Just In
- just now
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
- 33 min ago
டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!
- 43 min ago
செக்மெண்ட்டின் நீளமான கார்... பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமோசின் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்...
- 2 hrs ago
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்... வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்!
Don't Miss!
- Lifestyle
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- News
மொத்த கட்சிகளின் குறி இந்த "ஒத்த" தொகுதி மீது.. நிற்க போவது "நம்மவர்" ஆச்சே.. சூடு பறக்குது!
- Sports
அழுத்தம் கொடுத்த "சிலர்".. "அதிரடி மன்னன்" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. பரபர நிமிடங்கள்
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Movies
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம பவர்ஃபுல்லான புதிய எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கியது பிஎம்டபிள்யூ... முழு விபரம்!
சொகுசு கார் மார்க்கெட்டில் பவர்ஃபுல் எஸ்யூவி மாடல்களை களமிறக்குவதில் சொகுசு கார் நிறுவனங்களுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தனது அதிசெயல்திறன் மிக்க எக்ஸ்5 எம் காம்படிஷன் என்ற புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது பிஎம்டபிள்யூ கார் நிறுவனம்.

சொகுசு கார் தயாரிப்பில் பிரபலமான பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது செயல்திறன் மிக்க கார்களை எம் என்ற பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. தனது சொகுசு கார்களின் அடிப்படையில் அதிக சிறப்பம்சங்கள் மற்றும் அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் எம் பிராண்டில் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அந்த வகையில், எக்ஸ்5 சொகுசு எஸ்யூவி காரின் அதிசெயல்திறன் மிக்க மாடலானது எக்ஸ்-5 எம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பவர்ஃபுல் மாடலை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது பிஎம்டபிள்யூ நிறுவனம். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படிஷன் என்ற பெயரில் இந்த மாடல் வந்துள்ளது.

ஆடி ஆர்எஸ் க்யூ-8, லம்போர்கினி உரூஸ் ஆகிய சூப்பர் எஸ்யூவி கார்களுக்கு நிகரான ரகத்தில் இந்த கார் வந்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.1.94 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிரது. இந்த கார் முற்றிலும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 எம் காம்படிஷன் காரில் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் எம் ட்வின்டர்போ தொழில்நுட்பத்துடன், சிறப்பான கூலிங் சிஸ்டத்தை கொண்டதாகவும் பந்தய களத்தில் நிரூபிக்கப்பட்ட எஞ்சினுடன் இந்த கார் வந்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படிஷன் சூப்பர் எஸ்யூவியில் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 600 எச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்கும். எக்ஸ்5 எம் காம்படிஷன் கார் மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்6 எம் காம்படிஷன் காரில் முன்புறத்தில் எம் பிராண்டின் விசேஷமான 21 அங்குல அலாய் வீல்களும், பின்புறத்தில் 22 அங்குல அலாய் வீல்களும் உள்ளன. இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் விசேஷமான எக்ஸ்ட்ரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டிவ் எம் டிஃபரன்ஷியலும் ஆஃப்ரோடு பெர்ஃபார்மென்ஸிற்கு சிறப்பு சேர்க்கும்.

இந்த காரில் லான்ச் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பேடில் ஷிஃப்ட் வசதிகளும் உள்ளன. இந்த காரின் ஸ்டீயரிங் சிஸ்டமும் அற்புதமான ஓட்டுதல் அனுபவத்தையும், நம்பிக்கையான கட்டுப்படுத்தும் உணர்வையும் வழங்கும். கையாளுமை, செயல்திறன் என அனைத்திலும் சிறப்பானதாக இருக்கும். இதன் பிரேக் சிஸ்டமும் கம்போர்ட் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு விதமான கட்டுப்படுத்தும் திறனுடன் வழங்கப்படுகிறது. டிராக், ரோடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகளும் இந்த காரில் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் காம்படிஷன் காரில் 12.3 அங்குல தொடுதிரை சாதனம், கையசைவு மூலமாக கட்டுப்பாட்டு வசதி, வாய்ஸ் கன்ட்ரோல் வசதி, நேவிகேஷன் சிஸ்டம், ஹார்மன் கார்டன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் என்று வசதிகளுக்கு எந்தவொரு பஞ்சமும் இல்லை.