பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்! இதை ஓட்டியவர் யார் தெரியுமா

இந்தியாவின் மிகக் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார் பயணிகளுடன் வலம் வருவதைப் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிகளைக் கொண்ட காராக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த காரில் பயணிப்பது சொகுசு கப்பலில் பயணிப்பதைக் காட்டிலும் அலாதியான உணர்வை ஏற்படுத்தும். எனவேதான் இந்திய தொழிலதிபர்கள் பலரின் கனவு வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

இத்தகைய விலையுயர்ந்த ஆடம்பர காரை ஒரு சில நிறுவனங்கள் மிக அதிக விலையில் இந்தியாவில் வாடகைக்கு வழங்கி வருகின்றன. அந்தவகையில், கேரளாவைச் சேர்ந்த பாபி எனும் தொழிலதிபர், அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு வழங்கி வருகின்றார். ஆனால், சுவாரஷ்யமாக மிகக் குறைந்த கட்டணத்தில் இக்காரை அவர் வாடகைக்கு வழங்கி வருகின்றார்.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

எனவேதான், இந்தியாவின் முதல் குறைந்த வாடகைக் கட்டணம் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் காராக பாபியின் கார் பார்க்கப்படுகின்றது. தொழிலதிபர் பாபி, பிரத்யேகமாக அவர் நடத்தி வரும் ஆக்ஸிஜன் உல்லாச விடுதியில் (Oxygen Resort) வாடகைக்கு தங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் காரை டாக்சியாக வழங்கி வருகின்றார்.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

இந்நிலையிலேயே பயணிகளுடன் அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் சாலையில் வலம் வருவதைப் போன்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. தங்க நிறத்தில் மின்னக்கூடிய அக்கார், சாலையில் செல்லும்போது தனித்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இந்த தனித்துவமான நிறத்தை பாபி வழங்கியிருக்கின்றார்.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

மேலும், அவருடைய புகைப்படத்தை முத்திரையாக பயன்படுத்தி காரின் இரு பக்கவாட்டு பகுதியிலும் ஒட்டியிருக்கின்றார். பொதுவாக, பாபி தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை வெளிநபர்கள் யாரிடமும் கொடுப்பதில்லை என கூறப்படுகின்றது. எனவே, இக்காருக்காகவே தனியாக ஓட்டுநர் ஒருவரை அவர் நியமித்திருக்கின்றார். அவரே, ஆக்ஸிஜன் ரெசார்டிற்கு வரும் கெஸ்ட்களை ரோல்ஸ் ராய்ஸ் காரில் வைத்து சுற்றுலா அழைத்துச் செல்வார்.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

இம்மாதிரியான நிலையில், ரோல்ஸ் ராய்ஸ் காரை தொழிலதிபர் பாபியே இயக்கிச் செல்வது போன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கும் வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றது. ஏன்?, ரோல்ஸ் ராய்ஸ் காரை பாபியே இயக்கினார் என்பதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

ஓட்டுநர் விடுப்பு எடுத்த காரணத்தால், ரோல்ஸ் ராய்ஸ் காரை பாபியோ இயக்கியிருக்கலாம் என அப்பகுதி வாசிகள் சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. பாபி, வாடகை கார் சேவையில் ஈடுபடுத்தி வருவது ரோல்ஸ் ராய்ஸின் பேந்தம் VII மாடல் ஆகும்.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

இக்காரையே ரூ. 25 ஆயிரம் என்ற கட்டணத்தில் அவர் வாடகைக்கு வழங்கி வருகின்றார். அதேசமயம், ரெசார்ட்டின் சிறப்பு பேக்கேஜ்களைத் தேர்வு செய்பவர்களுக்கு 300 கிமீட்டர்களுடன், இலவச பயணத்தையும் அவர் சிறப்பு சலுகையாக வழங்கி வருவதாகக் கூறப்படுகின்றது. இவர், 2 நாட்கள் மற்றும் 3 நாட்கள் என பல்வேறு பேக்கேஜ்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றார்.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

இதில் ஏதேனும் ஓர் பேக்கேஜைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் வாடகை வாகனமாக இயக்கப்பட்டு வருகின்றது. இதே ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VII காரை பிற வாடகை வாகன நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ. 4.5 லட்சம் என்ற கட்டணத்தில் வாடகைக்கு வழங்கி வருகின்றன. அதுவும், வெறும் 80 கிமீ-க்கு இந்த உச்சபட்ச கட்டணத்தை அவை வசூலிக்கின்றன.

பயணிகளுடன் வலம் வந்த இந்தியாவின் முதல் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் கார்... இதை ஓட்டியவர் யார் தெரியுமா?

எனவேதான், இந்தியாவின் மிகக் குறைந்த வாடகை ரோல்ஸ் ராய்ஸ் காராக பாபியின் கார் இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் VII-ன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாயாகும். எனவேதான் பிறர் இக்காரை இயக்க பாபி அனுமதிப்பதில்லை. மேலும், இந்த காரணத்தினால் தான் ஓட்டுநர் இல்லாத நேரத்திலும் தனது கெஸ்ட்களை மகிழ்விக்கும் விதமாக அவரே டிரைவராக மாறி ரோல்ஸ் காரை இயக்கியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Boby Drives Gold Wrapped Rolls Royce Phantom VII. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X