிமுகமாகவுள்ளது.

பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

இவை மட்டுமில்லாமல் சைகை கண்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் போன்றவையும் இந்த காரில் பொருத்தப்படவுள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் காரின் கேபினை தங்களுக்கு பிடித்த நிறத்தில் ஏற்ற தையல்களுடன் பெற முடியும். காரில் உள்ள ஒரே ஒரு குறை என்னவென்றால், எண்ட்ரீ-லெவல் வெர்னஸ்கா இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

அதுவே சந்தையில் உள்ள இதன் போட்டி மாடல்கள் பெரும்பான்மையானவற்றில் நப்பா லெதர் இருக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிப்புறத்தில் வழக்கமான எக்ஸ்3 மாடலில் இருந்து வேறுபடும் வகையில் பெரிய அளவிலான பம்பரை ஏற்றுள்ள எக்ஸ்3 எம் மாடலின் முன்புற க்ரில், பம்பர் மற்றும் பக்கவாட்டு வெண்ட்ஸில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூவின் புதிய எஸ்யூவி ரக கார்... எக்ஸ்3 எம் மாடலின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல்

அதேபோல் பிஎம்டபிள்யூ எம் கார்களுக்கு உண்டான குவாட் எக்ஸாஸ்ட் செட்அப்-ஐயும் பார்க்க முடிகிறது. பல விதமான நிறத்தேர்வுகளுடன் வெளிவரவுள்ள இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் விலை மற்றும் செயல்திறன் அடிப்படையில் எந்த காருடனும் நேரடியாக போட்டியிட போவதில்லை. சர்வதேச சந்தையில் இதற்கு போட்டியாக உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 63 ஏஎம்ஜி மற்றும் போர்ஷே மக்கன் டர்போ மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

Most Read Articles

English summary
BMW X3 M India launch in end-August
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X